admin

கும்பல்

ஜெயகாந்தன் ஒரு சொற்பொழிவில் இப்படிக் குறிப்பிடுகிறார், கும்பல் என்பது கூடிக் கலைவது; கூட்டம் என்பது கூடி வாழ்வது. கும்பல் என்பது கூடி அழிப்பது, கூட்டம் என்பது கூடி உருவாக்குவது. வன்முறையையும் காலித்தனத்தையும் கும்பல் கைக்கொள்ளும்; ஆனால், சந்திக்காது. கூட்டம் என்பது அடக்குமுறையையும், சர்வாதிகாரத்தையும் நெஞ்சுறுதியோடு சாத்வீகத்தாலும், சத்யாக்கிரகத்தாலும் சந்திக்கும். கும்பலுக்கு எல்லாமே ஒரு வேடிக்கை. மரணம் உட்பட. கூட்டம் இனிது கூடும்.; இனிது நிறைவேறும். கும்பல் எதற்கு என்று தெரியாமல் கூடும்; எப்படி என்று தெரியாது கலையும். …

கும்பல் Read More »

கோகோலின் பெயரால்

கோகோல் (Gogol) என்ற பெயரை வங்காளிகள் தங்கள் பிள்ளைகளுக்கு ஆசையாகப் பெயரிடுகிறார்கள் இரண்டு வங்கச் சிறுகதைகளைச் சமீபமாகப் படித்தேன், ஒன்று Samaresh Basu எழுதியது, மற்றொன்று Sirshendu Mukhopadhyay சிறுகதை, இரண்டிலும் அதன் முக்கியக் கதாபாத்திரத்தின் பெயர் கோகோல் இது போலவே ஜும்பா லஹரியின் The Namesake நாவலின் கதாநாயகன் பெயரும் கோகோல், நாவலில் கோகோல் ரஷ்யாவின் அடையாயச்சின்னம் போலவே சித்தரிக்கபடுகிறார். டால்ஸ்டாய், தஸ்தாயெவ்ஸ்கி, செகாவ், கார்க்கி போன்ற ரஷ்ய எழுத்தாளர்கள் கவனிக்கபட்ட அளவிற்குத் தமிழ் சூழலில் …

கோகோலின் பெயரால் Read More »

களக்காடு

நிலக்காட்சிகளை வரைவதில் தேர்ச்சி பெற்ற தாமஸ் டேனியல், வில்லியம் டேனியல் என்ற இரண்டு பிரிட்டிஷ் ஒவியர்கள் 1792ல் கன்னியாகுமரி பகுதியில் பயணம் செய்த போது களக்காடு கோவிலை ஒவியமாக வரைந்திருக்கிறார்கள் 222 வருஷங்களுக்கு முந்தைய தமிழகத்தின் அரிய ஒவியக்காட்சியது, மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரப் பகுதியில் உள்ளது களக்காடு. இங்குள்ள  சத்யவாகீஸ்வரர் கோவில் அழகிய ஒவியங்களும் இசைத் தூண்களும் சிற்பங்களும் கொண்டது,  கி.பி. 12ஆம் நூற்றாண்டில் வீரமார்த்தாண்ட வர்மன் என்னும் மன்னனால் கட்டப்பட்டது. சுற்றிலும் பசுமையான வயல்களையும், …

களக்காடு Read More »

செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம்

செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம் சிரித்தது எனைப் பார்த்து என்ற வேதா இசையில் சுசிலா, டிஎம்எஸ் பாடிய நான்குகில்லாடிகள் படப் பாடலை காலையிலிருந்து கேட்டுக் கொண்டிருக்கிறேன், திடீரென இப்படி ஏதாவது ஒரு பாடல் நினைவில் வந்துவிடும், அன்று முழுவதும் அந்தப்பாடலைக் கேட்டுக் கொண்டேயிருப்பேன், வீட்டில் உள்ளவர்கள் அலுத்துப் போய் ,கேட்டது போதும் அணைத்துவிடுங்கள் என்று திட்டும் போதும் பாட்டை முழுமையாகக் கேட்ட திருப்தி வராது எதற்காக இப்படி ஒரே பாடலை மாறி மாறி கேட்டுக் கொண்டிருக்கிறேன் என எனக்கே …

செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம் Read More »

திருவண்ணாமலை

இன்று திருவண்ணாமலை செல்கிறேன் பவா மற்றும் நண்பர்களைச் சந்திப்பதுடன் ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன் நாளையும் திருவண்ணாமலையில் இருப்பேன் ••

