விரான்ஸ்கியின் காதல்
லியோ டால்ஸ்டாயின் அன்னா கரீனினா நாவல் முப்பது முறைகளுக்கும் மேலாகத் திரைப்படமாக்கபட்டிருக்கிறது. இம்முறை பிரம்மாண்டமாக Anna Karenina: Vronsky’s Story என ரஷ்ய தொலைக்காட்சித் தொடராக உருவாக்கபட்டிருக்கிறது. இதன் முழுநீள திரைவடிவமும் வெளியிடப்பட்டுள்ளது. அன்னாவின் காதலன் விரான்ஸ்கியின் பார்வையில் உருவாக்கபட்டுள்ள இப்படம் அன்னாகரீனினா நாவலைப் புதிய கோணத்தில் அணுகுகிறது. நாவலில் அன்னா தற்கொலை செய்து கொண்டு இறக்கும் போது அவளது மகன் செர்ஜி கரீனினுக்கு எட்டு வயது. அவன் வளர்ந்து தற்போது ராணுவத்தில் மருத்துவராகப் பணியாற்றுகிறான். 1904ல் …