கதைகளைத் தின்னும் ஆடு
மலையாள எழுத்தாளர் வைக்கம் முகமது பஷீரை பற்றி எப்போது நினைக்கும் போது கூடவே தா.மணியின் நினைவும் சேர்ந்துதான் வருகிறது. ஒரு வேளை எனக்கு பஷீரை அறிமுகம் செய்து வைத்தவர் என்ற காரணமாக இருக்ககூடும். இன்னொன்று அவரைப் போல பஷீரை நேசித்தவர்கள் எவரையும் இன்று வரை நான் காணவில்லை என்பதும் காரணமாக இருக்ககூடும் தா.மணி எழுத்தாளர் அல்ல. ஆனால் எழுத்தாளர் ஆவதற்கான அத்தனை குணங்களும் அவதானிப்புகளும் அவரிடமிருந்தன. விரும்பி எழுத்தாளர் ஆகாமல் இருந்தாரோ என்னவோ. தீவிரமான இலக்கிய வாசகர். …