admin

மோட்சமென்பது

Understanding Moksha என்ற ஆவணப்படத்தை இணையத்தில் பார்த்தேன். சமீர் குமார் இயக்கியது. காசியில் எடுக்கபட்ட மிகச்சிறந்த படமது.  இசையும் படத்தொகுப்பும் ஒளிப்பதிவும் அபாரம். படம் காசியின் ஊடாக மெய்தேடலை முன்வைக்கிறது. குறிப்பாக மோட்சம் என்பதை புரிந்து கொள்வதற்கான வழிகாட்டுதலை மேற்கொள்கிறது. பனிகாலத்தின் காசியை காட்சிகளாக பார்க்கையில் நினைவுகள் பீறிடுகின்றன. இந்த பனிக்குள் நானும் அலைந்து திரிந்திருக்கிறேன். காசி எனக்கு மிகவும் விருப்பமான ஊர். காசியின் தொன்மை பற்றி ஒரு பேராசிரியர் பேசுகிறார். அப்போது காசி ஒரு அறிவு …

மோட்சமென்பது Read More »

பிரமிள் படைப்புகள்

கவிஞர் பிரமிளின் நெருக்கமான நண்பர் கால.சுப்ரமணியம் .   பிரமிள் மறைவிற்கு பின்பு அவரது கையெழுத்துபிரதிகள். நூல்களை காப்பாற்றி ஆவணப்படுத்தி வருபவர். தற்போது தனது லயம் பதிப்பகம் மூலம் பிரமிளின் மொத்த படைப்புகளையும்  ஒருசேர வெளியிடுகிறார். மிக அரிய முயற்சி.  நாம் அனைவரும் இதற்கு உறுதுணை அளிக்க வேண்டும் •• லயம் – பிரமிள் அறக்கட்டளை வெளியீடாக 2018 ஜூன் மாத இறுதிக்குள் வெளிவரவுள்ள பிரமிளின் ஒட்டுமொத்த எழுத்துக்களின் தொகுதிகள் ————————————————————————- பிரமிள் படைப்புகள் (பதிப்பு : கால …

பிரமிள் படைப்புகள் Read More »

புதிய சிறுகதை – மீறல்

சமீபத்தில் எழுதிய புதிய சிறுகதை. அச்சில் வராதது. •• மீறல் சுகந்தி பேருந்தை விட்டு இறங்கிய போது கோயம்பேட்டில் லேசான தூறலாக இருந்தது. இரவில் நல்ல மழை பெய்திருக்க வேண்டும். சாரலோடு ஒரு ஆட்டோ பிடித்துத் தனது தோழி கல்பனாவின் அறையைத் தேடிப் போனாள். கல்பனாவின் கணவன் துபாய் சென்றபிறகு அவள் வீட்டை காலி செய்துவிட்டு தன்னோடு வேலை பார்க்கும் மிதிலாவின் அபார்ட்மெண்டிற்கு மாறி விட்டாள். பெங்களுரில் இரவு புறப்பட்ட போது போனின் சார்ஜ் குறைந்து கொண்டுவந்தது. …

புதிய சிறுகதை – மீறல் Read More »

டோக்கியோ செல்லும் ரயில்.

ஜப்பானின் புகழ்பெற்ற இயக்குனரான யசுஜிரோ ஒசு இயக்கிய டோக்கியோ ஸ்டோரி படத்தை எப்போது பார்த்தாலும் மனது கனத்துவிடுகிறது. அதன்பிறகு சில நாட்களுக்கு வேறு படம் எதையும் பார்க்க முடியாது. டோக்கியோ ஸ்டோரி திரையில் உருவான காவியம். ஒசு  ஜப்பானியர்களின் ஆன்மாவை அறிந்தவர். அவரது சினிமா பௌத்த சாரத்தைக் கொண்டது. காத்திருப்பும் நிதானமும் தனிமையும் பிரிவும் என வாழ்வின் நுண்மையான தருணங்களை அடையாளம் காட்டியவர் ஒசு . அவரது திரைமொழி மற்ற ஜப்பானிய இயக்குனர்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. …

டோக்கியோ செல்லும் ரயில். Read More »

கவிதையின் கையசைப்பு

விகடன் தடம் இதழில் சமகால உலகக் கவிதைகள் குறித்த புதிய பத்தி ஒன்றை துவங்கியுள்ளேன் கவிதையின் கையசைப்பு என்ற அந்தப் பத்தி இந்த இதழில் துவங்கியுள்ளது ஜப்பானின் புகழ்பெற்ற கவிஞன் டகுபுகு பற்றிய அறிமுகம்.

