admin

புத்தகங்களை என்ன செய்வது

To add a library to a house is to give that house a soul. Your library is your portrait. – Cicero புத்தகங்களைச் சேர்த்து வைப்பதால் ஒரு பயனுமில்லை, வீட்டில் உள்ள அலமாரி தான் அடைந்து போகிறது அதனால் படித்தவற்றைத் தூக்கி வெளியே போடுங்கள் என்று வீட்டோர் சொல்கிறார்கள், தூக்கி எறிய மனமில்லை, ஆனால் வைத்துக் கொள்ளவும் இடமில்லை , இதனால் வீட்டில் அடிக்கடி சண்டை வருகிறது, படிப்பது சரி …

புத்தகங்களை என்ன செய்வது Read More »

உலகம் ததும்பும் ஒசை

நோபல் பரிசு பெற்ற ஜப்பானிய எழுத்தாளரான யாசுனாரி கவாபத்தாவின் நோபல் ஏற்புரையில் தான் முதன்முறையாக  தோஜென் (Priest Dogen) என்ற மதகுருவைப்பற்றி விரிவாக அறிந்து கொண்டேன், முன்னதாக அவரது ஒன்றிரண்டு ஜென் கவிதைகளை தொகுப்பில் வாசித்திருந்த போதும் அவர் மீது தனித்த கவனம் குவிந்ததில்லை, பாஷோ தான் எனக்கு மிகவும் நெருக்கமான கவி. ஆனால் கவாபத்தாவின் நோபல் உரை அதுவரையான எனது  ஜென் கவிதைகள் பற்றிய மதிப்பீட்டினை அப்படியே உருமாற்றுவதாக அமைந்தது, கடந்த இருபத்தைந்து வருசங்களில் நோபல் …

உலகம் ததும்பும் ஒசை Read More »

சில ஆவணப்படங்களும் நானும்

ஆவணப்படங்களுக்கு (DOCUMENTARY) எழுத்தாளராகயிருப்பது என்பது ஒரு புதிரான வேலை. பெரும்பாலும் அது ஆய்வுப்பணியாகவே இருக்கும். ஆனால் ஆய்வுவிபரங்களில் சிறு பகுதி கூட முறையாக படத்தில் பயன்படுத்தபட மாட்டாது. பெரும்பான்மையான ஆவணப்பட இயக்குனர்கள் நேர்காணல் எடுப்பதையே தங்களது படத்தின் பிரதானப் பகுதியாகக் கொண்டுவிடுகிறார்கள். இதற்கு உறுதுணை செய்வது போல கொஞ்சம் ஆய்வுக் குறிப்புகள். சுவாரஸ்யமான தகவல்கள் இருந்தால் போதுமானது என்றே நினைக்கிறார்கள். தமிழில் விவரணப்படங்கள் என்றாலே புலனாய்வு பத்திரிக்கையாளர்களின் வேலையைப் போல ஏதோ அதிர்ச்சி தரக்கூடிய, அறியப்படாத தகவல்கள் …

சில ஆவணப்படங்களும் நானும் Read More »

அம்மாவின் மௌனம்

Tokyo Tower: Mom and Me, and Sometimes Dad என்ற ஜப்பானியப் படத்தை பார்த்தேன், நீண்ட நாட்களுக்குப் பிறகு மனதைப் பாரமேறச்செய்துவிட்ட அற்புதமான படமிது, அம்மாவிற்கும் மகனுக்குமான உறவைப் பற்றி எவ்வளவோ படங்கள் வெளியாகியிருக்கின்றன, அம்மாவைப் பற்றி ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு உணர்ச்சி ததும்பும் பிம்பம் இருக்கிறது, இலக்கியத்திலும் அம்மாவின் அன்பும் பிரியமும் பற்றி நிறையவே எழுதப்பட்டிருக்கிறது, அநேகமாக உணர்ச்சிவசப்பட வைக்கும் பெரும்பான்மைக் கதைகள். கவிதைகள் அம்மாவின் நினைவு குறித்து எழுதப்பட்டவையே. பால்யவயதில் எப்போது நாம் பெரிய …

அம்மாவின் மௌனம் Read More »

தாகூரும் கலாப்ரியாவும்

கவிஞர் கலாப்ரியாவின் ஒடும் நதியை வாசித்துக் கொண்டிருந்தேன், குங்குமம் இதழில் தொடராக வந்த போது வாசித்திருந்தாலும் ஒரே புத்தகமாகப் படிக்க நன்றாக இருக்கிறது, அந்திமழை பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது, மருதுவின் அரிய ஒவியங்களுடன் உருவாக்கப்பட்ட சிறப்பான புத்தகமது, கலாப்ரியாவின் உரைநடை  தன்னியல்பான  வசீகரத்துடனிருக்கிறது .  இந்தப் புத்தகத்திற்கு வண்ணதாசன் எழுதியுள்ள முன்னுரை சமீபத்தில் நான் படித்த மிகச்சிறந்த முன்னுரை, வரிக்கு வரி  அடிக்கோடிடத் தூண்டுகிறது, எனது புத்தகங்களுக்கு நானே முன்னுரை எழுதிக் கொள்கிறேன், வேறு எவரும் எழுதியதேயில்லை, இப்போது …

