admin

தஸ்தாயெவ்ஸ்கியுடன் ஒரு இரவு

1.1. 2020, புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பியோதர் தஸ்தாயெவ்ஸ்கியைப் பற்றி உரை நிகழ்த்த இருக்கிறேன். புத்தாண்டில்  தஸ்தாயெவ்ஸ்கியைப் பற்றிப் பேசுவது மகிழ்ச்சி தரக்கூடியது. தஸ்தாயெவ்ஸ்கியைப் பற்றி முன்னதாக மூன்று  உரைகள் பேசியிருக்கிறேன். மூன்றும் விரிவான உரைகள்.  அதன் காணொளியை ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள்  பார்த்திருக்கிறார்கள். தஸ்தாயெவ்ஸ்கியின் நாட்குறிப்புகளை நூல்வனம் வெளியிட்டிருக்கிறது. தமிழில் மொழியாக்கம் செய்திருப்பவர் சா.தேவதாஸ். இதற்கான அறிமுகக் கூட்டத்தை நூல்வனம் ஏற்பாடு செய்துள்ளது தஸ்தாயெவ்ஸ்கியின்  வெண்ணிற இரவுகள், சைபீரிய சிறைச்சாலை இரவுகள், சூதாடுவதற்காக பேடன் பேடனில் காத்திருந்த …

தஸ்தாயெவ்ஸ்கியுடன் ஒரு இரவு Read More »

நன்றி

நேற்று எனது புத்தக வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. அரங்கில் நிறைய இளைஞர்களைக் காண முடிந்தது மகிழ்ச்சியாக இருந்தது. நிகழ்விற்கு வந்து சிறப்பித்த அனைவருக்கும் நன்றி. புத்தகங்களை மிகச்சிறப்பாக அச்சிட்டு உதவிய மணிகண்டனுக்கும். வடிவமைத்த ஹரி பிரசாத், குரு, முன்னோட்ட வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுத்த கபிலா காமராஜ், அலுவலக மேலாளர் அன்பு கரண், நிகழ்விற்குத் துணை செய்த விக்கி, ஓவியர் பிள்ளை, தென்றல் சிவக்குமார் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி நிகழ்வை ஒளிப்பதிவு செய்து இணையத்தில் பகிர்ந்த ஸ்ருதி டிவி கபிலனுக்கும். ரஷ்யக் கலாச்சார மையத்தின் தங்கப்பன் அவர்களுக்கும், பத்திரிக்கை, இணையம் மற்றும் …

நன்றி Read More »

காந்தியின் நிழலில்.

மாலதி செந்தூர் தெலுங்கு மொழியின் புகழ்பெற்ற எழுத்தாளர். இவரது இதய நேத்ரி என்ற நாவல் தமிழில் இதய விழிகள் என்று மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இதனைச் சாகித்திய அகாதெமி வெளியிட்டிருக்கிறது காந்தி யுகத்தை இத்தனை துல்லியமாக இதுவரை எந்த நாவலும் சித்தரித்ததில்லை. மிகவும் யதார்த்தமாக எழுதப்பட்ட நாவல். நேரடியாகவே கதை சொல்லப்படுகிறது. பல்வேறு அரசியல் செய்திகள் உரையாடலின் வழியே வெளிப்படுகின்றன. காந்தியின் தாக்கம் ஆந்திர மக்களிடம் எவ்வாறு இருந்தது என்பதை நாவல் அழுத்தமாக விவரிக்கிறது. பால்ய விவாகத்திற்கு எதிரான …

காந்தியின் நிழலில். Read More »

மித்ராவின் குற்றச்சாட்டுகள்.

