admin

டோல்கீன் உருவாகிறார்.

டோல்கீன் எழுதிய த லார்ட் ஆப் த ரிங்ஸ் (The Lord of the Rings) நாவல் 56 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. 250 மில்லியன் பிரதிகள் விற்றுச் சாதனை செய்திருக்கிறது.. கனடாவில்  டோல்கீனின்  பெயரில் ஒரு வீதியிருக்கிறது. விசித்திரப் புனைவெழுத்தின்   சாதனை நாயகராகவே டோல்கீன் கருதப்படுகிறார். 1993ல் சென்னையிலுள்ள அமெரிக்கன் சென்டர் நூலகத்தில் ஒரு நாள் கவிஞர் பிரமீளைச் சந்தித்த போது அவர் The Lord of the Rings நாவலைப் பற்றிச் சொல்லி டோல்கீனைப் …

டோல்கீன் உருவாகிறார். Read More »

சர்ச்சிலின் சினிமா

“சர்ச்சில் அண்ட் தி மூவி மொகல்” என்ற ஆவணப்படத்தைப் பார்த்தேன். பிரிட்டீஷ் இயக்குநரான அலெக்சாண்டர் கோர்டாவிற்கும் சர்ச்சிலுக்குமான நட்பையும், சினிமாவின் மீது வின்ஸ்டன் சர்ச்சிலுக்கு இருந்த ஆசையையும்விவரிக்கிறது இந்த ஆவணப்படம் . ஹங்கேரியிலிருந்து இங்கிலாந்திற்குக் குடியேறிய யூதக்குடும்பத்தைச் சார்ந்தவர் அலெக்ஸாண்டர் கோர்டா. பிரிட்டீஷ் திரையுலகில் The Thief of Baghdad , The Third Man போன்ற குறிப்பிடத்தக்க திரைப்படங்களை உருவாக்கினார். இங்கிலாந்தின் தேசபக்தியை உயர்த்திப் பிடித்தவர் என்றே இவரைத் திரையுலகம் குறிப்பிடுகிறது. ஜான் ஃப்ளீட் தயாரித்துள்ள …

சர்ச்சிலின் சினிமா Read More »

மெலோவின் கவிதைகள்

ஒரு படைப்பாளியாக எனக்கு கவிதைகளின் வழியே தான் அதிகத் தூண்டுதல் கிடைக்கிறது. நான் கவிதைகளைக் கொண்டாடுகிறவன் . சமகால உலகக் கவிதை நூல்களைத் தேடித்தேடி வாசித்திருக்கிறேன். தமிழின் நவீன கவிதை மீதும் தனித்த ஈடுபாடு உண்டு. கடந்த வாரம் ஜோசோ கப்ரால் டி மெலோ நெட்டோ,( João Cabral de Melo Neto) என்ற ஒரு பிரேசிலிய கவிஞரின் Education by Stone என்ற கவிதைத் தொகுப்பினை வாசித்தேன். இது அவரது ஐந்து கவிதைத் தொகுப்புகளிலிருந்து தேர்வு …

மெலோவின் கவிதைகள் Read More »

அமைதியின் அடையாளம்.

ருமேனிய இயக்குனர் ஹோராட்டியு மலேலின் (Horațiu Mălăele) புதிய படம் Silent Wedding. அட்ரியன் லுஸ்டிக் மற்றும் ஹோராட்டியு மலேலே ஆகியோர் இணைந்து திரைக்கதை எழுதியிருக்கிறார்கள். ருமேனியாவின் ஒரு சிறிய கிராமத்தில் 1953ல் நடந்த ஒரு உண்மையான கதையை அடிப்படையாகக் கொண்டு படம் உருவாக்கபட்டிருக்கிறது. ருமேனிய கிராமம் ஒன்றை நோக்கித் தொலைக்காட்சி குழுவினர் வருகிறார்கள். அந்த ஊரில் வயதான பெண்கள் மட்டுமே வசிக்கிறார்கள், ஏதோ ஒரு அமானுஷ்ய நிகழ்வு நடந்து முடிந்துள்ளது என்பதைப் போலிருக்கிறது. கைவிடப்பட்ட ஊராக உள்ள …

அமைதியின் அடையாளம். Read More »

