admin

கிடைக்காத புத்தகங்கள்

புத்தகக் கண்காட்சிக்கென புதிய புத்தகங்கள் நிறைய வெளியாகியுள்ளன. நான் எப்போதும் கிடைக்காத அரிய நூல்களைத் தான் முதலில் தேடி வாங்குவேன். எனது சேமிப்பிலிருந்து காணாமல் போனவை. இரவல் கொடுத்துத் திரும்பி வராதவை எனப் பல அரிய நூல்களை மறுபடி வாசிக்கத் தேடிவருகிறேன். சிறந்த இந்த நூல்களை புத்தகக் கண்காட்சி அரங்கில் தேடிப் பாருங்கள். கிடைத்தால் அவசியம் வாசியுங்கள்.

கதாவிலாசம்

தமிழின் சிறந்த நூல்களைப் பிறமொழிகளுக்குக் கொண்டு செல்வதற்காகத் தமிழக அரசு புதிய திட்டத்தினை உருவாக்கியுள்ளது. தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம் சார்பில் நடைபெறும் இத்திட்டத்தில் சிறந்த தமிழ்ப் படைப்புகள் ஆங்கிலம் மற்றும் இந்திய மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்படுகின்றன. தமிழக அரசு இத்திட்டத்துக்குப் பத்து கோடி ரூபாய் நிதி ஒதுக்கியிருக்கிறது. பழைய பாடநூல்கள் மறுபதிப்பு, நாட்டுடைமை ஆக்கப்பட்ட அச்சில் இல்லாத நூல்களின் பதிப்பு, ஆங்கிலப் பதிப்பகங்களுடன் இணைந்து தமிழ் இலக்கிய ஆக்கங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பது போன்ற பணிகள் இத்திட்டத்தின் …

கதாவிலாசம் Read More »

மூன்று மௌனங்கள்

இந்த ஆண்டிற்கான ஆஸ்கார் விருது பட்டியலில் இடம்பெற்றுள்ள CODA என்ற திரைப்படத்தைப் பார்த்தேன். Sian Heder என்ற பெண் இயக்குநர் இயக்கியுள்ளார். CODA என்றால் காது கேளாத பெற்றோர்களுக்குப் பிறந்த குழந்தை என்று பொருளாம். (child of deaf adults) இப்படத்தின் கதாநாயகி ரூபி அப்படியான இளம்பெண். அவளைச் சுற்றியே கதை நிகழுகிறது. ரூபியின் அப்பா, அம்மா, அண்ணன் என மூவரும் காது கேளாதவர்கள். ரூபியின் அப்பா ஒரு மீனவர். தலைமுறையாக அவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு …

மூன்று மௌனங்கள் Read More »

நாதஸ்வரத்தின் பின்னால்

கோபாலகிருஷணன் கணேசன் சஞ்சாரம் நாவல் வாசித்து முடித்தேன். ஒவ்வொரு முறை எஸ். ரா வின் புத்தகத்தை வாசித்து முடிக்கும் போதும் மனதில் விட்டில் பூச்சிகள் அலைவதைப் போல நினைவுகளும் வலிகளும் அலையத் துவங்கிவிடுகிறது. திடீரென்று எனது ஊரில் யாராவது நாதஸ்வரம் வாசித்திருக்கிறார்களா? என்று யோசித்துப் பார்த்தேன். கோவில் கொடையில் நாயனம் வாசித்தது நினைவிற்கு வந்தது. மற்றபடி எங்கள் ஊர் முருகன் கோவிலில் அன்றாடம் சிறிது நேரம் ஒருவர் நாயனம் வாசிப்பது வழக்கம். அதைத்தவிர வேறு எதுவும் நாதஸ்வரம் …

நாதஸ்வரத்தின் பின்னால் Read More »

வேம்பலையும் இன்றைய உலகச் சவால்களும்

”நெடுங்குருதி” பற்றிய பார்வை சுரேஷ் பாபு நெடுங்குருதி நாவலைப் பற்றி எழுத நினைக்கும்போது The Origins of Political Order எழுதிய Francis Fukuyama இந்தியா மற்றும் சீனாவைப் பற்றிச் சொன்ன ஒரு கருத்து நினைவுக்கு வருகிறது. சீனாவின் சர்வாதிகாரமோ அல்லது இந்தியாவின் ஜனநாயகமோ திடீரென இன்று உருவாவனதில்லை, மாறாக இந்த இயல்புகள் பல நூற்றாண்டுகளாக இப்படித்தான் நீடிக்கின்றன, பல ஆட்சியாளர்கள் மாறியபோதும் இந்த நாடுகள் அவற்றின் ஆதார குணம் மாறாமல் தான் இருக்கின்றன. Three Gorges …

வேம்பலையும் இன்றைய உலகச் சவால்களும் Read More »

ஐந்து வருட மௌனம்

கடந்த இரண்டு ஆண்டுகளில் நான் எழுதிய 32 சிறுகதைகளின் தொகுப்பு. 404 பக்கங்கள் இதிலுள்ள பஷீரின் திருடன் குறுங்கதை மலையாளத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. மொழிபெயர்ப்பு செய்தவர் எழுத்தாளர் ஷாஜி. ஐந்து வருட மௌனம் சிறுகதை தெலுங்கில் வெளியாகியுள்ளது. வங்காளத்தில் வெளியாகவுள்ளது. தேவகியின் தேர்,இரண்டு ஜப்பானியர்கள், வெயிலில் அமர்தல் சிறுகதைகள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன கடைசிக் குதிரைவண்டி சிறுகதை குறும்படமாக உருவாகி வருகிறது. அஸ்வின்குமார் என்ற இளம் இயக்குநர் இதனை உருவாக்குகிறார்.

காலத்தின் சிற்றலை

உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர்களான பியோதர் தஸ்தாயெவ்ஸ்கி ,கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ், ஐரின் நெமிரோவ்ஸ்கி, பா ஜின், பில்லி காலின்ஸ், ஆலன் ஆல்பெர்க் ,ரெட் பைன், லி போ, கென்ஸாபுரோ ஒயி, வில்லியம் சரோயன் ,ஹெலன் ஹான்ஃப், அன்னா ஸ்விர், யோசனோ அகிகோ, யாசுனாரி கவாபத்தா உள்ளிட்ட பல்வேறு இலக்கிய ஆளுமைகள் மற்றும் அவர்களின் முக்கிய படைப்புகள் குறித்த கட்டுரைகளின் தொகுப்பு.

திரையெங்கும் முகங்கள்

உலகப் புகழ்பெற்ற திரைப்படங்களான Christ Stopped at Eboli , A Special Day, Two women Two Half Times in Hell Bitter Rice Twenty-four Eyes Stromboli போன்ற திரைப்படங்களை உள்ளடக்கிய 70க்கும் மேற்பட்ட அயல்மொழிப்படங்கள் குறித்த அறிமுகக் கட்டுரைகளின் தொகுப்பு