ஒவியங்களும் புகைப்படங்களும்
இளம்புகைப்படக்கலைஞர்களுக்காக உலகப்புகழ்பெற்ற ஒவியங்கள் மற்றும் புகைப்படங்கள் குறித்த உரை ஒன்றினை சனிக்கிழமை (26/07/2014) காலை கே.கே.நகரில் உள்ள சாதனா நாலெட்ஜ் பார்க்கில் நிகழ்த்தினேன். இந்த நிகழ்விற்காகத் தமிழகம் முழுவதுமிருந்து 30 புகைப்படக்கலைஞர்கள் வந்திருந்தார்கள். எனது நண்பர்கள் புகைப்படக்கலைஞர் பிரபு காளிதாஸ், விகடன் பொன்காசி ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள். சிறப்பு விருந்தினராக நண்பர் ஞாநி வருகை தந்தார். மும்பையில் வசிக்கும் புகைப்படக்கலைஞரான ஜெய்சிங் தனது நண்பர்களுடன் இந்நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தார். ஒரு மணி நேர உரையும் அதைத்தொடர்ந்த …