admin

சிங்கிஸ் ஐத்மாத்தவ்

கிர்கிஸ்தான் சோவியத் குடியரசில் ஒன்றாக இருந்த நாடு. இதன் வடக்கில்  இந்நாட்டின் வடக்கில் கசக்கிஸ்தான், மேற்கில் உஸ்பெகிஸ்தான், தென்மேற்கில் தஜிகிஸ்தான், மற்றும் கிழக்கில் சீன மக்கள் குடியரசு ஆகிய நாடுகள் அமைந்துள்ளன. கிர்கிஸ்தானின் தேசிய படைப்பாளியாக கொண்டாடப்படுகிறவர் சிங்கிஸ் ஐத்மாத்தவ். இவரது நாவல்களில் குல்சாரி, முதல் ஆசிரியர், ஜமீலா, சிவப்புத் தலைக்குட்டையணிந்த பாப்ளார் மரக்கன்று, ஒட்டகக் கண் போன்றவை தமிழில் வெளியாகியுள்ளன. சிங்கிஸ் ஐத்மாத்தவ்(Chinghiz Aitmatov) மிகச்சிறந்த படைப்பாளி.  இவரது நாவல்கள் யாவும் திரைப்படமாகவும் வெளியாகியுள்ளன. தங்கள் …

சிங்கிஸ் ஐத்மாத்தவ் Read More »

என் வாழ்க்கைப் போர்

தமிழ் அறிஞர் சி.இலக்குவனார் அவர்களின் சுயசரிதையான என் வாழ்க்கைப் போர் என்ற நூலை வாசித்தேன். நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த வாய்மேடு கிராமத்தில் 1909 ஆம் ஆண்டு எளிய குடும்பத்தில் பிறந்தவர் இலக்குவனார். இவரது வாழ்க்கை வரலாறு நூறு வருஷங்களுக்கு முன்பு நாகை பகுதி கிராமங்கள் எப்படியிருந்தன. கிராமப்புற வாழ்க்கையில் கல்வி பெற எவ்வளவு போராட வேண்டியிருந்தது என்பதன் சாட்சியமாகவுள்ளது. கிராமத்தில் பெட்டிக்கடை வைத்திருந்த இலக்குவனாரின் தந்தை ஒரு நாள் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்படுகிறார்.. அந்த நாட்களில் வயிற்றுப்போக்கு வந்தால் இறந்து போய்விடுவார்கள் என்ற பயம் …

என் வாழ்க்கைப் போர் Read More »

மதுரையின் திருவிழா

தேரோடும் எங்க சீரான மதுரையிலே ஊரார்கள் கொண்டாடும் ஒயிலாட்டம் என்ற திரைப்படப்பாடலைக் கேட்கும் போதெல்லாம் மதுரையின் திருவிழா நினைவுகள் வந்து போகும் மாட்டுவண்டி கட்டி சித்திரைத் திருவிழாவிற்கு போய் வந்த பால்ய வயதின் நினைவுகள் பசுமையாகயிருக்கிறது. மதுரையைப் பற்றி நிறையப் புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளன. ஆனால் இத்தனை அழகான புகைப்படங்களுடன் திருவிழா குறித்த தகவல்களுடன் மதுரையின் பண்பாட்டுச் சிறப்புகளை விவரிக்கும் ஒரு புத்தகம் இதுவரை வந்ததில்லை. அப்படி ஒரு நூலை சித்திரவீதிக்காரன் எழுதியிருக்கிறார் நண்பர் முத்துகிருஷ்ணன் நடத்தும் பசுமை …

மதுரையின் திருவிழா Read More »

தினமலர் – நேர்காணல்

விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு கரிசல் பூமியில் பிறந்தவர். இவரது கதைகளை வாசிப்பது மிகு மழையின் ஊடே நனைந்து வீடு திரும்புவதை போன்ற அனுபவம். அங்கே காற்று, மழை, குளிர்ச்சி, பாதுகாப்புத் தேடும் மனநிலையும், யாவையும் மீறி இயற்கையில் ஒன்றுகலக்கும் தருணமும் ஒருங்கே கூடியிருக்கின்றன. தனக்கென தனித்துவமான கவித்துவ கதை சொல்லும் மொழி, கதைக்களங்கள் கொண்டவர். புனைவெழுத்தில் சாதனைகள் நிகழ்த்தியவர். நவீன தமிழ் சிறு கதையில் புதிய போக்குகளை உருவாக்கியவர். முழு நேர எழுத்தாளர். சினிமா வசனகர்த்தா. கரிசல் …

தினமலர் – நேர்காணல் Read More »

சிரிப்பின் பின்னால்.

லாரல் மற்றும் ஹார்டி (Laurel and Hardy) இருவரும் ஹாலிவுட்டின் புகழ்பெற்ற நகைச்சுவை இரட்டையர்கள். ஒல்லியான ஸ்டேன் லாரல் இங்கிலாந்தைச் சேர்ந்தவர். குண்டான ஆலிவர் ஹார்டி அமெரிக்கர். ஸ்லாப்ஸ்டிக் நகைச்சுவையில் இவர்கள் தலைசிறந்த கலைஞர்கள். இவர்களின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் Stan & Ollie என்ற திரைப்படத்தைப் பார்த்தேன். 2018ல் வெளியான படமது. நகைச்சுவை நடிகர்களின் வாழ்க்கையை விவரிக்கும் என்றாலும் படம் நகைச்சுவை கொண்டதாக மட்டுமில்லை. இரண்டு திரைக்கலைஞர்களின் புறக்கணிக்கபட்ட வலியை, நிராகரிப்பின் வேதனையை மிகச்சரியாகப் பதிவு …

