லெபனான்
சமீபத்தில் பார்த்த இஸ்ரேலியத்திரைப்படம் லெபனான், முழுப்படமும் ஒரு பீரங்கி வண்டிக்குள்ளாகவே எடுக்கப்பட்டிருப்பது இதன் முதற்சிறப்பு, பீரங்கிவண்டியை ஒரு வலிமையான போர்கருவியாக மட்டுமே அறிந்து வைத்திருந்த நமது பொதுப்புத்தியை இப்படம் கேள்விக்குள்ளாக்குகிறது, யுத்த முனையில் பீரங்கிகள் கடந்து போவதையும் அவை இலக்குகளைத் தாக்கி அழிப்பதையும் பல படங்களில் பார்த்திருக்கிறோம், ஆனால் பீரங்கி வண்டி என்பது ஒரு தனியுலகம், அந்த வாகனத்தினுள் நாலு போர்வீரர்கள் பகலிரவாகத் தங்கியிருக்கிறார்கள், இலக்கைக் குறிவைத்துத் தாக்க ஒருவர், வண்டியை இயக்க மற்றவர், யாரைத் தாக்குவது …