காஃப்கா சிரிக்கிறார்

இணையத்தில் இன்று காஃப்காவின் அரிய புகைப்படம் ஒன்றைக் கண்டேன். சட்டை அணியாத சிரித்த முகத்துடன் உள்ள காஃப்காவின் புகைப்படம். கடற்கரையில் எடுக்கபட்ட படம் போலுள்ளது. அருகில் அவரது நண்பன் மாக்ஸ் பிராட் இருக்கிறார். கூச்சத்துடன் கேமிராவை நோக்கியபடி இருக்கிறார் காஃப்கா.

காப்காவின் பெரும்பான்மை புகைப்படங்களில் அவர் கோட் அணிந்தபடியே தீவிரமான முகத்துடன் இருப்பார். சில புகைப்படங்களில் கறுப்பு தொப்பி அணிந்திருப்பார். சிலவேளை கையில் ஒரு பையுடன் காணப்படுவார். இந்த படத்திலுள்ள காஃப்காவிடம் காணப்படுவது மெலிந்த இளைஞனின் வெட்கம். அவரது படைப்புகளில் ஒரு போதும் இந்த உருவம் வெளிப்படுவதில்லை. காதல்கடிதங்களில் வெளிப்படும் காஃப்காவின் பிம்பம் வேறுவிதமானது. காஃப்காவின் காதுகள் அவரது தனித்த அடையாளம்.

இளமையின் சந்தோஷம் பீறிடும் காஃப்காவின் புகைப்படம் யாரோ நெருங்கிய நண்பனைப் போலவேயிருக்கிறது.

“A Hunger Artist” சிறுகதை அவரது மாஸ்டர்பீஸ். உருமாற்றம் கதையை விடவும் அதிகம் எனக்குப் பிடித்தமானது. இந்த புகைப்படம் காஃப்காவின் கதையை மீண்டும் வாசிக்க தூண்டியுள்ளது.

0Shares
0