admin

கதைகள் செல்லும் பாதை 6

தூண்டிலில் சிக்கிய நினைவுகள் தமிழின் சிறந்த சிறுகதைகளில் ஒன்று சா. கந்தசாமி எழுதிய தக்கையின் மீது நான்கு கண்கள். மீன்பிடிக்கச் செல்லும் தாத்தாவோடு செல்லும் சிறுவனின் உலகம் அற்புதமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கும். சமீபத்தில் படித்த சீனக்கதை கந்தசாமியின் சிறுகதையை நினைவுபடுத்தியது. வேறுவேறு தேசங்களில் எழுதப்பட்ட கதை. இரண்டிலும் தாத்தா கதாபாத்திரம் அற்புதமாக உருவாக்கபட்டுள்ளது. தாத்தா என்பது வெறும் சொல்லில்லை. தாத்தாவோடு பேரனுக்குள்ள உறவு என்பது தந்தையை விட நெருக்கமானது. தாத்தாக்கள் உலகை பற்றிய புதிய புரிதலை உருவாக்கிவிடுகிறார்கள். …

கதைகள் செல்லும் பாதை 6 Read More »

தேசாந்திரி இணையதயம்

தேசாந்திரி பதிப்பகத்திற்கென தனியான இணையதளம் உருவாக்கபட்டுள்ளது. இந்தத் தளத்தினைத் தொடர்பு கொண்டு எனது புத்தகங்களை எளிதாக வாங்கலாம். புத்தகங்கள் கூரியர் அல்லது தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும். சென்னை தவிர இதர ஊர்களுக்கு ரூ 50 கூரியர் செலவிற்கு கூடுதலாக செலுத்த வேண்டும். இந்த இணையதளத்தில் தேசாந்திரி தொடர்பான நிகழ்வுகள். தேசாந்திரி பதிப்பக வெளியீடுகள் குறித்த விமர்சனங்கள், காணொளிகள் வெளியிடப்படும். https://www.desanthiri.com/ வாசகர்கள். புத்தக விற்பனையாளர்கள், நண்பர்கள் இந்த இணையதளத்தை ஆதரிக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்

சிறுகதைப் போட்டி

சென்னை தினத்தை முன்னிட்டு கிழக்கு பதிப்பகம் நடத்தும் சிறுகதைப் போட்டி – 2018  பற்றிய அறிவிப்பு. விருப்பமுள்ளவர்கள் அவசியம் கலந்து கொள்ளவும் •••• வணக்கம். சென்னை தினம் (மெட்ராஸ் டே) சென்னையால் கொண்டாடப்படும் ஒரு சிறந்த கூட்டு நிகழ்வாகும். இந்நிகழ்வை முன்னிட்டு ஒரு சிறுகதைப் போட்டியை நடத்த கிழக்கு பதிப்பகம் முடிவெடுத்துள்ளது.அனைவரும் இந்த சிறுகதைப் போட்டியில் பங்குகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம். * சிறுகதைகள் தமிழில் மட்டுமே இருக்கவேண்டும். * சிறுகதைப் போட்டிக்கு தங்கள் படைப்புகள் வந்து சேரவேண்டிய …

சிறுகதைப் போட்டி Read More »

கதைகள் செல்லும் பாதை 5

நினைவில் கேட்கும் சங்கீதம் கவிஞர் சுகுமாரன் மொழியாக்கத்தில் வெளியான லீலை என்ற மலையாளச் சிறுகதை தொகுப்பு முக்கியமானது. சமகாலச் சிறுகதைகளில் பனிரெண்டைத் தேர்வு செய்து சிறப்பாக மொழியாக்கம் செய்துள்ளார். தலைப்பு கதையான லீலை மலையாளத்தில் திரைப்படமாக வெளிவந்து பாராட்டுப் பெற்றது. இந்தத் தொகுப்பிலுள்ள கடலின் விளிம்பில் ஒரு வீடு என்ற மாதவிக்குட்டியின் கதை மிகச்சிறப்பானது. புகழ்பெற்ற ஆங்கிலக் கவியான கமலாதாஸ் தான் இந்த மாதவிக்குட்டி. இவரது வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் ஆமி என்ற மலையாளப் படத்தைச் சில …

கதைகள் செல்லும் பாதை 5 Read More »

கதைகள் செல்லும் பாதை- 4

முடிவடையாத பந்தயம் அம்ப்ரோஸ் பியர்ஸ் (Ambrose Bierce )அமெரிக்காவின் புகழ்பெற்ற எழுத்தாளர். இவரது சிறுகதைகளில் ஒன்றான “An Occurrence at Owl Creek Bridge” குறும்படமாகத் தயாரிக்கபட்டு உலகப்புகழ்பெற்றுள்ளது. 1890ல் இக்கதை தமிழில் பழைய மரப்பாலத்தில் ஒரு சம்பவம் என மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. பியர்ஸ் ராணுவத்தில் பணியாற்றியவர். சில காலம் பத்திரிக்கையாளராக இருந்திருக்கிறார். தீவிரமான சமூக விமர்சனக்கட்டுரைகளை எழுதியதற்காக இவர் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டார். 1913 இல் தனது 71 வயதில் பியர்ஸ் லூசியானா மற்றும் டெக்சாஸ் …

கதைகள் செல்லும் பாதை- 4 Read More »

