எனக்குப் பிடித்த கதைகள் 4
மணல் புத்தகம்-சிறுகதை : போர்ஹேஸ் தமிழில் : க.செண்பகநாதன் …… மணலைக் கயிறாகத் திரித்து ….. (-ஜார்ஜ் ஹெர்பர்ட் – 1593-1623) கணக்கிலடங்காத புள்ளிகளை ஒருங்கே கொண்டது ஒரு கோடு; எண்ணிக்கையற்ற பல கோடுகளை கொண்டது ஒரு சமவெளி; கணக்கிலடங்கா சமவெளிகள் ஒரு கண பரிமாணம்; எண்ணற்ற கணபரிமாணங்கள் பெருத்த அதிகனமான பரிமாணமாகும்…. இவ்வாறாக கூறுவது சரியானதல்ல – இது நிலவியல் கணக்கைப் போல் இருப்பதால் கதையை கூறுவதற்கு உகந்த முறையல்ல. கற்பனைக் கதையே மெய்யான கதையென்ற …
எனக்குப் பிடித்த கதைகள்- 3
யுத்தம்– லூய்கி பிரண்ட்லோ (luigi pirandello) தமிழில் நிருத்தன் ரோமிலிருந்து இரவு நேர பெரு ரயிலில் புறப்பட்டவர்கள் இந்த பழைய ஃபாப்ரியனோ புகைவண்டி நிலையத்தில் வந்து இறங்கி, சல்மோனாவுக்கு அந்த பழங்கால இணைப்பு ரயில் பெட்டியில் விடியல்வரை – பயணத்தை தொடர காத்திருக்க வேண்டி இருந்தது. அந்த விடியலில், புகை அப்பி நெடி அடிக்கும் ஒரு இரண்டாம் வகுப்பு பெட்டியில் – ஏற்கனவே ஐந்துபேர் தங்கள் இரவை கழித்து இருந்த அந்த கம்பார்ட்மெண்டில் துக்கம் அனுஷ்டித்தபடிவந்த அந்த …
பிறந்த நாள்
இன்று (13.04.2015) எனது பிறந்த நாள். தொலைபேசியிலும் மின்னஞ்சலிலும் வாழ்த்துகளைத் தெரிவித்த எழுத்தாளர்கள், நண்பர்கள், வாசகர்கள் அனைவருக்கும் மனம் நிரம்பிய நன்றி. ••
எனக்குப் பிடித்த கதைகள் 2
பூங்காக்களின் தொடர்ச்சி ஹுலியோ கொர்த்தஸார் மொழிபெயர்ப்பு: ராஜகோபால் சிலநாட்களுக்கு முன்புதான் அவன் அந்த நாவலைப் படிக்கத் தொடங்கினான். அவசர வியாபாரச் சந்திப்புகளின் நிமித்தம் அதை அவன் பாதியில் நிறுத்த வேண்டியிருந்தது. அவனுடைய எஸ்டேட்டிற்குத் திரும்பும் வழியில் ரயிலில், அதை அவன் மீண்டும் திறந்தான். கதை நிகழ்வில், கதாபாத்திரங்களின் சித்தரிப்பில் மெதுவாக ஆர்வம் வளார்வதற்குத் தன்னை அனுமதித்துக் கொண்டான். பிற்பகலில், அவன் சார்பாகச் செயலாற்றும் அதிகாரத்தை வழங்கும் ஒரு கடிதத்தை …
எனக்குப் பிடித்த கதைகள் 1
பால்மணம் ஜப்பானியச் சிறுகதை எழுதியவர்- அகுடாகாவா[ RYUNOSUKE AKUTAGAWA] தமிழாக்கம்: கவிஞர் வைதீஸ்வரன் ஷின்சுகே பிறந்ததிலிருந்து தாய்ப்பாலைச் சுவைத்ததேயில்லை. அவன் பிறந்ததிலிருந்தே அவன் தாய் மிகவும் பலஹீனமானவளாக பால்சுரப்பில்லாமல் இருந்தாள். குழந்தைக்குப் பால் கொடுப்பதற்காக செவிலித்தாயை ஏற்பாடு செய்யவேண்டுமென்றால் அதற்குப் பணம் தேவையாக இருந்தது. அவளுக்கு அவ்வளவு வசதியில்லை. ஆகை யால் ஷின்சுகே பசும்பால் குடித்துத்தான் வளரவேண்டியிருந்தது. இப்படி தாய்ப்பால் சுவையறியாமல் வளர்ந்த குழந்தைப் பருவத்தை நினைத்து அவன் எப்போதும் சபித்துக் கொள்ளாமல் இருந்ததே யில்லை தினமும் …
