admin

அசோகன் சருவிலோடு ஒரு நாள்

மலையாளச் சிறுகதையுலகில் மிக முக்கிய எழுத்தாளர் அசோகன் சருவில். இவரது இரண்டு புத்தகங்கள் என்ற சிறுகதை தொகுப்பு தமிழில் வம்சி வெளியீடாக வந்துள்ளது. சுகானா மொழியாக்கம் செய்திருக்கிறார். இந்தப் புத்தகம் சென்றவாரம் புதுக்கோட்டை புத்தகக் கண்காட்சியில் சிறந்த மொழிபெயர்ப்பு நூலிற்கான விருதைப் பெற்றுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு திருச்சூர் சென்றிருந்த போது அசோகன் சருவில் அவர்களைச் சந்தித்து உரையாடினேன். சிறந்த பண்பாளர். எளிமையானவர். சருவிலின் கதைகள் எளிய மனிதர்களின் துயரங்களைப் பேசுபவை. வடிவ உத்திகளை விடவும் வாழ்வின் …

அசோகன் சருவிலோடு ஒரு நாள் Read More »

எல்லை கடக்கும் சர்க்கஸ்

ஹாலிவுட்டின் நிகரற்ற இயக்குனர் எலியா கஸான். இவரது திரைப்படங்கள் இன்றும் திரைப்பள்ளிகளில் பாடமாகப் பயிலப்படுகின்றன. நடிகர்களின் திறமையை முழுமையாக வெளிப்படுத்துவதிலும், காட்சிகோணங்களைப் புதிதாக வடிவமைப்பதிலும், உணர்ச்சிபூர்வமான காட்சிகளை அழுத்தமாகக் கையாளுவதிலும் எலியா கஸான் தனித்துவமிக்கவர். மார்லன் பிராண்டோவை திரைநட்சத்திரமாக உருவாக்கியவர் இவரே. போரும் வாழ்வும், குற்றமும் தண்டனை, மேடம் பவாரி போன்ற செவ்வியல் நாவல்களை வாசிக்கும் போது நாம் கதாபாத்திரங்களின் உருவாக்கம் மற்றும் கதையை எடுத்துச் செல்லும் விதத்தைக் கண்டு வியக்கிறோம். பாராட்டுகிறோம். அதே அனுபவத்தைத் திரையில் …

எல்லை கடக்கும் சர்க்கஸ் Read More »

உண்டாட்டு

திருவண்ணாமலையில் நடைபெற்ற உண்டாட்டு நிகழ்வு இலக்கியத் திருவிழா போல நடைபெற்றது. பெங்களூர், கோவை, மதுரை,  சேலம். தஞ்சை, சென்னை, கொச்சி,  புதுச்சேரி எனப் பல்வேறு ஊர்களில் இருந்து இலக்கியவாசகர்களும், எழுத்தாளர்களும் திருவண்ணாமலைக்கு வந்து சேர்ந்திருந்தார்கள். பவாவின் ஏற்பாடு எப்போதும் ஆகச்சிறந்ததாகவே இருக்கும். இந்த முறை கொண்டாட்டத்தின் உச்சம். பவாவும், அவரது குடும்பமும் நண்பர்களும் இந்நிகழ்வை மறக்கமுடியாத பெரும் அனுபவமாக உருவாக்கினார்கள். காலை பத்து மணிக்குத் துவங்கி இரவு ஒன்பது வரை நிகழ்வுகள்.  வாசகர்கள் பலரும் எனது படைப்புகள் …

உண்டாட்டு Read More »

வாசகசாலை 100

தமிழகம் முழுவதும் புத்தக வாசிப்பினை ஒரு பேரியக்கமாக உருமாற்றி வருகிறது வாசகசாலை. நூலகம் தோறும் அவர்கள் நடத்தி வரும் நிகழ்ச்சிகள் மிகுந்த பாராட்டிற்குரியவை. சிறந்த கவிதைகள், சிறுகதைகள், நாவல், கட்டுரை என பல்வேறு நூல்களை அறிமுகப்படுத்தி இளம்வாசகர்களை படிக்க வைக்கும் அரிய செயலை மேற்கொண்டு வருகிறார்கள்.  இச்செயல்பாடு பண்பாட்டு வளர்ச்சிக்கு மிகுந்த உறுதுணை செய்கிறது என்பதே நிஜம். அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற வாசகசாலையில் சிறுகதை கொண்டாட்டம் 100 வது நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றினேன். இந்நிகழ்வில் …

வாசகசாலை 100 Read More »

அதிகதைகள் – ஒரு அறிமுகம்

சிங்கப்பூரில் உள்ள இளம் எழுத்தாளர்கள் ஒன்றிணைந்து அரூ என்ற இணைய இதழைக் கொண்டுவருகிறார்கள். மிகச்சிறப்பான படைப்புகளுடன் இதழ் வெளியாகிறது. மிகைப் புனைவும் (fantasy fiction), அறிவியல் புனைவும்  கொண்ட படைப்புகளுக்கு முக்கியத்துவம் தரும் இணைய இதழது.  புதிய கதைவெளியை உருவாக்க முனையும் அவர்களுக்கு எனது மனம் நிரம்பிய பாராட்டுகள். அரூ இதழில் வெளியான எனது சிறுகதை தொகுப்பு பற்றிய கட்டுரையிது. நண்பர் கணேஷ் பாபு தேர்ந்த இலக்கிய வாசகர்.  வெயிலைக் கொண்டு வாருங்கள் சிறுகதைத் தொகுப்பு பற்றி …

அதிகதைகள் – ஒரு அறிமுகம் Read More »

கைக்கடிகாரமெனும் சிற்பம்.

