எழுத்தாளர் பிரபஞ்சன் இன்று காலை நம்மை விட்டுப் பிரிந்தார். எனது மூத்த சகோதரனை இழந்தது போல வேதனையில் கண்ணீர் விடுகிறேன்.பிரபஞ்சனின் தோழமையும் அன்பும் மறக்கமுடியாதது.
தமிழ் இலக்கியத்தில் சிறுதைகள். நாவல். கட்டுரைகள் என்று தனித்துவமிக்கப் படைப்பாளியாக ஒளிர்ந்தவர் பிரபஞ்சன்.
மூன்று மாதங்களுக்கும் மேலாக மருத்துவமனையில் தொடர்சிகிட்சை பெற்று வந்த அவரைக் காண குடும்பத்துடன் சென்றிருந்தேன். மருத்துவமனையின் தீவிர சிகிட்சைப்பிரிவில் இருந்த போதும் அவரது சிரிப்பும் உற்சாகமும் அப்படியே இருந்தது. மிகுந்த அன்புடன் பேசினார். தான் புதிதாக எழுத வேண்டிய படைப்பு பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார். நிச்சயம் பிரபஞ்சன் நலமடைந்துவிடுவார். மீண்டும் எழுத்துப்பணிக்கு திரும்புவார் என்று பெரும்நம்பிக்கை கொண்டிருந்தேன்.
காலம் அவரைப் பறித்துக் கொண்டுவிட்டது.
பிரபஞ்சனின் இறுதி நிகழ்வுகள் திங்கள்கிழமை நடைபெறும் என்று தெரிவிக்கிறார்கள்.
தற்போது அவரது உடல் மருத்துவமனையில் வைக்கபட்டிருக்கிறது.
அவரது மறைவிற்கு என் கண்ணீர் அஞ்சலி.