காதலின் சங்கீதம்
வாங் கார் வாயின் IN THE MOOD FOR LOVE படத்தில் இடம் பெற்றுள்ள Yumeji’s theme கேட்டிருக்கிறீர்களா. காதலைக் கொண்டாடும் மிகச்சிறந்த பின்னணி இசைக் கோர்வை. மனம் சலித்துப்போகும் நேரமெல்லாம் இதை திரும்பத் திரும்ப கேட்கிறேன். வாங் கார் வாயின் “IN THE MOOD FOR LOVE ஆசிய சினிமாவின் சாதனை. ஹாங்காங்கில் 1960களில் நடைபெறுகிற மாறுபட்ட காதல் கதை. ஒளிப்பதிவாளர் Christopher Doyle, வண்ணங்களை பயன்படுத்தும் வித்திலும் காட்சிக்கோணங்களிலும் புதியதொரு அனுபவத்தை உருவாக்கி தருகிறார், …