சிறுநாவல்கள்

நண்பர் வேலூர் லிங்கம் சிறந்த வாசிப்பாளர். தான் வாசித்த நூல்களைப் பற்றி அடிக்கடி தொலைபேசியில் பேசி மகிழ்வார். இன்று காலை பேசிக்கொண்டிருக்கும் தடிதடியாக ஆயிரம் பக்கங்களுக்கு மேலுள்ள மொழியாக்க நாவல்களைப் பலராலும் படிக்க முடியவில்லை. நூறு இருநூறு பக்கங்களுக்குள் உள்ள சிறிய வெளிநாட்டு நாவல்கள் நிறைய உள்ளன. அவற்றைப் பற்றி நீங்கள்  விரிவாக கட்டுரைகள் எழுதலாமே எனச் சொன்னார் மறுவாசிப்பு செய்துவிட்டு அவசியம் எழுதுகிறேன் என்றேன். அதற்கு முன்னதாக வாசிக்க வேண்டிய சிறுநாவல்களின் பட்டியலை வெளியிடுங்கள். அது …

சிறுநாவல்கள் Read More »

பெற்றோர்களுக்கு

இன்று காலை எனது மெயிலில் இந்தச் செய்தியை  ஒரு நண்பர் பகிர்ந்திருந்தார். இணையத்தில்  வெளியாகியுள்ள இச்செய்தி சிங்கப்பூரிலுள்ள ஒரு பள்ளி முதல்வர் எழுதியது. SSLC தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள சூழலில் தமிழகப் பெற்றோர்கள் அவசியம் புரிந்து கொள்ள வேண்டிய செய்தியிது

பாவண்ணன் பாராட்டு விழா

நண்பரும் தமிழின் சிறந்த எழுத்தாளருமான பாவண்ணனைக்  கொண்டாடும் விதமாக மே 26 சனிக்கிழமை முழுநாள் கருத்தரங்கம் சென்னை கவிக்கோ மன்றத்தில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் பாவண்ணன் சிறுகதைகள். நாவல்கள், மொழிபெயர்ப்புகள் குறித்து விரிவான உரைகள் இடம்பெறவுள்ளன. நிகழ்வை அமெரிக்காவைச் சேர்ந்த p.k சிவக்குமார், மதுரை வெற்றிவேல், பெங்களுர் மகாலிங்கம் போன்ற நண்பர்கள் ஒருங்கிணைந்து நடத்துகிறார்கள். பாவண்ணனின் சிறுகதைகள் தனித்துவமிக்கவை. அவரது சிறுகதை தொகுப்பு சுஜாதா விருது பெற்றபோது அது குறித்து விரிவாக நான் உரையாற்றியிருக்கிறேன். எனது இல்லத் திருமணம் …

பாவண்ணன் பாராட்டு விழா Read More »

அநீதி

நேற்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மக்கள் நடத்திய போராட்டத்தில் போலீஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் எட்டு உயிர்கள் பலியாகியுள்ளன. கலவரக்காட்சிகளை வீடியோவில் பார்த்த போது எழுந்த கேள்வி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களா வாகனங்களுக்கு தீ வைக்கிறார்கள். யாரோ புல்லுருவிகள் ஊடுபுகுந்திருக்கிறார்கள்.. ஆனால் இதற்காக பழிவாங்கப்பட்டது போராட்டக்கார்களின் உயிர். துப்பாக்கியை உயர்த்தியபடியே வாகனத்தின் மீது பவனி வரும் காவலர்களைப் பாருங்கள். கார்ப்பரேட் நலம் காக்க எப்படி பணியாற்றுகிறார்கள் என்பது புரியும் . நூறு நாட்களுக்கும் மேலாக அமைதிவழியில் …

அநீதி Read More »

சொற்களின் தோகை

அனார் எனக்குப் பிடித்தமான கவிஞர். சூபி கவிதையுலகின் நவீன வடிவம் போன்றவை அவரது கவிதைகள். பெண் மனத்தின் ஆழ்தவிப்புகளை, மகிழ்ச்சியை, துயரை வெளிப்படுத்துகின்றன அவரது கவிதைகள். அனார் கிழக்கிலங்கையின் சாய்ந்த மருதுவில் வசித்துவருகிறார். சமகால தமிழ் கவிஞர்களில் மிக முக்கியமானவர். நான்கு கவிதை தொகுதிகளை வெளியிட்டிருக்கிறார். ஜின்னின் இரு தோகை கவிதைநூலை காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது அனாரின் கவிதைகள் அன்றாட வாழ்விலிருந்து தாவிப் பறப்பவை. அவர் புறஉலகின் நிகழ்வுகளை விடவும் அகவுலகின் தத்தளிப்புகளை, எழுச்சிகளையே அதிகம் எழுதுகிறார். …

சொற்களின் தோகை Read More »