புத்தகங்களின் ஊடே
உலகப் புத்தகக் கண்காட்சியில் கலந்து கொள்வதற்காக புதுடெல்லி சென்று இப்போது தான் திரும்பினேன், 1500க்கும் மேற்பட்ட புத்தகக் கடைகள், நாள் ஒன்றுக்கு ஐந்து மணி நேரம் புத்தகங்களுக்கு ஊடாக சுற்றியலைந்தேன், பிரகதி மைதானில் 14 வளாகங்களில் புத்தகக் கண்காட்சி நடைபெற்றது, உலக மொழிகளில் பெரும்பான்மையினர் இங்கே தங்களது புத்தகங்களை விற்பனைக்கு வைத்திருந்தார்கள், குழந்தைகளுக்குத் தனிப்பிரிவு அமைக்கபட்டிருந்தது. இந்திய சினிமா குறித்த கருத்தரங்கம், மொழிபெயர்ப்பு குறித்த கருத்தரங்கம், பிறமொழி படைப்புகளுக்கான உரிமை பெறுவது என்று தினம் ஒரு நிகழ்வு …