நாளை எனது நண்பர் பவா.செல்லத்துரை திருவண்ணாமலையில் உண்டாட்டு என்ற சிறப்பு நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளார்.
திருவண்ணாமலை எனது தாய்வீட்டினைப் போன்றது.
முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடரும் நட்பு. .
பவா வீடு தான் என்னையும் உருவாக்கியது. அவரது பெற்றோர்கள் காட்டிய அன்பு நிகரற்றது
பவா மற்றும் கருணா, சந்துரு தோழர். எஸ்.கே.பி.கருணா, ஷைலஜா, ஜெயஸ்ரீ ,உத்ரா, வம்சி, மானசி, சகானா, அம்மம்மா எனத் தோழமையின் துணையே என்னை வளர்த்தது.
எனது எல்லா சந்தோஷங்களும் திருவண்ணாமலையில் கொண்டாடப்பட்டவையே.
இம்முறை பவா தன் வீரிய அன்பால் அத்தனை பேரையும் ஒன்று திரட்டி பெரும் விருந்தும் பாராட்டும் தருகிறார்.
நண்பர்களுடன் நாளைப் பொழுது இனியதாக அமையவுள்ளது.
அனைவரும் இந்நிகழ்வில் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன்.
தமிழகத்தின் முக்கிய கலைஞர்கள் பலரும் நாளை திருவண்ணாமலை வருகிறார்கள்.
வாருங்கள் சேர்ந்து கொண்டாடுவோம்.


