சஞ்சாரம்-அலைக்கழிப்பின் தனிமை
மோனிகா மாறன் எஸ்.இராமகிருஷ்ணனின் சஞ்சாரம் மனித மனங்களின் சிதறல்களை,வாழ்வின் தவிர்க்க இயலா யதார்த்தத்திற்கும்,மனங்களின் எல்லைகளுக்குமிடையிலான போராட்டங்களைக் காண்பிக்கிறது. பக்கிரியின் கதை நாதஸ்வரம் வாசிக்கும் கலைஞனின் சுயமரியாதையை வெளிப்படுத்துகிறது. “மனுசன் அற்பப்புழு, இசைக்கு தாய்ப்பாலு நாதஸ்வரம்” கலையை நேசிக்கும் மனிதர்களின் மனதில் தான் இப்படிச் சொற்கள் உருவாகும். எலுமிச்சை மணம் என்பது கடந்த காலத்தையும் நினைவுகளையும் இணைக்கும் மரணத்தை மாலிக்கபூருக்கு அளிக்கிறது லட்சய்யாவின் இசை.உண்மையில் எல்லா மனங்களின் ஆழங்களும் ஏதோ ஒரு வாசத்தில் மரணத்தை,காலங்களை நினைவூட்டும்.மணம் என்பதே இங்கு …