admin

வாசிப்போம் வாருங்கள்

ருஷ்ய எழுத்தாளர்கள் மற்றும் கடந்த காலத்தின் புகழ்பெற்ற செவ்வியல் நாவல்கள் பற்றியே அதிகம் எழுதி வருகிறீர்களே, சமகால உலக இலக்கியத்தில் கவனம் கொள்ளவேண்டிய முக்கிய  எழுத்தாளர்கள் யார். என்ன புத்தகம் என்று ஒரு சிறிய அறிமுகம் தர இயலுமா ? என இரண்டு நாட்களுக்கு முன்பு  சத்யநாராயணா என்ற நண்பர் ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்,  அவருக்கு எழுதப்பட்ட இந்த மின்னஞசலை விருப்பமான வேறு எவருக்காவது பயன்படக்கூடும் என்று நினைத்து அப்படியே வெளியிடுகிறேன் •• கடந்த ஐந்து ஆண்டுகளில் …

வாசிப்போம் வாருங்கள் Read More »

சில இணைப்புகள்

சாப்ளினின் முதல்படம் சாப்ளின் நடித்த முதல் திரைப்படம், மிக அரிய காணொளி. கீஸ்ட்டன் ஸ்டுடியோதான் ‘மேக்கிங் எ லிவிங்’ திரைப்படத்தைத் தயாரித்தது. Charlie Chaplin in Making a Living (1914) https://www.youtube.com/watch?v=2Mntjb7ShuI’ •• காந்தி பேசுகிறார் மகாத்மா காந்தியின் அரிய காணொளி Mahatma Gandhi Talks- First Indian Talking Movie https://www.youtube.com/watch?v=2GgK_Nq9NLw •• ஷியாம் பெனகலின் நேர்காணல் உரை ஐந்து பகுதிகளாக உள்ள பிரபலத் திரை இயக்குனர் ஷியாம் பெனகலின் விரிவான நேர்காணல், Top …

சில இணைப்புகள் Read More »

ஹரிச்சந்திரா பேக்டரி

  கடந்த இரண்டு மாதங்களுக்குள் 1) Jhing chik jhing.2)Valu3) Vihir 4) Gandh 5) Gho mala asla hava 6) Gabhricha paus 7) Harichandrasi factory8) Natrang 9) Dhossar, 10) Aarambh  என பத்து மராத்தியத் திரைப்படங்களைப் பார்த்து விட்டேன், பல்வேறு நண்பர்கள் வழியாக கிடைத்த டிவிடி மற்றும் இணையத்தில் தரவிறக்கம் செய்து கிடைத்த இப்படங்களை ஒருசேரப் பார்க்கும் போது மராத்திய சினிமா பற்றி மனதில் இருந்த  பிம்பம் முற்றிலும்  உருமாறிப்போனது, …

ஹரிச்சந்திரா பேக்டரி Read More »

ஷேக்ஸ்பியரின் பறவைகள்

ஷேக்ஸ்பியர் தனது நாடகங்களில் 74 விதமான பறவைகளைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறார் என்கிறார்கள். Blackbird, Bunting, Buzzard, Chough, Cock, Cormorant, Crow, Cuckoo, Dive-dapper, Dove and Pigeon, Duck, Eagle, Estridge, Eyas-musket, Guinea-hen, Handsaw Falcon and Sparrowhawk, Finch, Goose, Hedge Sparrow, House Martin, Jackdaw, Jay, Kite, Lapwing, Lark, Loon, Magpie, Nightingale, Osprey, Ostrich, Owl, Parrot, Partridge, Peacock, Pelican, Pheasant, Quail, Raven, Robin, …

ஷேக்ஸ்பியரின் பறவைகள் Read More »

என்னம்மா தோழி

காலைப்பனி என்ற படத்தில் சதீஷ ராமலிங்கம் இசையமைத்த என்னம்மா தோழி என்ற பாடலை சில வாரங்களாகவே அடிக்கடி கேட்டுக் கொண்டிருக்கிறேன், கேட்கக் கேட்கப் பரவசமாகவே இருக்கிறது, சமீபமாக நான் கேட்ட மிகச்சிறந்த பாடல் இதுவே, ராஜேஷ் செல்வா இயக்கிய இந்தப் பட்ம் சென்ற ஆண்டு வெளியானது என்கிறார்கள், நான் அதைப் பார்க்கவில்லை, ஆனால் பாடல்கள் அற்புதமாக இருக்கின்றன. தற்செயலாக ஒரு நண்பரின் காரில் இந்தப் பாடலை கேட்டதில் இருந்து அதைத்தேடிப்பெற்று கேட்க ஆரம்பித்தேன், இந்தப்பாடலை எழுதியிருப்பவர் சசிக்குமார் …

