திரையின் மறுபக்கம்.
ஒரு படத்தின் தயாரிப்பாளர் அப்படம் உருவான விதம், இயக்குநர் எவ்வாறு தன்னை அணுகினார், படப்பிடிப்பில் என்ன நடந்தது, படம் வெளிவருதற்கு என்ன சிரமங்கள் ஏற்பட்டன, நடிகர்கள் எவ்வாறு தேர்வு செய்யப்பட்டார்கள் என்று வெளிப்படையாகப் பகிர்ந்து கொண்டதேயில்லை. பல நேரங்களில் படம் முடிவதற்குள் இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் சண்டை முற்றிவிடுவதுண்டு. வெற்றிப்படமாக அமைந்த போதும் இயக்குநர்கள் புறக்கணிக்கப்பட்டதே சினிமா உலகின் நியதி. ஆனால் முதன்முறையாகச் சுரேஷ் ஜிந்தால் என்ற சத்யஜித்ரேயின் தயாரிப்பாளர் தான் எவ்வாறு ரேயை வைத்து Shatranj Ke …