சுபமங்களாவில்
சுபமங்களா இதழ்கள் முழுமையாக இணையத்தில் வாசிக்க கிடைக்கின்றன. அதில் 1992ல் வெளியான எனது மொழிபெயர்ப்பு கதை
சுபமங்களா இதழ்கள் முழுமையாக இணையத்தில் வாசிக்க கிடைக்கின்றன. அதில் 1992ல் வெளியான எனது மொழிபெயர்ப்பு கதை
கவிஞர் ஷங்கர்ராமசுப்ரமணியன் வலைப்பக்கத்தில் வாசித்த இக்கட்டுரை மிகவும் பிடித்திருந்தது. சமகால தமிழ்கவிதையுலகில் ஷங்கர் தனித்துவமானர். அவரது சிறந்த கவிதைகளும் இந்த வலைப்பக்கத்திலுள்ளன. •• ஒரு நாள் புத்தர் தனது சீடன் ஆனந்தாவுடன் வனத்தைக் கடந்துகொண்டிருந்தார். அது கடுமையான கோடைக்காலம் என்பதால் புத்தருக்குத் தாகமாக இருந்தது. அவர், ஆனந்தனிடம், “கொஞ்சம் திரும்பிப் போனால், மூன்று நான்கு மைல் தூரத்தில் நாம் கடந்த ஒரு சிறு நீரோடை வரும். அதில் இந்தப் பிச்சைப் பாத்திரத்தில் நீர் மொண்டு வா. நான் மிகுந்த …
ஏப்ரல் 13 – எனது பிறந்த நாளை முன்னிட்டு தேசாந்திரி அலுவலகத்தில் நண்பர்களைச் சந்திக்க திட்டமிட்டிருக்கிறேன். விருப்பமான வாசகர்கள், நண்பர்கள் ஒன்று கூடி தேநீர் அருந்தும் நிகழ்வாக அமைக்கலாம் என எண்ணம். நிகழ்வின் சிறப்பாக சமீபத்தில் எழுதிய புதிய சிறுகதை ஒன்றினை வாசிக்க இருக்கிறேன். வாருங்கள், நாம் ஒன்றுகூடி கதை பேசுவோம். நேரம் : மாலை 5 மணி முதல் 7 : 30 வரை நாள் : 13.04.2018 வெள்ளிக்கிழமை முகவரி தேசாந்திரி பதிப்பகம் …
நைல் உலகின் மிக நீளமான ஆறு தான்சானியா, உகாண்டா, ருவாண்டா, புரூண்டி, காங்கோ, கென்யா, எத்தியோபியா, எரிட்ரியா, தெற்கு சூடான், சூடான், எகிப்து ஆகிய பதினோரு நாடுகளின் வழியாகப் பாய்ந்து மத்தியதரைக்கடலில் கலக்கின்றது. எகிப்து மற்றும் சூடான் ஆகியவை நைல் ஆற்றால் அதிகம் பயனடைகின்றன நைல் நதி வெள்ளை நைல், நீல நைல் என்ற இரண்டாகப் பிரியக்கூடியது. வடகிழக்கு ஆப்ரிக்காவில் இது தொடங்குகிறது. இரண்டில் வெள்ளை நைல் தான் மிக நீளமானது. இந்த நதி ருவாண்டா, புரூண்டி, …
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை வேண்டுமென்றே மத்திய அரசு தாமதிக்கிறது. அரசியல் சுயலாபத்திற்காக விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் வன்முறையிது. தமிழக விவசாயிகள் நதிநீர் பிரச்சனையில் நீதிக்காக பல்லாண்டுகளாக காத்துகிடக்கிறார்கள். உச்சநீதிமன்றம் நீதி வழங்கிய போதும் நடைமுறைப்படுத்த மத்திய அரசு மறுக்கிறது. இதனைக் கண்டித்து தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் தொடர்போராட்டங்களை ஆதரிக்கிறேன். இது விவசாயிகளின் பிரச்சனையில்லை. ஒட்டுமொத்த தமிழகத்தின் பிரச்சனை. உரிமைகளுக்காக போராடும் விவசாயிகளுடன் நாம் கரம் கோர்த்து நிற்க வேண்டிய காலமிது. மத்திய அரசின் இந்த …
நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் தனது புகழ்பெற்ற நாவலான தனிமையின் நூற்றாண்டுகளைப் படமாக்குவதற்கான உரிமையை வழங்க மறுத்துவிட்டார். வாசகர் மனதில் அந்த நாவல் பெற்றுள்ள கற்பனையான வடிவத்தைச் சினிமா சிதைத்துவிடும் என்பதே காரணம். தனிமையின் நூறு ஆண்டுகள் (One Hundred Years of Solitude) நாவல் 1967இல் வெளியானது. மூன்று கோடி பிரதிகளுக்கும் மேல் விற்றுள்ளதாகக் கருதப்படும் இந்நாவல் இதுவரை 37 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. தமிழில் கவிஞர் சுகுமாரன் இதனை மொழியாக்கம் செய்துள்ளார். …
தி இந்து நாளிதழில் பிரபஞ்சன் எழுதி வரும் எமதுள்ளம் சுடர்விடுக பத்தியில் நான் ஆற்றிய உலக இலக்கியப் பேருரைகளின் தொகுப்பு நூல் பற்றி சிறப்பாக எழுதியிருக்கிறார். பிரபஞ்சன் அவர்களுக்கு அன்பும் நன்றியும் •• உலக இலக்கியப் பெரும் ஆளுமைகள் பற்றித் தமிழ்ச் சூழலில் ஆக்கபூர்வமாக அறிமுகப்படுத்தும் பெரும் பணியில் பல காலமாக ஈடுபட்டு வருபவர் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். அண்மையில் அவர் நிகழ்த்திய இலக்கியப் பேராசான் டால்ஸ்டாய், ஷேக்ஸ்பியர், ஹோமர், ஹெமிங்வே, பாஷோ, அரேபிய இரவுகள், தஸ்தாயெவ்ஸ்கி ஆகியோர் …
தமிழில் ஜப்பானிய இலக்கியம் அறிமுகமான அளவிற்குச் சீன இலக்கியம் அறிமுகமாகவில்லை. ஜென் கவிதைகள். ஹைக்கூ கவிதைகள் தமிழில் அதிகம் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டிருக்கின்றன. ஜென் கவிதைகள் குறித்து நான் கூழாங்கற்கள் பாடுகின்றன என்ற கட்டுரை தொகுதி ஒன்றை எழுதியிருக்கிறேன். அதில் பாஷோ, ரியோகான் என முக்கியமான ஜென் கவிஞர்களின் கவிதையுலகை அறிமுகம் செய்திருக்கிறேன். பாஷோவின் கவிதையுலகம் பற்றி விரிவான உரையொன்றையும் சென்னையில் நிகழ்த்தியிருக்கிறேன். அது தற்போது டிவிடியாகவும் கிடைக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பாக வாரிச்சூடினும் பார்ப்பவரில்லை என்ற பயணியின் …
கல்லூரி நாட்களில் நோபல் பரிசு பெற்ற கவிஞர் டி.எஸ். எலியட்டின் வேஸ்ட் லேண்ட் கவிதையைப் பாடமாக வாசித்திருக்கிறேன். பின்பு எலியட்டின் (T.S.Eliot) கட்டுரைகளைப் பலமுறை விரும்பி வாசித்திருக்கிறேன். ஆனால் கல்லூரி நாட்களில் ஒரு பேராசியர் கூட எலியட்டின் வாழ்க்கை குறித்தோ, அவருக்கும் எஸ்ரா பவுண்டிற்குமான நட்பு குறித்தோ, யார் வேஸ்ட் லேண்ட் என்ற கவிதையின் தலைப்பை வைத்தவர் என்றோ எதுவும் சொல்லிக் கொடுத்ததில்லை. பாடமாக இலக்கியம் கற்கும் போது மதிப்பெண் மட்டுமே முதன்மையாகி விடுகிறது. ரசித்து ரசித்து …