பத்திரிக்கையாளரும் எழுத்தாளரும் அரசியல் விமர்சகருமான ஞாநி இன்று காலமானார்.
முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஞாநியோடு பழகியிருக்கிறேன். சிறந்த நண்பர். இலக்கியவாதிகளை மிகவும் நேசிக்ககூடியவர்.
அவர் நடத்திய கேணி நிகழ்வின் முதல் கூட்டத்தை நான் தான் துவக்கிவைத்தேன். சிறந்த பண்பாளர்.
அவரது மறைவிற்கு என் இதயப் பூர்வமான அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறேன்