பெருஞ்சுவரின் நிழல்
காணக் கிடைக்காத காட்சி என்பார்களே அது பிபிசி தயாரித்துள்ள – A Slow Odyssey: The Great Wall of China என்ற ஆவணப்படத்திற்குத் தான் பொருத்தமானது. வானில் பறந்தபடியே ஒட்டுமொத்த சீனப்பெருஞ்சுவரையும் கேமிரா வழியாக அங்குல அங்குலமாகக் காட்டுகிறார்கள். கூடவே சீனப்பெருஞ்சுவரின் வரலாற்றையும் விவரிக்கிறார்கள். அற்புதமான ஆவணப்படமிது. சீனப்பெருஞ்சுவரை எப்படிக் கட்டினார்கள் என்பதைப் பற்றி நிறையப் புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளன. ஆனால் இந்த ஒரு ஆவணப்படம் போதும் அதன் முழுமையை நமக்குக் காட்டிவிடுகிறது. சீனப்பெருஞ்சுவர் ஒரு மன்னரால் …