பாரதி விழாவில்
டிசம்பர் 11 அன்று எட்டயபுரத்தில் நடைபெற்ற பாரதி விழாவில் கலந்து கொண்டேன். காலை பாரதியார் இல்லத்தில் அஞ்சலி செலுத்தினேன். பாரதி இல்லத்திலிருந்து நினைவு மண்டபம் வரை ஊர்வலம் சென்றது. நிறையப் பள்ளி கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டார்கள். பாரதி மண்டபத்தில் நடைபெற்ற பாரதி தரிசனம் என்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றினேன். பாரதி அன்பர்கள் பலரும் வெளியூர்களிலிருந்து வந்திருந்தார்கள். எழுத்தாளர் பொன்னீலன் நிகழ்விற்கு வந்திருந்தார். அவரைச் சந்தித்து உரையாடினேன். பொன்னீலனுடன் எழுத்தாளர் ராம் தங்கம் உடன் வந்திருந்தார். …