அந்திமழையில்
இம்மாத அந்திமழை இதழில் இலக்கிய அமைப்புகள் குறித்து கட்டுரை எழுதியிருக்கிறேன் 02.02.2020
இம்மாத அந்திமழை இதழில் இலக்கிய அமைப்புகள் குறித்து கட்டுரை எழுதியிருக்கிறேன் 02.02.2020
எனது புதிய சிறுகதை தண்ணீரின் திறவுகோல் இம்மாத காலச்சுவடு இதழில் வெளியாகியுள்ளது. 02.01.2020
எனது யாமம் நாவலின் மலையாள மொழியாக்கம் வெளியாகியுள்ளது. இதன் வெளியீட்டு விழா ஜனவரி கடைசிவாரம் திருவனந்தபுரத்தில் நடைபெறவுள்ளது
எனது மகன் ஹரி பிரசாத் இயக்கியுள்ள மை டியர் செகாவ் குறும்படம் YouTube ல் வெளியிடப்பட்டுள்ளது. நண்பர்கள் அனைவரும் இந்தக் குறும்படத்தைக் காணும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் chekhov short film link https://youtu.be/XzQhtG39qng
ஜனவரி 5 மாலை சென்னை இக்சா மையத்தில் நடைபெறவுள்ள யாவரும் பதிப்பகத்தின் நூல்வெளியீட்டு விழாவில் கலந்து கொள்கிறேன் இளம் படைப்பாளிகளின் 11 நூல்கள் வெளியாகின்றன. கடந்த இரண்டு நாட்களாக அவர்களின் புதிய நூல்களை வாசித்துக் கொண்டிருக்கிறேன். இளந்தலைமுறை படைப்பாளிகள் சிறப்பாக எழுதுகிறார்கள். புதிய தடத்தில் பயணிக்கும் அவர்களை மனம் நிரம்ப வாழ்த்துகிறேன். புதிய படைப்பாளிகளை இனம் கண்டு பதிப்பிக்கும் யாவரும் பதிப்பகத்திற்கு அன்பும் வாழ்த்துகளும்.
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த ஆண்டில் உங்கள் கனவுகள் யாவும் வெற்றியடைய வாழ்த்துகிறேன். நேரிலும் தொலைபேசியிலும் மின்னஞ்சல் மூலமும் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். •• புத்தாண்டின் துவக்கமாக இன்று மாலை (1.1.2010 ) தஸ்தாயெஸ்கியின் நாட்குறிப்புகள் குறித்து உரை நிகழ்த்துகிறேன் ஜனவரி மூன்றாம் தேதி மாலை அடையாறு ஒடிசி புத்தக கடையில் எனது சிறுகதை தொகுப்பான போயர்பாக் கண்டறிந்த மழைக்கோவில் அறிமுக விழா மாலை ஆறுமணிக்கு நடைபெறவுள்ளது ஜனவரி ஐந்தாம் தேதி …
கவிஞர் ஷங்கர்ராமசுப்ரமணியன் உலகின் வெவ்வேறு தேசங்கள், கலாசாரம், அழகியல், அரசியல் பின்னணிகள் கொண்ட கவிஞர்களையும் கவிதைகளையும் அறிமுகம் செய்து எஸ். ராமகிருஷ்ணன் தடம் இதழில் தொடராக எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ‘கவிதையின் கையசைப்பு’. இதில் 12 கவிஞர்களும் அவர்கள் கவிதைகளும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளார்கள். ஒரு மாத இடைவெளி கொடுத்து அந்தந்தக் கவிஞர்களையும் அவர்களது கவிதைகளையும் வாசிப்பதற்கான அவகாசம் தேவைப்படும் அளவுக்கு திடமான அறிமுகங்கள் இவை. ஒரு ஜப்பானியக் கவிஞரையும் ஒரு ரஷ்யக் கவிஞரையும் அவர்களது கவிதைகளையும் எனக்கு …
பேராசிரியர் பாரதிபாலன் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழியில் இலக்கியம் என்ற மகாசமுத்திரத்திற்குள் இறங்குகிறார்கள், நுழைகிறார்கள். இந்த இலக்கியத்துக்குள் நுழைவதற்கு எத்தனையோ வாயில்கள் திறந்திருக்கின்றன. அவரவர் சூழலுக்கு ஏற்ப அவரவர் வாயில்களை அவர்களே தேர்ந்தெடுத்துக் கொள்கின்றார்கள்! எஸ். ராமகிருஷ்ணன் தேர்ந்தெடுத்துக் கொண்ட வாயில் ‘ரஷ்ய இலக்கியங்கள்’. இளம் வயதில் தனக்கு ஏற்பட்ட ரஷ்ய இலக்கியத்தின் தாக்கத்தால், ஆற்றுப்படுத்துதலால் உந்தப்பட்டு எழுத வந்தவர் எஸ். ராமகிருஷ்ணன்! பின்னர் பழந்தமிழ் இலக்கியம் தொட்டு தமிழில் இலக்கிய வளமைகளை எல்லாம் உள்வாங்கிக் கொண்டு தன் …
ரஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் எனது உரை, https://youtu.be/yXUuhNP-rkQ
சென்னையும் நானும் காணொளித் தொடரின் 6 வது பகுதி வெளியாகியுள்ளது Chennaiyum Nanum Episode-6 https://youtu.be/eVYklZ3Cu88