கிருஷ்ணா ஸோப்தி ஞானபீடம் விருது பெற்ற இந்தி மொழி எழுத்தாளர். இவரது மித்ரோ மராஜனி என்ற நாவல் தமிழில் மித்ராவந்தி என வெளியாகியுள்ளது. நேஷனல் புக் டிரஸ்ட் இதை வெளியிட்டிருக்கிறார்கள். பெண்ணின் காமத்தையும் கூட்டுக்குடும்பத்தில் பெண் நடத்தப்படும் விதம் பற்றியும் மித்ராவந்தியில் ஸோப்தி சிறப்பாக எழுதியிருக்கிறார். மித்ராவந்தி என்ற பெண்ணின் கதாபாத்திரம் போல இந்திய இலக்கியத்தில் எவரும் ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கியதில்லை. அவள் வெளிப்படையாகத் தனது உடலின் வேட்கைகளை, காமத்தூண்டுதல்களைப் பேசுகிறாள். மற்றவர்கள் ரகசியமாக இன்பங்களை அடைந்து …

மித்ராவின் குற்றச்சாட்டுகள். Read More »

ஆவியின் பாடல்

டிசம்பர் இசைக்கச்சேரிகளில் எனக்குப் பிடித்தமான சில கச்சேரிகளுக்குச் செல்வது வழக்கம். என் மனைவி பெரும்பான்மை கச்சேரிகளுக்குப் போய் விடுவார். நாங்கள் நேற்று அருணா சாய்ராம் அவர்களின் கச்சேரி கேட்பதற்காகக் காமராஜர் அரங்கம் சென்றிருந்தோம். சென்னையில் திருவையாறு நிகழ்ச்சி அங்கே நடைபெறுகிறது. அரங்கினுள் நுழைய முடியாதபடி பெருந்திரளான கூட்டம். முன்பதிவு செய்திருந்த இருக்கைக்குப் போக முடியவில்லை. ஒரே தள்ளுமுள்ளு. நிகழ்ச்சியை நடத்தும் லட்சுமண் ஸ்ருதியினர் ஒழுங்காக எந்த ஏற்பாடும் செய்யவில்லை. நுழைவாயிலில் நின்ற காவலர்கள் ஆட்களைப் பிடித்துத் தள்ளிவிடவே …

ஆவியின் பாடல் Read More »

ஆங்கில நூல்கள்

டிசம்பர் 25 மாலை ரஷ்யக்கலாச்சார மையத்தில் நடைபெறும் எனது புத்தக வெளியீட்டு விழாவில்  மூன்று நூல்களின் ஆங்கில மொழியாக்கம் வெளியாகின்றன •• உறுபசி நாவலை பேராசிரியர் வெங்கடாசலம் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திருக்கிறார் தேர்வு செய்யப்பட்ட 20 சிறுகதைகளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திருக்கிறார் பேராசிரியர்  P. ராம்கோபால் கிறுகிறுவானம் என்ற சிறார் நூலை மொழியாக்கம் செய்திருப்பவர் G. கீதா. மூன்று மொழிபெயர்ப்பாளர்களுக்கும் மனம் நிரம்பிய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் •• 22.12.2019

செகாவ் குறும்படம்

என் மகன் ஹரி பிரசாத் இயக்கியுள்ள குறும்படமான மைடியர் செகாவ் புத்தாண்டு தினத்தன்று வெளியிடப்படுகிறது. தேசாந்திரி youtube சேனலில் இப்படத்தைக் காணலாம். https://www.youtube.com/channel/UCgR7-JP41pV_beUBAYjzNMg **

உடலில் தோன்றும் மலர்கள்.

She was off like a bird, bullet, or arrow, impelled by what desire, shot by whom, at what directed, who could say? – Virginia Woolf ** Vita and Virginia என்ற திரைப்படத்தைப் பார்த்தேன். ஆங்கில நாவலாசிரியை வர்ஜீனியா வுல்ஃப் (Virginia Woolf,) குறித்த திரைப்படமது. வர்ஜீனியா வுல்ஃப்பை பற்றி நினைக்கும் போதெல்லாம் ஏனோ மனதில் லியோ டால்ஸ்டாயின் அன்னாகரீனினா பிம்பம் வந்து போகிறது. வர்ஜீனியா வுல்ஃப்பின் …

உடலில் தோன்றும் மலர்கள். Read More »