தாகூரும் கலாப்ரியாவும் Read More »

பைத்தியக்காரனின் குறிப்புகள்

பைத்தியக்காரனின் குறிப்புகள்  என்ற லூசுன் (lu xun ) கதையை வாசித்திருக்கிறீர்களா. மிக முக்கியமான சீனத்துச்சிறுகதை. போர்க்குரல் என்ற லூசுன் சிறுகதைத்தொகுப்பில் இக்கதை உள்ளது, இதைத் தமிழாக்கம் செய்திருப்பவர் கே.கணேஷ்.  உலகின் சிறந்த சிறுகதைகளில் ஒன்றாக இக்கதை கொண்டாடப்படுகிறது. அவசியம் வாசிக்கப்பட வேண்டிய சிறுகதை. எனக்கு லூசுனைப் பிடிக்கும், காரணம் அவரும் ஆன்டன் செகாவைப்போல ஒரு மருத்துவராக இருந்து எழுத்தாளர் ஆனவர். இருவர் கதைகளிலும் பெண்களே பிரதானமானவர்கள். ஒருவகையில் இவரைச் சீனாவின் செகாவ் என்று சொல்வேன். ஆனால் …

பைத்தியக்காரனின் குறிப்புகள் Read More »

யாமம் – தமிழ்மகன் விமர்சனம்

 ஒரு நாவலுக்குள் ஐந்து நாவல்கள்  பகலை அப்படியே புரட்டிப் போட்டுவிடுகிறது இரவு. விழித்துக் கொண்டிருந்த மனிதர்கள் தூங்குகிறார்கள்.. இது வெளிப்படையான வித்தியாசம். இரவை உரித்துக் கொண்டே போகலாம். நல்லவர்களாக இருந்த பலர் கெட்டவர்களாக உருமாறுவார்கள். ஒழுக்கம் சற்றே வழுக்கும். நெறிமுறைகள் நகர்ந்து கொள்ளும். சபலங்கள் கண்விழிக்கும்… இரவு மனதின் விருப்பத்துக்கு நெகிழ்ந்து கொடுக்கும் தன்மையை உடையதாக இருக்கிறது. வெளிச்சம் குறைவது பலருக்குப் பாதுகாப்பாக இருக்கிறது. ஞானிகளுக்கோ அதுதான் தத்துவார்த்த சிந்தனையைச் செதுக்கும் நேரமாக இருக்கிறது. நாவலில் அப்துல் …

யாமம் – தமிழ்மகன் விமர்சனம் Read More »

கடவுளின் குரலில் பேசி

– சிறுகதை ஜான் வீடு திரும்பும் வழியில் விசாரணைக்காரர்களால் விசாரிக்கப்பட்டான். அவர்கள் கேள்விகள் எல்லாவற்றிற்கும் ஜானிடம் பதிலிருந்தது. அவர்கள் அந்த நாடகத்தைப் பற்றியே திரும்பத்திரும்ப கேட்டுக்கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு மாலையும் அந்த நாடகம் சதுக்கத்தில் நடைபெறுகிறது. தினமும் அதில் நடிக்கும் நடிகர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போகிறது. முதல் நாள் அன்று ஜான் ஒருவன் மட்டும் அந்த சதுக்கத்தில் சிறு மேஜையைப் போட்டு, ஏராளமான காகிதங்களை வைத்து எழுதிக்கொண்டிருந்தான். பொது இடத்தில் உட்கார்ந்து எழுதிக்கொண்டிருந்தான். பொது இடத்தில் உட்கார்ந்து எழுதும் …

கடவுளின் குரலில் பேசி Read More »

இந்தவாரக் குறும்படம்

கடலும் கிழவனும் ஹெமிங்வேயின் புகழ்பெற்ற கடலும் கிழவனும் நாவல் மிகச்சிறப்பாக அனிமேஷனில் உருவாக்கப்பட்டிருக்கிறது, இதனை உருவாக்க அலெக்சாண்டியர் பெத்ரோவ் என்ற ஒவியரும் அவரும் மகனும் இரண்டு ஆண்டுகாலம் எடுத்துக் கொண்டார்கள், 29000 சித்திரங்களை கையாலே கண்ணாடியில் வரைந்து உருவாக்கியிருக்கிறார்கள், இப்படம் சிறந்த அனிமேஷன் படத்திற்காக அகாதமி விருது பெற்றிருக்கிறது https://video.google.com/videoplay?docid=-6079824527240248060&hl=en# கவிஞனின் ரத்தம் 1930ம் ஆண்டு பிரபல பிரெஞ்சுக் கவிஞரும் ஒவியருமான ழான் காக்தூ இயக்கிய The Blood of a Poet  என்ற திரைப்படம் வெளியானது, …

இந்தவாரக் குறும்படம் Read More »