admin

சாமுராய்கள் காத்திருக்கிறார்கள்

உலக சினிமா குறித்த கட்டுரைகளின் தொகுப்பான சாமுராய்கள் காத்திருக்கிறார்கள் நூலை தேசாந்திரி பதிப்பகம் மறுபதிப்பு செய்துள்ளது புத்தகக் கண்காட்சியில் இந்த நூல் வெளியாகிறது

சித்தார்த்தா நாவல்

நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான ஹெர்மன் ஹெஸ்ஸேயின் சித்தார்த்தா நாவலின் புதிய பதிப்பு ஒன்றை தேசாந்திரி பதிப்பகம் வெளியிடுகிறது இதற்காக அனுமதி அளித்த கவிஞர் திருலோக சீதாராம் குடும்பத்தினருக்கு மனம் நிறைந்த நன்றி

டான்டூனின் கேமிரா ஆங்கிலத்தில்

சிறார்களுக்காக நான் எழுதிய டான்டூனின் கேமிரா நூலை கவிஞர் சசிகலா பாபு மற்றும் மேகலா உதயசங்கர் இணைந்துஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திருக்கிறார்கள். தேசாந்திரி பதிப்பகம் இதனை வெளியிடுகிறது. புத்தகக் கண்காட்சியில் இந்நூல் வெளியாகிறது.

எனக்குப் பிடித்த கதைகள்- 37

சீனாவின் புகழ்பெற்ற எழுத்தாளர் லியு ஷின்-யு (Black Walls – Liu Xin Wu) எழுதிய கருப்புச் சுவர்கள் சிறுகதை இருபதுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டிருக்கிறது. தனிநபரின் விருப்பமும் பொதுப்புத்தியும் கொள்ளும் மோதல் ஒரு குறியீடு போலவே இக்கதையில் சித்தரிக்கபடுகிறது. மிகச்சிறந்த கதை. இந்தக் கதையைச் சீனாவில் குறும்படமாகவும் எடுத்திருக்கிறார்கள் •• கருப்புச் சுவர்கள் லியு ஷின்-யு தமிழாக்கம்: தி.இரா.மீனா •••• கோடைகாலம். ஒரு ஞாயிற்றுக் கிழமை ஒரு சந்து. அங்கு ஒரு வீட்டோடு சேர்ந்த …

எனக்குப் பிடித்த கதைகள்- 37 Read More »

ஆங்கிலத்தில்

எனது மலைப்பாம்பின் கண்கள் சிறுகதையை டாக்டர் சந்திரமௌலி ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திருக்கிறார். அந்தக் கதை borderlessjournal என்ற இணைய இதழில் வெளியாகியுள்ளது இணைப்பு

தேசாந்திரி அரங்கு எண்

சென்னை நந்தனத்தில் நடைபெறுகிற 45வது புத்தகக் கண்காட்சியில் தேசாந்திரி பதிப்பகம் அரங்கு அமைத்துள்ளது அரங்கு எண் 317 மற்றும் 318 ஐந்தாவது நுழைவாயில் வழியே வந்தால் அரங்கினைக் காணலாம். எல்லா நாட்களும் புத்தகக் கண்காட்சிக்கு வருவேன். சந்திக்க விரும்புகிறவர்கள் தேசாந்திரி பதிப்பகத்தின் அரங்கில் என்னைச் சந்திக்கலாம். எனது நூல்கள் யாவும் தேசாந்திரியில் கிடைக்கின்றன.

புத்தகங்களின் மீதான ஆசை

The Groaning Shelf and other instances of book love என்ற புத்தகத்தைப் படித்தேன். பிரதீப் செபாஸ்ட்டியன் எழுதியது. புத்தகப்புழுவாகத் தன்னை அறிமுகம் செய்து கொள்ளும் பிரதீப் தனது சேமிப்பிலுள்ள புத்தகங்களை எப்படிக் கையாளுகிறார். அரிய நூல்கள் வாங்கும் ஆசை உருவான விதம். மற்றும் தன்னைப் போன்ற புத்தக நேசர்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதைச் சுவைபட எழுதியிருக்கிறார். நீண்ட கால வாசிப்பு மற்றும் தீராத புத்தக் காதலே இந்தக் கட்டுரைகளின் அடிநாதம். தீவிரமாக புத்தகங்களைச் சேகரித்துப் …

புத்தகங்களின் மீதான ஆசை Read More »

பாலம் வாசகர் சந்திப்பு

சேலத்தில் இயங்கி வரும் பாலம் புத்தகக் கடை சார்பில் ஏற்பாடு செய்யப்படும் பாலம் வாசகர் சந்திப்பு 400 கூட்டங்களைக் கடந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வில் பிப்ரவரி 12 சனிக்கிழமை மாலை 7 மணிக்கு எனது மண்டியிடுங்கள் தந்தையே நாவல் குறித்த அறிமுகக் கூட்டம் நடைபெறவுள்ளது. இணையவழியாக நடைபெறும் இந்த நிகழ்வில் வெ.திருப்புகழ் ஐஏஎஸ் அவர்கள் நாவல் குறித்து உரை நிகழ்த்துகிறார். இதில் நானும் கலந்து கொள்கிறேன். முகநூல் நேரலையில் இந் நிகழ்வினைக் காணலாம்.

நினைவுகளின் வழியே

டிசம்பர் 1943 இல் நாஜி ராணுவத்தால் நிகழ்த்தப்பட்ட “கலாவ்ரிட்டா படுகொலை” எனப்படும் கிரேக்கப் படுகொலை நிகழ்வினை மையமாக் கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படம் Echoes of the Past. 2021ல் வெளியான இப்படம் கற்பனையான சித்தரிப்புகளுடன் இந்த உண்மை சம்பவத்தை விவரிக்கிறது. படத்தின் துவக்கக் காட்சியில் கலாவ்ரிட்டா படுகொலை நிகழ்விற்கான இழப்பீடு கேட்டு சட்டப்பூர்வமான நடவடிக்கையை இன்றைய கிரேக்க அரசாங்கம் துவங்குகிறது. அன்றிருந்த ஜெர்மன் இப்போது இல்லை. இது புதிய நாடு. புதிய அரசு ஆகவே நாஜி ராணுவத்தின் …

நினைவுகளின் வழியே Read More »

45 வது புத்தகக் காட்சி

சென்னை நந்தனத்தில் 45 வது புத்தகக் காட்சி பிப்ரவரி 16 முதல் மார்ச் 6 வரை நடைபெறவுள்ளது. காலை 11 முதல் இரவு 8 மணி வரை கண்காட்சி நடைபெறும் என பபாசி அறிவித்துள்ளது. தேசாந்திரி பதிப்பகம் இந்தக் கண்காட்சியில் பங்குபெறுகிறது. தேசாந்திரி பதிப்பகத்தின் அரங்கில் எனது நூல்கள் யாவும் கிடைக்கும்.