காந்தியின் வழியில்

அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியன்று சென்னை தக்கர் பாபா வித்யாலயாவில்  காந்தியின் வழியில் என்ற தலைப்பில் உரையாற்றினேன். அரங்கு நிரம்பிய கூட்டம். நிறைய இளைஞர்கள். நிகழ்வைச் சிறப்பாக ஏற்பாடு செய்த காந்தி கல்வி மையத்திற்கும், அண்ணாமலை,  சரவணன், சுபாஷிணி, மோகன், பிரேமா அண்ணாமலை, விப்ர நாராயணன் , மாருதி உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி.   நிகழ்வைப் பதிவு செய்து ஒளிபரப்பிய ஸ்ருதி டிவிக்கும், கபிலன் மற்றும் சுரேஷிற்கு அன்பும் நன்றியும். நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்த இயக்குனர் வசந்தபாலன்,  …

காந்தியின் வழியில் Read More »

அஞ்சலி

எழுத்தாளர் கி.ராஜநாராயணனின் மனைவி கணவதி அம்மாள் இன்று புதுச்சேரியில் காலமானார். அவரது மறைவிற்கு என் கண்ணீர் அஞ்சலிகள். கி.ராவிற்கு உற்றதுணையாக இருந்தவர் கணவதி. கடந்தவாரம் கி.ரா வீட்டிற்குப் போயிருந்த போது உடல்நலமற்றிருந்த கணவதி அம்மாவைச் சந்திதேன். படுக்கையில் தானிருந்தார். நினைவு தப்பியிருந்தது. அவரது உடல் நலம் குறித்த கவலையும் வேதனையும் கி.ரா முகத்தில் படிந்திருந்ததைக் காணமுடிந்தது. ஓர் எழுத்தாளன் உருவாவதற்கு அவனது குடும்பச் சூழல் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. வீட்டில் எழுதுவதற்கான சூழல் கிடைக்காத எழுத்தாளர்களே …

அஞ்சலி Read More »

காந்தி சிறப்புரை

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளையொட்டி இந்தியா முழுவதும் காந்தி குறித்த உரையாடல்கள், சொற்பொழிவுகள், பொது நிகழ்வுகள் நடந்து வருகின்றன. அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியன்று சென்னையிலுள்ள தக்கர்பாபா வித்யாலயாவில் காந்தியின் வழியில் என்ற தலைப்பில் உரை நிகழ்த்த இருக்கிறேன். அனைவரும் இந்நிகழ்வில் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன் பதிவு செய்த நாள் 24.09.2019

மியாசகியின் கம்பளிப்பூச்சி.

Never-Ending Man: Hayao Miyazaki என்ற ஆவணப்படத்தைப் பார்த்தேன். ஜப்பானிய அனிமேஷன் திரைப்பட இயக்குநர் மியாசகியின் வாழ்க்கை மற்றும் புதிய திரைப்படத்தின் தயாரிப்பு முயற்சிகள் குறித்த ஆவணப்படமிது. செப்டம்பர் 2013 இல், மியாசகி தனது முதுமை காரணமாகத் திரைப்படத் தயாரிப்பிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார், இந்த ஆவணப்படம் அவரது ஓய்வு குறித்த அறிவிப்பிலிருந்து துவங்குகிறது. உலக சினிமா வியந்து பார்க்கும் ஆளுமையான மியாசகி பத்திரிக்கையாளர் சந்திப்பில் உரையாற்றுகிறார். அதில் கையால் வரையப்பட்ட ஓவியங்களைக் கொண்டு உருவாக்கப்படும் அனிமேஷன் …

மியாசகியின் கம்பளிப்பூச்சி. Read More »

இந்து தமிழ் திசை நாளிதழில்

நேற்று புதுவையில் நடைபெற்ற கிரா -97 நிகழ்வை இந்து தமிழ் திசை நாளிதழ் விரிவாகப் பதிவு செய்துள்ளது. இந்து தமிழ் திசை ஆசிரியர் அசோகன், நடுப்பக்க ஆசிரியர் சமஸ், பத்திரிக்கையாளர்கள், புகைப்படக்கலைஞர்களுக்கு நன்றி.