ஏழு தலை நகரம் – மகிழ்விக்கும் கற்பனை

– லேகா உலக இலக்கியம், உலக சினிமா,பயண அனுபவங்கள் என எஸ்.ராவின் அனுபவ தேடல்கள் பலவற்றுள் இருந்து வேறுபட்டு குழந்தைகளுக்கான மிகுந்த கற்பனை,தந்திரங்கள்,மாயாஜாலங்கள் நிறைந்தது இந்நாவல். இரும்புக்கை மாயாவி” ,”வேதாள கதைகள்” ,”சிந்துபாத்” என சிறு பிராயத்தில் படித்த கதைகளை மீண்டும் நினைவில் கொண்டும் இந்நாவலின் கதையாடல் முற்றிலும் ஒரு புதிய அனுபவம். குழந்தைகளுக்கான வாசிப்பு வெளிகள் முற்றிலும் சுருங்கிய இன்றைய சூழலில் ஆனந்த விகடனின் இம்முயற்சி பாராட்டுதலுக்குரியது தற்கால நிகழ்வாகவே சொல்லப்படும் இந்நாவலின் கதையாடல் எங்கோ …

ஏழு தலை நகரம் – மகிழ்விக்கும் கற்பனை Read More »

நிமித்தம் : புறக்கணிப்பின் துக்கம்

கேசவமணி *** வாழ்க்கையில் பிறர் நமக்குச் செய்யும் அவமானங்களும், துரோகங்களும் வலி நிரம்பியவைதான் என்றாலும், அவைகள் புறக்கணிப்பின் துக்கத்தைப் போல அவ்வளவு வலி நிறைந்ததல்ல. நாம் வாழ்க்கையில் ஏதாவது ஒரு கட்டத்தில் புறக்கணிப்பின் துன்பத்திற்கு ஆளாகிறோம். ஆனாலும், ஒரு காது கேளாதவனின் புறக்கணிப்பின் துக்கத்தை நாம் ஒரு போதும் உணர முடியாது. அதை அந்த உலகத்தில் இருப்பவர்களால் மட்டுமே தெரிந்துகொள்ள முடியும். ஆனால் தேவராஜ் எனும் காது கேளாத மனிதனின் துக்கத்தை, வலியை, வேதனையை எஸ்.ராமகிருஷ்ணன் உணர்வுப் …

நிமித்தம் : புறக்கணிப்பின் துக்கம் Read More »

அஞ்சலி: தி.க.சி

தமிழ் இலக்கிய உலகின் மூத்த விமர்சகரும், சிறந்த பண்பாளருமான தி.க.சி காலமடைந்த செய்தி கேட்டு தாளமுடியாத துயரமடைந்தேன் இலக்கியத்திற்காகவே வாழ்ந்த அபூர்வமான மனிதர் தி.க.சி,  புதிய எழுத்தாளர்களை அவர் போல வழிநடத்தக்கூடியவர் எவருமில்லை,  அவரது பாராட்டுக் கடிதம் பெறாத எழுத்தாளர்கள் எவருமில்லை, பேரன்பு கொண்ட மனிதர். தி.க.சி ஒரு தனிநபரில்லை அவர் ஒரு இலக்கிய இயக்கம், அவர் உருவாக்கிய எழுத்தாளர்கள், தீவிர வாசகர்கள், ஊடக செய்தியாளர்கள் என நிறைய இருக்கிறார்கள், எனது முதல் கதை வெளியான போது …

அஞ்சலி: தி.க.சி Read More »

ஒவிய உலகில்

சென்னை லலித் கலா அகாதமியில் நடைபெற்று வரும் Regional Art Exhibition 2014 பார்ப்பதற்காகச் சென்றிருந்தேன், ஏழு மாநிலங்களைச் சேர்ந்த இளம் ஒவியர்களின் அரிய ஒவியங்கள், சிற்பங்கள் காட்சிக்கு வைக்கபட்டிருந்தன, இரண்டாயிரத்துக்குப் பிறகு இந்தியாவின் நவீன ஒவியஉலகில் தொழில்நுட்பத்தின் தாக்கம் மிக அதிகமாகயிருப்பதைப் பலரது ஒவியங்களில் காணமுடிகிறது, நிறத்தேர்வு. காட்சிக்கோணம், உருவங்களைச் சிதறடிக்கும் விதம், லயம் போன்றவற்றில் தொழில்நுட்பத்தின் பாதிப்பு மேலோங்கியிருக்கிறது. அதே நேரம் மேற்குலகின் பாதிப்பிலிருந்து விலகி தங்களுக்கான தனித்தன்மையுடன் சில இளம் ஒவியர்கள் அசலாக …

ஒவிய உலகில் Read More »

வெற்றிகரமான முகாம்

கதைகள் பேசுவோம் இலக்கிய முகாம் மிகச்சிறப்பாக நடைபெற்றது, நிகழ்வில் 175 பேர் கலந்து கொண்டார்கள், இதில் எழுபது சதவீதம் பேர் இளைஞர்கள், தீவிர வாசிப்பில் ஆர்வம் கொண்டவர்கள், பெங்களுர், புதுக்கோட்டை, திருச்சி, சேலம், கோவை என வேறுவேறு ஊர்களில் இருந்து வந்து நிகழ்வில் கலந்து கொண்டார்கள் மூன்று அமர்வுகளாக நடைபெற்ற இந்த முகாமிற்கு இயக்குனர் சசி, ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சன், பேராசிரியர் ராமகுருநாதன், ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்கள் எழுத்தாளர்கள் பாஸ்கர் சக்தி, அகநாழிகை வாசுதேவன், …

வெற்றிகரமான முகாம் Read More »