சிரிப்பின் பின்னால். Read More »

பெலினி காத்திருக்கிறார்

பெலினியின் நண்பரும், ஒவியரும், சக அலுவலருமான Ettore Scola இயக்கத்தில் உருவான ஆவணப்படமான How Strange to Be Named Federico பெலினியின் கலை மற்றும் திரைவாழ்வை அழகாகச் சித்தரிக்கிறது. குறிப்பாகப் பெலினியின் திரைப்படம் போலவே முன்பின்னாகவும், கனவுத் தன்மை கொண்டதாகவும் ஆவணப்படத்தை ஸ்கோலா உருவாக்கியிருக்கிறார். ஸ்கோலா இத்தாலிய சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவர். மாஸ்கோ திரைப்பட விழா உள்ளிட்ட பல்வேறு திரைப்பட விழாக்களில் விருது பெற்றவர். முப்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியவர். பெட்ரிக்கோ பெலினி (Federico …

பெலினி காத்திருக்கிறார் Read More »

செசானும் எமிலி ஜோலாவும்

வாழ்வில் வெற்றியடைவது எல்லோருக்கும் எளிதாக நடந்துவிடுகிற விஷயமில்லை. அதுவும் இரண்டு நண்பர்களில் ஒருவன் பெயரும் புகழும் அடைந்த பிறகு மற்றவன் வெறும் ஆளாக, எந்த அங்கீகாரமும் வருமானமின்றி இருக்க நேரிடும் எனில் அவர்களுக்குள் உள்ள உறவில் கசப்பே மிஞ்சும். சிலரது மேதமை அவர்கள் வாழ்வின் இறுதிக்கட்டத்தை அடையும் போது தான் அறியப்படுகிறது. கொண்டாடப்படுகிறது. வான்கோ வாழ்ந்த போது அவரது ஒரு ஒவியம் கூட விற்பனையாகவில்லை. பணமில்லாமல் அவதிப்பட்டார். இன்று ஒரு ஒவியத்தின் விலை ஐநூறு கோடிக்கும் மேல். …

செசானும் எமிலி ஜோலாவும் Read More »

நாசகார உலகம்.

தி.ஜானகிராமன் சிறுகதை ஒன்றினை இன்று வாசிக்கும் போது ஒரு வரி சட்டென்று நிறுத்தியது. அந்த வரியைக் கடந்து போக முடியவில்லை. வாசித்தவுடன் முதலில் சிரிப்பு வந்தது. பின்பு மெல்ல சிரிப்பு மறைந்து இது உண்மையிலே நாசகாரச் செயல் தான் என்று உறைக்கவும் செய்தது. சண்பகப் பூ என்றொரு சிறுகதை. 1948ல் எழுதியிருக்கிறார். கதை முழுவதும் ஒரு பெண்ணின் அழகைப் பற்றிய வியப்பு. ஆராதனை தான். லா.ச.ராவை படிக்கிறோமோ என்று எண்ணும்படியாக இருந்தது. ஆனால் லா.ச.ரா பெண்ணை தெய்வநிலைக்குக் …

நாசகார உலகம். Read More »

திரை எழுத்து -1

அகிரா குரசேவாவின் திரைப்படங்கள் இயக்குனர் பாலு மகேந்திரா மிகச்சிறந்த திரைப்பட நூல்களைத் தனது நூலகத்தில் வைத்திருந்தார். ஒருமுறை அவரிடம் எந்தப் புத்தகத்தை மிகவும் அதிகமான தடவை வாசித்திருக்கிறார் என்று கேட்டபோது அவர் Hitchcock -François Truffaut என்று சொல்லி அதன் பிரதியைக் கையில் கொடுத்தார். அது ஹிட்ச்காக்கோடு பிரெஞ்சு இயக்குனர் பிரான்சுவா த்ருபோ நடத்திய உரையாடல்களின் தொகுப்பு. அதை வாசித்திருக்கிறேன் என்று பாலுமகேந்திராவிடம் சொன்னேன். அவர் உற்சாகத்துடன் அதே நூலின் இரண்டு மூன்று பிரதிகள் தன்னிடமிருக்கின்றன. வீட்டில், …

திரை எழுத்து -1 Read More »

போயர்பாக் கண்டறிந்த மழைக்கோவில்

காலச்சுவடு இதழில் வெளியான எனது புதிய சிறுகதை. ** வின்சென்ட் போயர்பாக் என்ற ஜெர்மானிய ஒவியன் ஒரு சிறுநூலை எழுதியிருக்கிறான். மணலின் நடனம் என்று பெயரிப்பட்ட அந்த நூலில் ஏழு கட்டுரைகள் உள்ளன. போயர்பாக்கை பற்றி எவ்விதமான குறிப்புகளும் அந்த நூலில் இல்லை. ஆனால் அவன் 1912 முதல் 1919 வரை ஏழு ஆண்டுகள் இந்தியாவில் சுற்றியலைந்திருக்கிறான் என்பதும் கிழக்கிந்திய கம்பெனியின் ஒவியர்களுக்கு உதவியாளராகப் பணியாற்றியிருக்கிறான் என்பதும் அந்த நூலில் உள்ள கட்டுரைகளின் வழியாகப் புரிந்து கொள்ள …

போயர்பாக் கண்டறிந்த மழைக்கோவில் Read More »