உண்டாட்டு
திருவண்ணாமலையில் நடைபெற்ற உண்டாட்டு நிகழ்வு இலக்கியத் திருவிழா போல நடைபெற்றது. பெங்களூர், கோவை, மதுரை, சேலம். தஞ்சை, சென்னை, கொச்சி, புதுச்சேரி எனப் பல்வேறு ஊர்களில் இருந்து இலக்கியவாசகர்களும், எழுத்தாளர்களும் திருவண்ணாமலைக்கு வந்து சேர்ந்திருந்தார்கள். பவாவின் ஏற்பாடு எப்போதும் ஆகச்சிறந்ததாகவே இருக்கும். இந்த முறை கொண்டாட்டத்தின் உச்சம். பவாவும், அவரது குடும்பமும் நண்பர்களும் இந்நிகழ்வை மறக்கமுடியாத பெரும் அனுபவமாக உருவாக்கினார்கள். காலை பத்து மணிக்குத் துவங்கி இரவு ஒன்பது வரை நிகழ்வுகள். வாசகர்கள் பலரும் எனது படைப்புகள் …