admin

சென்னையும் நானும் – 5

சென்னையைப் பற்றிய எனது நினைவுகளின் காணொளித் தொடரின் ஐந்தாம் பாகம் வெளியாகியுள்ளது. தேசாந்திரி யூடியூப் சேனலில் இதைக் காணலாம். இந்தத் தொடரை உருவாக்கி வருவது எனது மகன் ஹரிபிரசாத். ஒற்றை ஆளாக இந்த முயற்சியை முன்னெடுக்கிறான். இந்த உரைகளைக் கேட்கும் நண்பர்கள் உங்கள் கருத்துகளை அதில் பதிவு செய்யவும். அது ஹரி மேலும் உத்வேகமாகச் செயல்பட உதவும். இந்தக் காணொளித் தொடரை புதிய வாசகர்கள், நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள். “Chennaiyum Nanum” – 5 https://youtu.be/YFaciBTqOBY

அழைப்பிதழ்

டிசம்பர் 25 மாலை ஆறுமணிக்கு சென்னை ரஷ்யக் கலாச்சார மையத்தில் நடைபெறவுள்ள எனது ஏழு புதிய நூல்களின் வெளியீட்டு விழாவிற்கான அழைப்பிதழ் அனைவரும் நிகழ்வில் பங்குபெற்று சிறப்பிக்க வேண்டுகிறேன் இந்த நிகழ்வில் எனது யாமம் நாவலின் மலையாளம் மற்றும் தெலுங்கு மொழியாக்கங்கள் வெளியாகின்றன. உறுபசி நாவல், எனது சிறுகதைகளின் தொகுப்பு, கிறுகிறுவானம் ஆகியவற்றின் ஆங்கில மொழியாக்கமும் வெளியாகின்றன. • 19.12.2019

வாழ்த்துகள்

2019 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருது கோவில்பட்டியை சேர்ந்த எழுத்தாளர் சோ.தர்மனுக்கு சூல் நாவலுக்காக வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துகள்

முட்டாளின் மூன்று தலைகள்

ஒவ்வொரு ஆண்டும் சிறார்களுக்காக ஒரு நூலை எழுதுவது எனது வழக்கம். இந்த ஆண்டு முட்டாளின் மூன்று தலைகள் என்ற சிறார் நூலை எழுதியிருக்கிறேன். முட்டாள்கள் மட்டுமே வசிக்கும் ஒரு ஊரை மையமாக் கொண்டு இக்கதை எழுதப்பட்டுள்ளது. அந்த ஊரில் தினம் ஒரு புதுச்சட்டம் கொண்டு வருகிறார்கள். இதனால் மக்கள் எவ்வாறு அவதிப்படுகிறார்கள் என்பதே கதையின் மையம். டிசம்பர் 25 மாலை ரஷ்யக் கலாச்சார மையத்தில் இந்நூல் வெளியிடப்படுகிறது.

போயர்பாக் கண்டறிந்த மழைக்கோவில்

டிசம்பர் 25 மாலை வெளியாகும் எனது புதிய சிறுகதைத் தொகுப்பு. இந்தத் தொகுப்பில் பதினைந்து சிறுகதைகள் உள்ளன.  இக்கதைகள் காலச்சுவடு, ஆனந்த விகடன், அந்திமழை, தினமணி மலர், தி இந்து மலர்  மற்றும் இணைய இதழில் வெளியானவை .18.12.2019

குரங்கு வளர்க்கும் பெண்

லியோனார்டு மைக்கேல்ஸ் என்ற அமெரிக்கச் சிறுகதையாசிரியர் எழுதிய குரங்கு வளர்க்கும் பெண் சிறுகதையைக் கவிஞர் க. மோகனரங்கன் மிகச்சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார். தமிழினி வெளியிட்டுள்ள மொழிபெயர்ப்பு கதைகளின் தொகுப்பாகிய குரங்கு வளர்க்கும் பெண் சென்ற ஆண்டு வெளியானது. மிகச் செறிவாக மொழிபெயர்ப்புச் செய்யப்பட்ட சிறுகதைகள் கொண்ட தொகுப்பிது. குரங்கு வளர்க்கும் பெண் கதையில் பியர்டு என்பவன் இங்கர் என்ற விலைப்பெண்ணை ஜெர்மனியில் சந்திக்கிறான். அவள் மீது தீராத ஆசை கொள்கிறான். அவளோ பியர்டினை இன்னொரு வாடிக்கையாளன் போலவே நடத்துகிறாள். …

குரங்கு வளர்க்கும் பெண் Read More »

கால்வினோ உரை

டிசம்பர் 25 மாலை எனது புத்தக வெளியீட்டின் போது இதாலோ கால்வினோ குறித்து சிறப்புரை நிகழ்த்த திட்டமிட்டிருந்தேன். கால அவகாசம் குறைவாக உள்ளதால்  அதைத் தனிநிகழ்வாக பிப்ரவரி முதல்  வாரம் நிகழ்த்த முடிவு செய்துள்ளேன். இதாலோ கால்வினோவின் எழுத்துமுறை, மற்றும் அவரது முக்கிய நாவல்கள். கட்டுரைகள் குறித்த உரையாக அதை அமைத்துக் கொள்ளவே எண்ணுகிறேன்.  இதற்காக மறுபடியும் அவரது படைப்புகளை முழுமையாக வாசிக்க வேண்டும். ஆகவே கால அவகாசம் தேவைப்படுகிறது டிசம்பர் 25ல் எனது ஏழு புதிய …

கால்வினோ உரை Read More »

கவிஞனும் காவல்துறையும்

பிரிட்டிஷ் அரசின் பார்வையில் பாரதி என்றொரு அரிய நூலை பாரதியியல் அறிஞர் சீனி.விசுவநாதன் வெளியிட்டிருக்கிறார். இது பாரதியாரைப் பற்றிய காவல்துறையின் ரகசிய அறிக்கைகளைக் கொண்டிருக்கிறது. இந்த அறிக்கைகள் மற்றும் குறிப்புகளைக் கி.அ.சச்சிதானந்தம் மற்றும் இரா. சுப்பராயலு இருவரும் இணைந்து மொழியாக்கம் செய்திருக்கிறார்கள் பாரதியை எப்படியெல்லாம் பிரிட்டிஷ் அரசின் காவல்துறைக் கண்காணித்தது, தொந்தரவு செய்தது என்பதற்கு இந்நூல் நேரடி சாட்சியமாகும். இந்தப் பெரும்பணியைச் செய்த சீனி.விசுவநாதன் மிகுந்த பாராட்டிற்குரியவர். இந்தியச் சுதந்திரப் போரில் எத்தனையோ கவிஞர்கள், எழுத்தாளர்கள் பங்கு …

கவிஞனும் காவல்துறையும் Read More »