சஞ்சாரம் விமர்சனம்
– அழகியசிங்கர் சமீபத்தில் நான் படித்த ஒரு நாவல் எஸ் ராமகிருஷ்ணனின் சஞ்சாரம் . 375 பக்கங்கள் கொண்ட இந் நாவலைப் படிக்க சில நாட்கள் ஆயிற்று. ஒரே சமயத்தில் இப்போதெல்லாம் என்னால் ஒரு புத்தகத்தைப் படிக்க முடியவில்லை. இந் நாவல் குறித்து இரண்டு கருத்துகளை அறிய முடிந்தது. இப்புத்தக வெளியீட்டுக் கூட்டத்திற்கு நான் சென்றேன். இந் நாவலைப் பற்றி ராமகிருஷ்ணன் ஒன்று சொன்னார். அவருக்கு இசையைப் பற்றி ஒன்றும் தெரியாதாம். இசையை ரசிப்பது வேறு; இசையைப் …