admin

பல்கலைக்கழகத்தில்

திருநெல்வேலியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் சார்பில் எனக்கு பாராட்டுவிழா நடைபெற்றது. இதை துணைவேந்தர் பாஸ்கர் ஏற்பாடு செய்திருந்தார். நிகழ்வினைச்  சிறப்பாக வடிவமைத்து ஏற்பாடு செய்தவர் சிறந்த கல்வியாளரும் எழுத்தாளருமான முனைவர் அ.ராமசாமி. ஒரிசாவின் முன்னாள் கவர்னர் எம்.எம். ராஜேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். நிகழ்வில் பேராசிரியர் தி.சு. நடராஜன், எழுத்தாளர் ரவிக்குமார். எழுத்தாளர் இமயம், எழுத்தாளர் சோ.தர்மர் ஆகியோர் கலந்து கொண்டார்கள். மதிய அமர்வில் விமர்சகர் முருகேச பாண்டியன். விமர்சகர் நவீனா, மற்றும் …

பல்கலைக்கழகத்தில் Read More »

மதுரையில்

மதுரை எட்வர்ட் ஹாலில் தமிழ்நாடு முற்போக்கு கலைஞர்கள் எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் பாராட்டுவிழா நடைபெற்றது. நிகழ்வை  மாவட்ட செயலாளர் சாந்தாராம் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார். நிறைய இளைஞர்கள் கூட்டம்.  இருக்கைகள் நிரம்பி நிறையப் பேர் நின்று கொண்டேயிருந்தார்கள். கவிஞர் ஸ்ரீரசா முன்னிலை வகித்து நிகழ்வை ஒருங்கிணைப்பு செய்தார். சஞ்சாரம் நாவலைப் பாராட்டி மக்கள் கலைவாணர் நன்மாறன் உரையாற்றினார். அதைத் தொடர்ந்து கவிஞர் மதுக்கூர் ராமலிங்கம் எனது படைப்புகள் குறித்து சிறப்புரை நிகழ்த்தினார். ந.ஸ்ரீதர் வாழ்த்துரை வழங்கினார், மதுரை …

மதுரையில் Read More »

கோவில்பட்டியில்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பில் கோவில்பட்டியில் எனக்கு பாராட்டு விழா நடைபெற்றது. எழுத்தாளர் உதயசங்கர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார். நிகழ்வில் அண்ணன் தமிழ்செல்வன்  , மொழிபெயர்ப்பாளர் சா.தேவதாஸ், எழுத்தாளர் பூமணி,   நெல்லை நாறும்பூநாதன்  சோ.தர்மர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். எனது சிறுகதைகள் குறித்து தமிழ் செல்வன் சிறப்பாக உரையாற்றினார். இது போலவே எனது நாவல்கள் குறித்து சா. தேவதாஸ் ஆழ்ந்த உரையை நிகழ்த்தினார். நண்பர்கள் சாரதி ,பொன்னுசாமி உள்ளிட்ட பலரையும் சந்தித்தது …

கோவில்பட்டியில் Read More »

திருநெல்வேலியில்

கடந்த செவ்வாய்கிழமை திருநெல்வேலியில்  நான் சாகித்ய அகாதமி பெற்றதற்காக பாராட்டுவிழா நடைபெற்றது. இந்த நிகழ்வின் சிறப்பு நாதஸ்வரக் கலைஞர் காருகுறிச்சி அருணாசலம் அவர்களின் மனைவி இராமலட்சுமி அம்மாள் வந்து ஆசி வழங்கியது. அவருக்கு வயது 96. காய்ச்சல் காரணமாக உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. ஆனாலும் சக்கர நாற்காலியில் அமர்ந்து கொண்டு நிகழ்விற்கு வந்திருந்தார். நிகழ்வு முழுவதுமிருந்தார் . என் தலைதொட்டு ஆசி வழங்கினார்.  நிகழ்வில்  நிறைய நாதஸ்வரக்கலைஞர்கள் வந்து கலந்து கொண்டு எனக்குச் சிறப்பு செய்தார்கள். நிகழ்வை …

திருநெல்வேலியில் Read More »

நித்தியத்தின் நுழைவாயில்

ஒவியஉலகில் வின்சென்ட் வில்லியம் வான்கோ என்பது ஒரு பெயரில்லை. அது ஒரு தனித்துவமிக்க அடையாளம். நவீன ஒவியர்களுக்கு அவர் நிகரற்ற கலைஞன். பேராசான். அவரது வண்ணங்களைப் போலக், கோடுகளைப் போல வரைந்துவிடமுடியாதா என்ற ஏக்கம் இளம் ஒவியர்களுக்கு எப்போதும் உண்டு. உன்மத்த நிலையில் வான்கோ வரைந்த ஒவியங்கள் உலகமே பற்றி எரிவது போலவே காட்சிப்படுத்தபட்டிருக்கிறது. கௌதம புத்தர் தனது முதற்சொற்பொழிவை சாரநாத்திலுள்ள மான்பூங்காவில் ஆற்றினார். அந்த உரையில் உலகம் முழுவதும் நெருப்பு இடையுறாமல் எரிந்து கொண்டேயிருக்கிறது. அதை …

நித்தியத்தின் நுழைவாயில் Read More »

டெல்லி தமிழ் சங்கத்தில்

சாகித்ய அகாதமி விருது பெற்றதற்காக டெல்லி தமிழ் சங்கம் ஒரு பாராட்டு நிகழ்வை  ஜனவரி 31 மாலையில் ஏற்பாடு செய்திருந்தது.  நண்பர் பென்னேஸ்வரன் இதனைச் சிறப்பாக ஒருங்கிணைப்பு செய்திருந்தார்.  தலைவர் இந்துபாலா, பொதுச்செயலாளர் திரு. முகுந்தன்,   ஷாஜகான் உள்ளிட்ட அதன் நிர்வாகிகள்  பலரும் கலந்து கொண்டார்கள். நிகழ்வில் சஞ்சாரம் குறித்த தனது  பார்வைகளை பேராசிரியர் ராஜகோபால் முன்வைத்து உரையாற்றினார்.  திருப்புகழ் ஐஏஎஸ் அவர்கள் நிகழ்விற்குத் தலைமை வகித்தார். அரங்கு நிரம்பிய கூட்டம். இது போலவே தமிழ்நாடு இல்லத்திலும் பாராட்டு …

டெல்லி தமிழ் சங்கத்தில் Read More »