ஆர். சிவக்குமார் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளர். தேர்ந்த இலக்கிய ஆய்வாளர். ஆங்கிலத்துறைப் பேராசிரியராக பணியாற்றி ஒய்வு பெற்றவர்.
90களில் மீட்சி இதழ்களில் லத்தீன் அமெரிக்கக் கதைகளைத் தொடர்ச்சியாக மொழியாக்கம் செய்து வந்தவர்.
அவர் தொகுத்த லத்தீன் அமெரிக்க சிறுகதைகள் மிக முக்கியமான நூல்.
சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான எஸ்.ஆர்.எம் விருது பெற்றிருக்கிறார்.
கடந்த 30 ஆண்டுகளில் அவர் மொழிபெயர்ப்பு செய்த சிறுகதைகள் யாவும் ஒரே தொகுதியாக பாதரசம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
அதில் உலகப்புகழ்பெற்ற 22 சிறுகதைகளை மிக நேர்த்தியாக மொழியாக்கம் செய்துள்ளார்.
இலக்கிய வாசகர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய நூலிது.
நூலைச் சிறப்பாக கொண்டுவந்துள்ள பாதரசம் பதிப்பகத்திற்கும் சரவணனுக்கும் அன்பும் வாழ்த்துகளும்
•••
இரண்டுவார்த்தைகளும் மூன்று துறவிகளும்
ஆர். சிவக்குமார்
பாதரசம் பதிப்பகம்
விலை ரூ275
கிடைக்குமிடம்
yavarum -176 & Puthinam books – 119 & Discovery book palace