அருவிக்காக காத்திருப்பது
இந்த நகரமே அருவிக்காக காத்திருக்கிறது. கடந்த சில நாட்களாகவே குற்றாலத்திலிருக்கிறேன். அடர்ந்து மணக்கும் பகல் வெளிச்சம்.. அருவி வழியும் பாறையில் சப்தமில்லாமல் வழிந்து போகிறது வெயில். பொங்கி சீறும் அருவியை காண்பது போலவே அருவி இல்லாத வெறுமையை கடந்து செல்லும் கண்கள் ஏக்கத்துடன் பார்த்து போகின்றன.அருவி உருவாக்கிய ஊர் என்பது எவ்வளவு பெரிய விசித்திரம். நகரின் வீதிகள், வீடுகள் சாலைகள் மரங்கள் மலை உள்ளிட்ட அத்தனையும் அருவியோட்டத்தால் உருக் கொண்டவை. இந்த நகரின் நினைவில் அருவியோசை தீராமல் …