வாழ்த்துகள்
கோவை கொடீஷியா புத்தகக் கண்காட்சி சார்பில் வழங்கப்படும் வாழ்நாள் சாதனை விருது எழுத்தாளர் வண்ணநிலவன் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அன்பிற்குரிய வண்ணநிலவனுக்கு மனம் நிரம்பிய வாழ்த்துகள்
கோவை கொடீஷியா புத்தகக் கண்காட்சி சார்பில் வழங்கப்படும் வாழ்நாள் சாதனை விருது எழுத்தாளர் வண்ணநிலவன் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அன்பிற்குரிய வண்ணநிலவனுக்கு மனம் நிரம்பிய வாழ்த்துகள்
நெதர்லாந்து அரசாங்கம் தேசிய புத்தகத்தினத்தைக் கொண்டாடும் விதமாக அன்று ரயிலில் பயணிகள் டிக்கெட்டிற்குப் பதிலாக ஒரு புத்தகத்தைக் காட்டினால் போதும் என்று அறிவித்திருக்கிறது. அதாவது புத்தகம் படிக்கிறவர்களுக்கு ரயில் பயணம் இலவசம். 1932 முதலே நெதர்லாந்து அரசாங்கம் புத்தகம் படிப்பதை ஊக்கப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் இலக்கிய நிகழ்வுகள், புத்தக வாசிப்பு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. குறிப்பிட்ட சில நூல்களை அரசே அச்சிட்டு இலவசமாகவும் வழங்கி வருகிறது. டச்சு இலக்கியங்களை கொண்டாடும் விதமாக பத்து நாட்கள் புத்தக …
கடந்த பத்து ஆண்டுகளில் ரஷ்ய சினிமாவில் புது இயக்குநர்கள் மிகச்சிறப்பான படங்களை உருவாக்கிவருகிறார்கள். ஹாலிவுட் சினிமாவிற்குப் போட்டியாகப் பிரம்மாண்டமான படங்கள் ரஷ்யாவிலும் உருவாக்கப்படுகின்றன. Gogol Viy (2018) என்ற படத்தைச் சமீபத்தில் பார்த்தேன். கோகல் எழுதிய திகில் கதையைப் பிரமாண்டமாகப் படமாக்கியிருக்கிறார்கள். இது போலவே Mathilde (2017) என்ற படமும் நடனமும் இசையும் கலந்த சரித்திரக் கதையை விவரிக்கிறது. இப்படமும் மிகப்பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது யதார்த்தப் படங்கள் ஒரு பக்கமும் மறுபக்கம் ஹாலிவுட் போன்று பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்படும் …
– சிறுகதை •• கதவைத் தட்டும்போது அப்படியொரு குரல் கேட்கும் என்று நாங்கள் நினைத்துகூடப் பார்க்கவில்லை. தயங்கிய படியே வாசலில் நின்றிருந்தோம். மதியம் 3.30 மணியிருக்கும். வீதியில் ஆள் நடமாட்டமே இல்லை. தபால் அலுவலகத்தை யொட்டிய சிறிய வீதி அது. “வாசல்ல எந்த நாயோ வந்து கதவைத் தட்டிக்கிட்டு இருக்கு. கதவைத் திறந்து தொலைம்மா’’ என்று உள்ளிருந்து கனத்த ஆண் குரல் கேட்டது. அடுத்த சில நிமிடத்தில் பச்சைக் கட்டம் போட்ட சேலை கட்டிய வயதான பெண் …
செகாவ் பற்றிய எனது உரையின் காணொளி https://www.youtube.com/watch?v=q8NQ_pUu2qw&feature=youtu.be
எனது இலக்கிய உரைகள். நிகழ்வுகளைக் காணொளியாகக் காண்பதற்கு தேசாந்திரி youtube சேனல் துவங்கப்பட்டுள்ளது. அதில் இணைந்து கொள்வதன் வழியே எனது உரைகளை நீங்கள் தொடர்ந்து காணலாம். இலக்கிய வாசகர்கள், நண்பர்கள் இதனை Subscribe செய்து உதவவும். To Subscribe : https://www.youtube.com/channel/UCgR7-JP41pV_beUBAYjzNMg?SUB_CONFIRMATION=1 நேற்றைய குறும்படவிழாவின் காணொளி‘ https://www.youtube.com/watch?v=cOMmJcZ0QiA&feature=em-uploademail ** எனது செகாவ் பற்றிய உரை தனி இணைப்பில் இரவு வெளியிடப்படும்.
