admin

கவிஞனின் நாட்குறிப்பு.

A.K.Ramanujan – Journeys – A Poet’s Diary என்ற புத்தகத்தை வாசித்தேன். இந்நூலைப் படிக்க வேண்டும் என்று விரும்பியதற்கு முதற்காரணம் ஏ.கே ராமானுஜன் சில காலம் மதுரையிலுள்ள தியாகராசர் கலைக்கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராக வேலை செய்திருக்கிறார் என்பதே. 1951ல் அவர் மதுரைக்கு வேலைக்கு வந்திருக்கிறார். 50களின் மதுரையைப் பற்றியும் தனது பணிக்கால அனுபவங்களையும் எழுதியிருக்கிறார் என்ற குறிப்பை ஆங்கில நாளிதழில் வாசித்தேன். அதுவே இந்நூலை வாசிக்கத் தூண்டியது. ஏ.கே ராமானுஜன் சிறந்த கவிஞர்.கட்டுரையாளர். நாட்டுப்புறவியல் ஆய்வாளர்.மொழிபெயர்ப்பாளர். …

கவிஞனின் நாட்குறிப்பு. Read More »

கனலி இணையதளம்

கனலி இணையதளத்தின் துவக்கவிழா சிறப்பாக நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு குட்டி இளவரசனுடன் ஒரு பயணம் என்ற தலைப்பில் உரையாற்றினேன்.  விக்னேஷ்வரன் மற்றும் நண்பர்களுக்கு நன்றி. நேற்று சித்துராஜ் பொன்ராஜ் முரகாமி பற்றி ஆற்றிய உரை மிகச்சிறப்பானது.  அழகிய புகைப்படங்களை எடுத்த பாலமுரளிக்கும் நிகழ்வை ஒளிப்பதிவு செய்த ஷ்ருதி டிவிக்கும்  நன்றி நண்பர் வேலூர் லிங்கன் நிகழ்விற்கு வந்திருந்தது கூடுதல் மகிழ்ச்சி. அவரது நேர்காணல் கனலியில் வெளியாகியுள்ளது.  அவசியம் வாசிக்கவும். எனது உரையின் காணொளி https://www.youtube.com/watch?v=H7I5mAvUKDg&feature=em-uploademail இணையதள …

கனலி இணையதளம் Read More »

தேசாந்திரி புதிய வெளியீடுகள்

தேசாந்திரி பதிப்பகம் மதுரைப் புத்தகத்திருவிழாவை முன்னிட்டு எனது நூல்களின் புதிய பதிப்பினை வெளியிட்டுள்ளது விலை: ரூ125 விலை: ரூ 125 மதுரைப் புத்தகக் கண்காட்சி தேசாந்திரி அரங்கு எண் 138ல் இப் புத்தகங்களைப் பெறலாம் ஆன்லைன் தளத்திலும் தேசாந்திரி பதிப்பகத்திலும் விற்பனைக்குக் கிடைக்கும். தொடர்பிற்கு : தேசாந்திரி பதிப்பகம் டி1, கங்கை குடியிருப்பு எண்பதடி சாலை, சாலிகிராமம், சென்னை-93 தொலைபேசி 044 23644947 அலைபேசி 9600034659 desanthiripathippagam@gmail.com https://www.desanthiri.com/

புதிய நாவல்

எனது புதிய நாவல் ஒரு சிறிய விடுமுறைக்கால காதல்கதை வெளியாகிவிட்டது. தேசாந்திரி பதிப்பகத்திலும் ஆன்லைன் விற்பனை தளத்திலும் இந்நூலைப் பெறலாம். மதுரைப் புத்தகக் கண்காட்சியில் தேசாந்திரி அரங்கு எண் 138ல் இந்நாவல் கிடைக்கும். விலை ரூ 200 ••• முதன் முதலாக காதல் நாவல் எழுதி இருக்கிறேன் குங்குமம் இதழில் வெளியான நேர்காணல் சந்திப்பு:  கதிர்வேலன் தமிழ் இலக்கிய உலகில் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு எப்போதும் தனி ராஜ்ஜியம்தான். மெலிதான கதை சொல்லல், தீவிர தத்துவ விசாரம், பேரன்பு என …

புதிய நாவல் Read More »

ஆர்வெலின் வாழ்க்கை

George Orwell: A Life in Pictures என்ற பிபிசி தயாரித்துள்ள ஆவணப்படத்தைப் பார்த்தேன். ஜார்ஜ் ஆர்வெல் இங்கிலாந்தின் புகழ்பெற்ற எழுத்தாளர்.  Big Brother is watching you என்ற இவரது வாசகம் கண்காணிப்பு அரசியல் குறித்த உரையாடல்களில்  சுட்டிக்காட்டப்படும் பிரபலமான மேற்கோளாகும். பிபிசி ஆவணப்படங்கள் பெரிதும் மரபான பாணியைக் கொண்டவை. ஆனால் இந்த ஆவணப்படம் அதிலிருந்து மாறுபட்ட விதத்தில் உருவாக்கபட்டிருக்கிறது.  ஆர்வெலின் ஆளுமையை முழுமையாக உணர்ந்து கொள்ளும் வண்ணம் உருவாக்கபட்டிருப்பது இதன் தனிச்சிறப்பு. ஆர்வெல் இந்தியாவில் …

