கோ யுன் : பத்தாயிரம் வாழ்க்கைகள்
(தடம் இதழில் எழுதி வரும் உலகக் கவிதைகள் குறித்த தொடரின் கட்டுரை ) ஒவ்வோர் ஆண்டும் தமிழில் நிறைய கவிதை நூல்கள் வெளியாகின்றன. புதுப்புது கவிஞர்கள் அறிமுகமாகிறார்கள். ஆயினும் நவீன கவிதைகள் குறித்த விவாதங்கள், கவிதைக் கோட்பாடுகள், அழகியல் பற்றிய உரையாடல்கள் எதுவும் இலக்கியச் சூழலில் நடைபெறுவதில்லை. பிற மொழிகளிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட கவிதைகள் சிற்றிதழ்களில் வெளியாவதோடு சரி. அவை உரிய கவனத்தையும் உரையாடலையும் உருவாக்கவில்லை. முக்கியக் கவிஞர்கள்கூட இவற்றைப் பொருட்படுத்தி விவாதிப்பது இல்லை என்பது வருத்தமளிக்கும் உண்மை. …