கோபமெனும் முகத்திரை
A Man Called Ove ஸ்வீடிஷ் நாட்டுத் திரைப்படம். 2012ல் Fredrik Backman எழுதிய நாவலை திரைப்படமாக்கியிருக்கிறார்கள். இது ஒரு Feel-Good Movie. 59 வயதான உவே தனியே வசிக்கிறார். மிகுந்த கோபக்காரர். அவர் வசிக்கும் காலனியில் சின்னஞ்சிறு தவறுகள் நடந்தால் கூடச் சண்டை போடக்கூடியவர். அவரும் நண்பர் ரூனும் இணைந்து அந்தக் காலனிக்கான நல சங்கத்தை உருவாக்கினார்கள். ரூன் சுயநலமாக நடந்து கொண்டு அவரைச் சங்க பொறுப்பிலிருந்து நீக்கிவிடுகிறார். ஆனாலும் உவே விதிகளைக் கறாராகக் கடைபிடிக்கக் …