Watchmaker Masahiro Kikuno – In Tune with Time என்ற டாகுமெண்டரி திரைப்படத்தைப் பார்த்தேன். சர்வதேச அளவில் கைக்கடிகாரங்களை வடிவமைப்பு செய்யும் மசஷிரோ கிகுனா என்ற இளைஞரின் உலகை ஆவணப்படுத்தியுள்ளது இப்படம். ஜென் துறவி ஒருவர் கைக்கடிகாரம் செய்ய முற்படுவது போல அத்தனை நிதானமாக, ஆழ்ந்த புரிதலுடன் அசாத்தியமான கலைத்திறமையுடன் கிகுனா கைக்கடிகாரங்களைத் தயாரிக்கிறார். இந்த ஆவணப்படம் கடிகாரம் தயாரிப்பதை மட்டும் காட்சிப்படுத்தவில்லை. காலத்தை நாம் எப்படிப் புரிந்து கொண்டிருக்கிறோம். எப்படிக் கையாளுகிறோம். காலம் என்பதை …

கைக்கடிகாரமெனும் சிற்பம். Read More »

திருவண்ணாமலையில்

நாளை எனது நண்பர்  பவா.செல்லத்துரை திருவண்ணாமலையில் உண்டாட்டு என்ற சிறப்பு நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளார். திருவண்ணாமலை எனது தாய்வீட்டினைப் போன்றது. முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடரும் நட்பு. . பவா வீடு தான் என்னையும் உருவாக்கியது. அவரது பெற்றோர்கள்  காட்டிய அன்பு நிகரற்றது பவா மற்றும் கருணா, சந்துரு தோழர். எஸ்.கே.பி.கருணா, ஷைலஜா, ஜெயஸ்ரீ ,உத்ரா, வம்சி, மானசி, சகானா, அம்மம்மா  எனத் தோழமையின் துணையே என்னை வளர்த்தது. எனது எல்லா சந்தோஷங்களும் திருவண்ணாமலையில் கொண்டாடப்பட்டவையே. இம்முறை …

திருவண்ணாமலையில் Read More »

ஆசிர்வதிக்கப்பட்ட நாள்.

நேற்று என்னுடைய சொந்த ஊரான மல்லாங்கிணறு கிராமத்தில்  சாகித்ய அகாதமி விருது பெற்றதற்கான பாராட்டுவிழா நடைபெற்றது.  இதுவரை நடைபெற்ற நிகழ்வுகளில் இதுவே மிகச்சிறந்தது என்று சொல்வேன். எங்கள் கிராமமே ஒன்று கூடி ஒரு விழா எடுப்பது இதுவே முதன்முறை. இந்த நிகழ்விற்கு மிக முக்கியக் காரணமாக இருந்தவர்கள் அருமை நண்பரும் , சட்டமன்ற உறுப்பினருமான தங்கம் தன்னரசு, மற்றும் அவரது சகோதரி கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியன். அவர்களுக்கு என் இதயம் நிரம்பிய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஊரின் …

ஆசிர்வதிக்கப்பட்ட நாள். Read More »

மல்லாங்கிணரில்

எனது சொந்த ஊரான மல்லாங்கிணரில் எனக்கொரு பாராட்டு விழா நடைபெறுகிறது.  சட்டமன்ற உறுப்பினரும் எனது நண்பருமான தங்கம் தென்னரசு,  அவர்களின் சகோதரி கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியன் இருவரும் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். எங்கள் கிராமத்தில் இது போன்ற இலக்கிய நிகழ்வு நடைபெறுவது இதுவே முதன்முறை. நிகழ்வில் எனது ஆசான் எஸ். ஏ. பெருமாள். எனது நண்பரும் நாடறிந்த பேச்சாளருமான பாரதி கிருஷ்ணகுமார், பர்வீன் சுல்தானா, அண்ணன் மருத்துவர் வெங்கடாசலம்,  திரைக்கலைஞர் இளவரசு,  ஊடகவியலாளர் சுஜிதா …

மல்லாங்கிணரில் Read More »

புதுக்கோட்டை புத்தகத் திருவிழா

புதுக்கோட்டை புத்தகத் திருவிழா மூன்றாம் ஆண்டில் சிறப்பாக துவங்கியுள்ளது. 15.02.2019 துவக்க நாளின் உரையை நான் நிகழ்த்தினேன். நண்பர் தங்கம் மூர்த்தி இதற்கு முக்கிய காரணமாக விளங்கினார். தேசாந்திரி பதிப்பகம் இந்த கண்காட்சியில் அரங்கு அமைத்துள்ளது.  கவிஞர் முத்துநிலவன்,  பேராசிரியர் கருப்பையா,  வரதன் உள்ளிட்ட நண்பர்கள் பலரையும் சந்திக்க முடிந்தது மகிழ்ச்சி அளித்தது.  நிகழ்வை ஒருங்கிணைத்த அனைவருக்கும் நன்றிகள்