கோவில்பட்டியில்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பில் கோவில்பட்டியில் எனக்கு பாராட்டு விழா நடைபெற்றது. எழுத்தாளர் உதயசங்கர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார். நிகழ்வில் அண்ணன் தமிழ்செல்வன்  , மொழிபெயர்ப்பாளர் சா.தேவதாஸ், எழுத்தாளர் பூமணி,   நெல்லை நாறும்பூநாதன்  சோ.தர்மர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

எனது சிறுகதைகள் குறித்து தமிழ் செல்வன் சிறப்பாக உரையாற்றினார். இது போலவே எனது நாவல்கள் குறித்து சா. தேவதாஸ் ஆழ்ந்த உரையை நிகழ்த்தினார். நண்பர்கள் சாரதி ,பொன்னுசாமி உள்ளிட்ட பலரையும் சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது. ரெங்கராஜன், ஆனந்தன், பொ. முருகன், மரு. சிவனாகரன்,  திடவை பொன்னுசாமி, விக்னேஷ், ராமசுப்பு, சகாயராஜ் பிரதீப், செல்வராஜ் ஆகியோர் நிகழ்வினை சிறப்பாக நடத்த உதவி செய்தார்கள். அனைவருக்கும் நன்றி

நிகழ்விற்காக கோவில்பட்டி செண்பகவள்ளியம்மன் கோவிலைச் சார்ந்த நாதஸ்வரக் கலைஞர்கள் சிறப்பு இன்னிசை வழங்கியதோடு பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்கள். விருதுநகர், அருப்புக்கோட்டை, தூத்துக்குடி, சாத்தூர்  சிவகாசி என தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் பல்வேறு கிளைகளைச் சார்ந்த தோழர்கள் பொன்னடை அணிவித்து கௌரவித்தார்கள். அனைவருக்கும் நன்றி.

0Shares
0