நூலாறு
நேற்று வேலூரில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சிக்கு சென்றிருந்தேன். ஆழிபதிப்பகம் நடத்தும் நண்பர் செந்தில்நாதன். தன்னுடைய அரிய முயற்சியால் இந்தப் புத்தக கண்காட்சியைத் தனது ஆழி அறக்கட்டளை மற்றும் வேலூர் வாசகர் பேரவை அமைப்புடன் இணைந்து முதன்முறையாக துவக்கியுள்ளார். புத்தகக் கண்காட்சி அல்லது புத்தக திருவிழா என்பதற்கு மாற்றாக நூலாறு 2010 என்று அவர்கள் விளம்பரப்படுத்தியிருந்தது பிடித்திருந்தது. எழுத்தாளர் அழகிய பெரியவன் இந்தப் புத்தக கண்காட்சி ஒருங்கிணைப்பில் அயராது ஒடியாடி வேலை செய்து கொண்டிருந்தார், புத்தகங்கள் மீது அவர் கொண்ட …