admin

காட்சிகளுக்கு அப்பால்

கடந்த இரண்டு ஆண்டுகளுக்குள் நான் பார்த்து ரசித்த சிறந்த உலகப்படங்கள் பற்றிய கட்டுரைகள். விலை  : ரூ 75 தேசாந்திரி பதிப்பக வெளியீடு டிசம்பர் 25 மாலை 6 மணிக்கு ரஷ்யக் கலாச்சார மையத்தில் வெளியிடப்படயிருக்கிறது ••

கடவுளின் நாக்கு

தி இந்து நாளிதழில் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடராக வந்து மிகுந்த பாரட்டினைப் பெற்றன கடவுளின் நாக்கு தேசாந்திரி பதிப்பக வெளியீடாக வருகிறது. டிசம்பர் 25 மாலை 6 மணிக்கு ரஷ்யக் கலாச்சார மையத்தில் இதன் வெளியீட்டுவிழா நடைபெறுகிறது விலை  : ரூ 350 தேசாந்திரி பதிப்பக வெளியீடு ••

ரமேஷ் பிரேதனுக்கு உதவுங்கள்

நானும் கோணங்கியும் பாண்டிச்சேரி செல்லும் நாட்களில் ரமேஷை சந்தித்துப் பேசுவது வழக்கம். ஒருமுறை கருத்தரங்கிற்காகப் புதுவை போயிந்த போது என்னை ரமேஷ் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று உணவளித்து இரவு தங்க செய்தார்.  அன்று நிறையப் பேசிக் கொண்டிருந்தோம். ரமேஷ் பின்நவீனத்துவப் புனைவெழுத்தில் மிகச்சிறந்தவர். இருபது ஆண்டுகளுக்கும் மேலாக கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், விமர்சனக்கட்டுரைகள் எழுதிவருகிறார் பிரேம் ரமேஷ் இணைந்து செயல்பட்ட காலத்தில் தீவிரமான அலையொன்றை இலக்கியச்சூழலில் ஏற்படுத்தினார்கள். கடந்த சில ஆண்டுகளாக ரமேஷ் உடல்நலக்குறைவு …

ரமேஷ் பிரேதனுக்கு உதவுங்கள் Read More »

அமேஸானில் கவிஞர் பிரமிள்

எழுத்தாளர் விமலாதித்த மாமல்லன் முயற்சியால் கவிஞர் பிரமிளின் நூல்கள் தற்போது அமேஸானில் ஈபுக்காக விற்பனைக்கு கிடைக்கின்றன. ••• பிரமிள் (1939-1997), நவீன தமிழ் இலக்கியத்தின் சாதனையாளர்களில் குறிப்பிடத்தக்கவர். தருமு சிவராம் என்றும் அறியப்பட்டவர். காலாதீதத்திலும் இக்கணத்திலும் அலையும் அவருடைய கவிதையும் ஆய்வுக்கூர்மை, தீவிரம், பன் முகத்தன்மை நிறைந்த அவருடைய விமர்சனமும் அவரது இருபெரும் சிகரங்கள். மேலும் புனைகதை, நாடகம், ஓவியம், சிற்பம், ஆன்மீகம், மறை முக ஞானம் ஆகியவற்றிலும் அவரது ஆற்றலும் வெளிப்பாடும் உயரிய நிலையைப் பெற்றுள்ளன. …

அமேஸானில் கவிஞர் பிரமிள் Read More »

இளம்வாசகர்கள்

துணையெழுத்து வெளியான நாட்களில் அது குறித்து விக்னேஷ் என்ற இளைஞர் இணையத்தில் எழுதியுள்ள பதிவு. சமீபத்தில் இதை ஒரு பொறியியல் கல்லூரி மாணவி இந்த பதிவிலிருந்து என்னை தேடி வாசிக்க துவங்கியதாக கூறி விக்னேஷிற்கு நன்றி தெரிவித்திருந்தார். இளம்வாசகர்கள் எப்படி உருவாகிறார்கள் என்பதற்குச் சாட்சியமாக இதை மீள்பிரசுரம் செய்கிறேன் S.Ramakrishnan Posted by Vignesh Saturday, July 5, 2008 Can a book change lives? Can an author alter all the perceptions …

இளம்வாசகர்கள் Read More »

நீதி மறுக்கப்பட்டவர்களின் குரல்

முருகபூபதி   (ஆஸ்திரேலியா) சமகாலத்தில் எனக்கு மிகவும் பிடித்தமான எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். அவருடைய கட்டுரைகள், சிறுகதைகள், நாவல்கள் படித்திருப்பதுடன், உலக இலக்கியப்பேருரைகளும் காணொளிக்காட்சியாக பார்த்து ரசித்து வியந்துமிருக்கின்றேன். இடக்கை என்னும் இந்த நாவல், இந்தியாவின் கடைசி மொகாலய சக்கரவர்த்தியின் அந்திமகாலத்தைப்பேசும் கதை. ஆலம்கீர்  ஔரங்கசீப் பாதுஷா 1707 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி தனது 91 ஆவது வயதில் மறைந்திருக்கிறார் என்று வரலாற்று ஆசிரியர்கள் எழுதிய குறிப்புகளிலிருந்து பார்க்கின்றோம். இவ்வாறு துல்லியமாக அதற்கு முன்னர் …

நீதி மறுக்கப்பட்டவர்களின் குரல் Read More »