நேற்று மாலை எனது பையன் ஹரிபிரசாத்தின் குறும்படமான மை டியர் செகாவ் வெளியீட்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. அரங்கு நிரம்பிய கூட்டம். இயக்குநர் சீனு ராமசாமி குறும்படத்தை வெளியிட்டு ஹரியையும் படக்குழுவினர்களையும் வியந்து பாராட்டி உற்சாகப்படுத்தினார். “கதைசொல்வதற்காக நாற்காலியோடு சாலையில் சுற்றித்திரியும் ஒருவரை முதன்முறையாகத் திரையில் பார்க்கிறேன். மிகவும் யதார்த்தமாகப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக்குறும்படம் நிச்சயம் திரைப்படவிழாவில் விருதுகளைப் பெறும்“ என வாழ்த்தினார். அவருக்கு என் மனம் நிரம்பிய நன்றி குறும்படத்தைப் பெற்றுக் கொண்டு வாழ்த்திய …
இன்றைய தி இந்து தமிழ் நாளிதழில் எனது மகன் ஹரி பிரசாத் இயக்கியுள்ள குறும்படம் பற்றிய செய்தி வெளியாகியுள்ளது. தி இந்து தமிழ்ஆசிரியர் அசோகன், நடுப்பக்க ஆசிரியர் சமஸ், ராஜன் மற்றும் நண்பர்களுக்கு நன்றி. நிகழ்வு நடைபெறும் முகவரி கவிக்கோ மன்றம் 4 இரண்டாவது மெயின் ரோடு சிஜடி நகர். சென்னை வழி : அண்ணாமேம்பாலம் அடியில் மைலாப்பூர் நோக்கி செல்லும் கதீட்ரல் சாலை வழியாக வரவும். கோபாலபுரம் பாலத்தின் அடியில் வந்தால் ம்யூசிக் அகாதமி சிக்னல். …
மகாகவி தாகூர் குறித்துப் புதிய திரைப்படம் ஒன்று வெளியாகியிருக்கிறது. Thinking of Him என்ற இப்படத்தை இயக்கியிருப்பவர் பாப்லோ செசார். .அர்ஜென்டினாவின் புகழ்பெற்ற இயக்குனர். பத்துக்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். இந்தோ அர்ஜென்டினா கூட்டுத் தயாரிப்பாக வெளியாகியுள்ள இப்படம் 2018ல் வெளிவந்துள்ளது. 1924ம் ஆண்டுத் தாகூர் பெருநாட்டின் அழைப்பை ஏற்றுப் பயணம் செய்தார். பயணத்தின் போது எதிர்பாராமல் உடல் நலமற்றுப் போகவே அர்ஜென்டினாவில் சில மாதங்கள் தங்கி ஒய்வு பெற்றார். அர்ஜென்டினா அகாடமி ஆஃப் லெட்டர்ஸ் அமைப்பின் …
மோகன் ராகேஷ் மிகச்சிறந்த சிறுகதை ஆசிரியர். இந்தி இலக்கியத்தில் புதிய கதை இயக்கத்தை உருவாக்கியவர். சிறந்த நாடகாசிரியர். இவரது நாடகங்கள் சங்கீத நாடக அகாதமி விருது பெற்றவை. சிறுகதைகள், நாவல், பயணக்கட்டுரைகள் என்று பல்வேறு தளங்களில் இயங்கியவர். பஞசாப்பில் பிறந்த இவர் ஆங்கில இலக்கியம் கற்றவர். இவரது ஆதே ஆதுரே என்ற நாடகம் தமிழில் அரையும் குறையும் என்று சரஸ்வதி ராம் நாத் அவர்களால் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இந்தி நாடகவுலகில் புகழ்பெற்ற இந்நாடகம் நடுத்தரவர்க்க குடும்பத்தின் சிக்கல்களை, …