கதைகள் செல்லும் பாதை- 3

இல்லாத கண்கள் ரஸ்கின் பாண்ட் இந்தியாவின் புகழ்பெற்ற எழுத்தாளர்களில் ஒருவர். குழந்தைகளுக்காக நிறைய எழுதியிருக்கிறார். 1992ல் Our trees still grow in Tehra என்ற நூலிற்காக சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ளார் ரஸ்கின் பாண்ட் இமாச்சலப் பிரதேசத்தில் கசோலி என்ற இடத்தில் பிறந்தார். அவரது தந்தை ஆப்ரி அலெக்சாண்டர் பாண்ட் இரண்டாம் உலகப் போரின் போது பிரிட்டீஷ் வான்படையில் பணியாற்றினார். ரஸ்கின் பாண்ட் குஜராத்தின் ஜாம்நகரிலும்,டேராடூனிலும், ஷிம்லாவிலும் வளர்ந்தார். குழந்தைகளுக்காக முப்பது நூல்கள் எழுதி உள்ளார். …

கதைகள் செல்லும் பாதை- 3 Read More »

கதைகள் செல்லும் பாதை- 2

கால் நகங்கள் “காலில் நகங்கள் எதற்காகப் படைக்கபட்டிருக்கின்றன. அதனால் என்ன பிரயோசனம் ?“ என ஒரு சிறுமி தனது தாயிடம் கேட்கிறாள் “கடவுளின் படைப்பில் எல்லாவற்றுக்கும் ஒரு தேவையும் அவசியமும் இருக்கிறது. நமக்குத் தான் கால்நகங்களைப் பயன்படுத்த தெரியவில்லை“ என்று அந்தப் பெண்ணின் தாய் சொல்கிறாள் இப்படியொரு உரையாடலை யூத எழுத்தாளரான வெல்வ் செர்னின் நாவலில் கண்டேன். கால்நகங்களைப் பற்றி நம்மில் பெரும்பான்மையினர் கவனம் கொள்வதேயில்லை ஆனால் தன்னைக் கவனிக்கத் துவங்குவது கால்களில் இருந்தே துவங்குகிறது என்கிறாள் …

கதைகள் செல்லும் பாதை- 2 Read More »

கதைகள் செல்லும் பாதை 1

பயமும் காமமும் அருண் ஜோஷி (arun joshi) சாகித்ய அகாதமி விருது பெற்ற இந்திய ஆங்கில எழுத்தாளர். பனாரஸ் பல்கலைகழகத் துணைவேந்தர் ஜோஷியின் மகனாக, காசியில் பிறந்த இவர் அமெரிக்காவில் பட்டபடிப்பு படித்திருக்கிறார். 1961ல் இந்தியா திரும்பி புகழ்பெற்ற நூற்பாலை ஒன்றின் நிர்வாகியாகப் பணியாற்றியிருக்கிறார். பின்பு டெல்லியிலுள்ள ஸ்ரீராம் தொழில்நுட்ப மையத்தின் இயக்குனராகப் பல ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார். இவரது முதல் நாவல் The Foreigner 1968ல் வெளியானது. அதைத் தொடர்ந்து The Strange Case of Billy …

கதைகள் செல்லும் பாதை 1 Read More »

உலகைப் படம்பிடித்தல்.

அக்னேஸ் வர்தா பிரெஞ்சு சினிமா இயக்குனர்களில் முக்கியமானவர் . உலக அளவில் புகழ்பெற்ற பெண் இயக்குனர். பெல்ஜியத்தில் பிறந்த இவர்  பெண்ணிய சினிமாவின் முன்னோடியாகக் கருதப்படுகிறார். சிறந்த புகைப்படக்கலைஞரும் கலை வரலாற்று ஆய்வாளருமான இவர் சோர்போன் பல்கலைகழகத்திலிருந்து இலக்கியம் மற்றும் உளவியலில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார். வார்தா தனது வாழ்க்கையை ஒரு புகைப்படக்கலைஞராகவே துவக்கினார்.  கேமிராவை ஒரு பேனாவை போல சுதந்திரமாகப் பயன்படுத்த வேண்டும் என்ற சிந்தனையை பின்பற்றியவர் வார்தா.  இவரது திரைப்படங்கள் பரிசோதனை படங்களாகக் கருதப்படுகின்றன. …

உலகைப் படம்பிடித்தல். Read More »

பேரலையின் உயரம்

ஜப்பானின் புகழ்பெற்ற ஒவியரான ஹொக்குசாய் பற்றி இரண்டு படங்களைப் பார்த்தேன். ஒன்று ஆவணப்படம். மற்றொன்று திரைப்படம். Edo Porn என்ற திரைப்படம் Kaneto Shindo இயக்கத்தில் 1981ல் வெளியாகியிருக்கிறது. இப்படம் ஹொக்குசாயின் வாழ்க்கை மற்றும் காதலைப் பேசுகிறது. நிர்வாணக்காட்சிகள் அதிகமுள்ளதால் இப்படத்தைச் சில நாடுகள் திரையிட அனுமதிக்கவேயில்லை BBC தயாரிப்பான Old Man crazy to Paint ஆவணப்படம் ஹொக்குசாய் ஒவியங்களின் சிறப்புகளையும். அவரது தனித்துவத்தையும் விளக்குகிறது. 1760 ல் டோக்கியோவில் பிறந்த ஹொக்குசாய் மரச்செதுக்கு ஒவியராகப் …

பேரலையின் உயரம் Read More »