நேர்காணல்
ஞாயிறு(05.04.2015) அன்று தி இந்துவில் வெளியான எனது நேர்காணல். இதன் முழுமையான வடிவம் ‘தி இந்து’ சித்திரை மலரில் வெளியாகிறது. நேர்காணல் செய்தவர் கவிஞர் சங்கர ராம சுப்ரமணியன் ••• தொண்ணூறுகளின் தொடக்கத்தில் தமிழ் உரைநடையிலும் சிறுகதைகளிலும் பெரும் மாற்றத்தை உருவாக்கிய எழுத்தாளர்களில் ஒருவர் எஸ். ராமகிருஷ்ணன். உலக இலக்கியங்கள், சர்வதேசத் திரைப்படம் ஆகியவற்றின் மீது தமிழ் சமூகத்தின் கவனத்தைக் குவித்ததில் எஸ்.ராமகிருஷ்ணனுக்குப் பெரும் பங்கு உண்டு. மகாபாரதத்தை அடிப்படையாக வைத்து இவர் எழுதிய ‘உப பாண்டவம்’ …
சிஹாபுதினின் கதைகள்
சமகால மலையாளச் சிறுகதை இலக்கியத்தில் புதியதொரு எழுத்துவகையை உருவாக்கியவர் சிஹாபுதின் பொய்த்தும்கடவு. நாவலாசிரியர், கவிஞர், பத்திரிக்கையாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் இயக்குனர் எனப் பன்முகப்பட்ட ஆளுமை. இவரது பனிரெண்டு சிறுகதைகளின் தொகுப்பாக யாருக்கும் வேண்டாத கண் வெளியாகியுள்ளது. தினசரி வாழ்க்கையைக் கவிதைகள் கையாளுவது போல உருவகத்தளத்திலோ, அரூபமாக்கியோ, பன்முகப்படுத்தியோ சிறுகதைகளாக உருவாக்குகிறார் சிஹாபுதின். இது ஒருவகை மாய யதார்த்த எழுத்து. ஆனால் கேப்ரியல் கார்சியா மார்க்குவெஸ் வகையிலிருந்து மாறுபட்டது. கவித்துவமான, இந்திய புராணீக மரபிலிருந்து உருவாகி வந்த நீட்சி போன்ற …
இசையின் வழி
கண்டிப்பான ஆசிரியர்களே மிகச்சிறந்த மாணவர்களை உருவாக்க கூடியவர்கள் என்பார்கள். அதிலும் இசை கற்றுக் கொள்ளும் போது சரியான குரு கிடைத்து விட்டவர்கள் பாக்கியசாலிகள். உலகப்புகழ் பெற்ற இசை மேதையான பீத்தோவனைச் சிறுவயதில் அவரது தந்தை ஒரு நாளைக்குப் பலமணிநேரம் தொடர்ச்சியாக ப்யானோ மற்றும் வயலின் வாசிக்கச் சொல்லி கட்டாயப்படுத்துவாராம். கால் கடுக்க நின்றபடி வயலின் வாசிக்கும் போது வலி பொறுக்க முடியாமல் பீத்தோவன் அழுதால் பிரம்படி விழும். காரணம் பீத்தோவனை இளம்வயதிலே மேதையாக முன்னிறுத்த வேண்டும் என்ற …
உனக்கு 34 வயதாகிறது
– சிறுகதை “உனக்கு 34 வயசாச்சி, நினைவிருக்கில்லே“ என்று அப்பா அவளிடம் கேட்டபோது சுகந்தி அலுவலகம் கிளம்பிக் கொண்டிருந்தாள். சற்று ஆத்திரத்துடன் தலையைத் திருப்பி அப்பாவை பார்த்து முறைத்தபடியே அதுக்கு என்ன என்று கேட்டாள். அப்பா பேப்பர் படிப்பது போலத் தலைகவிழ்ந்து உட்கார்ந்திருந்தார். அது ஒரு தந்திரம், சீண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் செயல். அலுவலகத்திற்கு நேரமாகிவிட்டது என்பதால் அப்பாவோடு சண்டை போட அவளுக்கு விருப்பமில்லை, ஒய்வு நாளாக இருந்தால் நிச்சயம் இது சண்டையில் தான் போய் முடிந்திருக்கும். …