ஆர்வெலின் வாழ்க்கை Read More »

பரிபூர்ண மனம் மீதான பாடல்கள்

கவிஞர் ஷங்கர் ராமசுப்ரமணியன் தனது வலைப்பக்கத்தில் ஷின் ஷின் மிங் எனப்படும் ஜென் கவிதைகளை மொழியாக்கம் செய்திருக்கிறார். சிறப்பான மொழியாக்கமது. ** பரிபூர்ண மனம் மீதான பாடல்கள் தமிழில் : ஷங்கர்ராமசுப்ரமணியன் ஷின் ஷின் மிங் என்னும் இந்தப் பாடல், ஜென் குருவான சோசன் அவர்களால் ஆறாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. ஜென்னின் தெளிவான அனைத்துக் கருத்துகளையும் உள்ளடக்கிய அறிக்கையாக இது கருதப்படுகிறது. ஷின் ஷின் மிங்-க்கு “பரிபூர்ண மனம் மீதான பாடல்கள்” என்று இதன் ஆங்கில மொழிபெயர்ப்பாளர் …

பரிபூர்ண மனம் மீதான பாடல்கள் Read More »

தொடரும் பயணம்.

1862ல் தஸ்தாயெவ்ஸ்கி ஐரோப்பியப் பயணம் ஒன்றை மேற்கொண்டார். பீட்டர்ஸ்பெர்க்கில் கிளம்பி பெர்லின், பெல்ஜியம், சுவிட்சர்லாந்து, பாரீஸ், லண்டன் என நீண்டது அப்பயணம். இரண்டரை மாத காலப் பயணமது. இந்தப் பயணத்தின் வழியாக ஐரோப்பியப் பண்பாடு மற்றும் சமூக நிலையைப் பற்றித் தஸ்தாயெவ்ஸ்கி அறிந்து கொண்டார். Winter Notes on Summer Impressions என இந்தப் பயணத்தைப் பற்றிச் சிறிய நூல் ஒன்றையும் தஸ்தாயெவ்ஸ்கி எழுதியிருக்கிறார். அதே பயணத்தைத் தற்போது தஸ்தாயெவ்ஸ்கியின் கொள்ளுப்பேரன் டிமிட்ரி மீண்டும் நிகழ்த்தியிருக்கிறார். அதை …

தொடரும் பயணம். Read More »

குட்டி இளவரசனுடன் ஒரு பயணம்.

ஆகஸ்ட் 31 ம் தேதி மாலை கவிக்கோ மன்றத்தில் நடைபெற இருக்கும் கனலி கலை இலக்கிய இணையதளம் தொடக்க விழாவில் கலந்து கொண்டு  உரையாற்றுகிறேன் தலைப்பு  : குட்டி இளவரசனுடன் ஒரு பயணம். ( ஃபிரெஞ்ச் எழுத்தாளர் அந்துவாந்த் செந்த் எக்ச்பெரியின் வாழ்க்கை மற்றும் எழுத்து குறித்த உரை ) •• 24.8.2019

கசாக்கின் நினைவில்.

சமீபத்தில் கேரளா சென்றிருந்த போது பாலக்காட்டினை அடுத்துள்ள தர்ஸக் கிராமத்தில் உருவாக்கப்பட்டுள்ள எழுத்தாளர் ஒ.வி. விஜயன் நினைவகத்திற்குச் சென்றிருந்தேன். சின்னஞ்சிறிய பசுமையான கிராமம். அந்த ஊரினை மையமாகக் கொண்டு தான் விஜயன் தனது புகழ்பெற்ற கசாக்கின் இதிகாசம் நாவலை எழுதியிருக்கிறார். அந்த நினைவைக் கொண்டாடும் விதத்தில் நாவலின் முக்கியக் கதாபாத்திரங்களைச் சிற்பங்களாகவும் ஒவியமாகவும் உருவாக்கி வைத்திருக்கிறார்கள். ஊரின் நுழைவாயிலில் வழியம்பலம் என நாவலில் ரவி வந்து இறங்குமிடம் அழகான வளைவு கொண்டதாக உருவாக்கப்பட்டிருக்கிறது மலையாள இலக்கியத்தின் தனிப்பெரும் …

கசாக்கின் நினைவில். Read More »

ரகசியத்தின் தோட்டம்.

ஷங்கர் ராமசுப்ரமணியனின் புதிய கவிதைத்தொகுப்பு கல் முதலை ஆமைகள் க்ரியா பதிப்பக வெளியீடாக வந்துள்ளது. சமீபத்தில் நான் வாசித்த மிகச்சிறந்த கவிதைத் தொகுப்பு இதுவென்பேன்.. சமகால உலகக் கவிதைகளின் வரிசையில் வைத்துக் கொண்டாட வேண்டிய தொகுப்பிது.. 110 பக்கங்கள் கொண்ட சிறிய கவிதைநூல். மூன்று நாட்களாகக் கையில் வைத்து வைத்துப் படித்துக் கொண்டேயிருக்கிறேன். அற்புதம், அற்புதம் என மனம் அரற்றிக் கொண்டேயிருக்கிறது. ஒரு கவிஞனாக ஷங்கர் ராம சுப்ரமணியன் தனது கவித்துவ உச்சத்தைத் தொட்டிருக்கிறார்.. பாஷோவின், ழாக் …

ரகசியத்தின் தோட்டம். Read More »