என்னம்மா தோழி Read More »

ஜோர்பா எனும் உல்லாசி

Since we cannot change reality, let us change the eyes that see reality. -Nikos Kazantzakis ஜோர்பா தி கிரேக் (Zorba the Greek) நாவல் பற்றி முதன்முறையாகக் கவிஞர் தேவதச்சன் என்னிடம் சொன்ன போது கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன், அதுவரை  நிகோஸ் கசான்ஸ்சாகிஸின் (Nikos Kazantzakis.) எந்தப் படைப்பையும் நான் படித்ததில்லை, மிக முக்கியமான புத்தகம் அது என்று சொல்லி, அவசியம் படிக்க வேண்டும் எனச் சிபாரிசு செய்தார், கோவில்பட்டியில் அன்றிருந்த …

ஜோர்பா எனும் உல்லாசி Read More »

சிறுமீன்.

 குறுங்கதை அந்த ஊரில் ஒரு குளமிருந்தது. அதில் சிறியதும் பெரியதுமாக நூற்றுக்கணக்கான மீன்கள் வசித்தன. எங்கிருந்தோ தினமும் ஒரு கொக்கு அங்கே பறந்து வந்து மீன்களைப் பிடித்துத் தின்னத் துவங்கியது. அந்தக் கொக்கு  அலகில்  மீனைப் பிடித்து வைத்துக் கொண்டு கொல்வதற்கு முன்பு கடுமையாக பரிகாசம் செய்வதுண்டு. உங்களை ஏன் கொல்கிறேன் தெரியுமா. உங்களால் ஒரு நாளும் வானத்தில் பறக்க முடியாது. இந்தக் குளத்தைத் தாண்டி வெளிஉலகம் தெரியாது. காடுகள், மலைகள் நகரங்கள் என எதையும் கண்டதேயில்லை. …

சிறுமீன். Read More »

எனதருமை டால்ஸ்டாய்

ஒரு நாவலின் வெற்றியும் தோல்வியும் எதை வைத்து முடிவு செய்யப்படுகிறது, உலக அரங்கில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு லட்சக்கணக்கில் விற்பனையான நாவல்கள் இன்று இருந்த இடமே தெரியவில்லை, வெளியான காலத்தில் சில நூறு பிரதிகள் விற்ற நாவல்கள் இன்று கொண்டாடப்பட்டு பல லட்சம் பிரதிகள் விற்பனையாகின்றன, புத்தகம் அது வாசிக்கப்படும் காலத்திற்காகவும் அதற்கான வாசகனுக்காகவும் எப்போதும் காத்துக் கொண்டிருக்க கூடும் அதைத் தவிர எழுத்தாளன் மேற்கொள்ளும் தந்திரங்கள் சுயபுகழ்ச்சிகள். ஊதிப்பெருக்கிய பாராட்டுகள் எதனாலும் ஒரு நாவலை வெற்றி …

எனதருமை டால்ஸ்டாய் Read More »

சில குறும்படங்கள்

  சமீபமாக இணையத்தில் நான் பார்த்த சில குறும்படங்கள் மற்றும் ஆணவப்படங்களின் இணைப்பு. காந்தியைப் பற்றிய ஆவணப்படம் காந்தியின் வாழ்க்கைவரலாறு குறித்த ஒரிஜினல் படக்காட்சிகளுடன் கூடிய அரிய காணொளி MAHATMA – Life of Gandhi https://www.youtube.com/watch?v=QCI3nswuYyc சதத் ஹசன் மண்டோ பற்றிய காணொளி இந்தியாவின் மிக முக்கிய உருது எழுத்தாளரான சதத் ஹசன் மண்டோ பற்றிய காணொளி, இவரது கதைகளின் பாதிப்பில் இருந்து தான் கமலஹாசனின் ஹேராம் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது, இந்தியப்பிரிவினை குறித்து எழுதிய அற்புதமான …

சில குறும்படங்கள் Read More »

செகாவ் வீடியோ

செகாவ்வைப் பற்றிய எனது உரையின் காணொளி (video) தமிழ் ஸ்டுடியோவில் பதிவேற்றப்பட்டுள்ளது. உங்கள் பார்வைக்கு: https://koodu.thamizhstudio.com/oliyum_oliyum_chegav_s.ra.php குறிப்பு: வீடியோ 1 மணி நேரம், 20 நிமிடங்களுக்கு மேலாக ஓடக்கூடியது. எனவே வீடியோவை தொடர்ச்சியாகப் பார்க்க குறைந்த பட்சம் (532 KBPS) 20 நிமிடம் காத்திருந்து பின்னர் ப்ளே செய்யவும். **