அனுபவம்

விஷமாகும் காய்கனிகள்

காரைக்காலில் இருந்து காரில் வந்து கொண்டிருந்தேன். வழியில் வாரச் சந்தையொன்றைக் கண்டேன். காரை விட்டு இறங்கி சந்தைக்குச் சென்றேன். காலையில் பறித்து வந்த பசுமையான காய்கறிகள். பழவகைகள். மிகப்பெரிய சந்தையது. மக்கள் பைநிறைய காய்கறிகளை வாங்கிக் கொண்டு போனார்கள். புதுச்சேரி மாநிலத்தில் வாரச்சந்தைகள் முறையாக நடைபெறுகின்றன. விவசாயிகள் நேரடியாக வணிகம் செய்கிறார்கள். தமிழகத்தில் திட்டமிட்டு உழவர்சந்தை அழிக்கபட்டது. கலைஞர் ஆட்சி கொண்டு வந்த சிறந்த திட்டங்களில் ஒன்று உழவர் சந்தை. அதன் பயன் நேரடியாக மக்களுக்குக் கிடைத்தது. …

விஷமாகும் காய்கனிகள் Read More »

பாண்டிச்சேரியில் ஒரு நாள்.

எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களின் மகன் திருமண வரவேற்பில் கலந்து கொள்வதற்காகப் பாண்டிச்சேரி சென்றிருந்தேன். புகைப்படக்கலைஞரும் எனது நண்பருமான இளவேனில் வரவேற்று சிறப்பான உபசரிப்புகளைச் செய்தார். மாலையில் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் அவர்களைச் சந்திப்பதற்காக அவரது வீட்டிற்குச் சென்றிருந்தேன். முன்னதாகத் திரைக்கலைஞர் சிவக்குமார் அவரைக் காண்பதற்காக வந்திருந்தார். சிவக்குமார் எழுத்தாளர்களின் மீது மிகுந்த அன்பு செலுத்துபவர். கி.ரா குடும்பத்துடன் அவர் மகிழ்ச்சியாக உரையாடிக் கொண்டிருந்தார். என்னைக் கண்டதும் உற்சாகமாக வரவேற்றார். கி.ரா பூரண ஆரோக்கியத்துடன் தெளிவான நினைவாற்றலுடன் இருந்தார். கி.ராவைச் …

பாண்டிச்சேரியில் ஒரு நாள். Read More »

கேரள புத்தகக் கண்காட்சி

கேரள சாகித்ய அகாதமி சார்பில் திருச்சூரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புத்தகக் கண்காட்சியைத் துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றுவதற்காகச் சென்றிருந்தேன். தமிழகத்தில் எத்தனையோ புத்தகக் கண்காட்சிகள் நடைபெறுகின்றன. சென்னை புத்தகக் கண்காட்சி உள்ளிட்ட தமிழகத்தின் முக்கியப் புத்தகக் காட்சிகள் எதையும் எழுத்தாளர் எவரும் துவக்கி வைத்ததேயில்லை. தமிழகம் தரத்தயங்கிய கௌரவத்தைக் கேரளம் தந்திருக்கிறது. எழுத்தாளர்களை, கலைஞர்களை மதித்துக் கௌரவிப்பதில் கேரளம் முன்னோடி என்பதற்குச் சாட்சியாகவே இதைக் காண்கிறேன். விமான டிக்கெட் கொடுத்து ஐந்து நட்சத்திரவிடுதியில் தங்கவைத்துச் சிறப்பு விருந்தினராகச் …

கேரள புத்தகக் கண்காட்சி Read More »

இளம்பகவத்

இளம் ஐஏஎஸ் அதிகாரியான இளம்பகவத் நேற்று தனது இரண்டு நண்பர்களுடன் வீட்டிற்கு வந்திருந்தார். ஐஏஎஸ் தேர்விற்காகத் தயாராகும் பலரும் என்னை வந்து சந்திப்பதுண்டு. தமிழ் இலக்கியம், வரலாறு, நுண்கலைகள் சார்ந்து விவாதிப்பார்கள். விகடனில் கதாவிலாசம் எழுத துவங்கிய நாள் முதல் இளம்பகவத் என்னைத் தொடர்ந்து வாசித்து வந்திருக்கிறார். இந்திய ஆட்சிப்பணியில் உள்ள பலர் தீவிர இலக்கியவாசிப்புக் கொண்டவர்கள் என்பதை அறிவேன். தமிழ் வழி கல்வி பயின்று தமிழிலே ஐஏஎஸ் எழுதி இந்திய அளவில் 117வது இடம்பிடித்துச் சாதனை …

இளம்பகவத் Read More »

வேலூர் லிங்கம்

தஸ்தாயெவ்ஸ்கியைத் தீவிரமாக வாசிப்பவர்கள் பலர் இருக்ககூடும். ஆனால் வேலூர் லிங்கம் அளவிற்குத் தஸ்தாயெவ்ஸ்கியை ஒருவர் நேசிக்க முடியுமா என்பது சந்தேகமே. 40 ஆண்டுகளுக்கும் மேலாகத் தீவிர இலக்கியவாசிப்பில் ஈடுபட்டு வரும் இவர் தற்போது ஒய்வு பெற்று வேலூரில் வசிக்கிறார். தமிழின் முக்கிய எழுத்தாளர்கள் அனைவருக்கும் நண்பர். இலக்கியவிழாக்களைத் தேடித்தேடி கலந்து கொள்ளக்கூடியவர். அவரது வீட்டிற்குச் சமீபத்தில் சென்றிருந்தேன். வீட்டின் முகப்பில், ஹாலில், அறைகளில். மாடியில் என எங்கும் புத்தகங்கள். நூலகத்தில் கூட இவ்வளவு சிறந்த புத்தகங்கள் இருக்குமா என …

வேலூர் லிங்கம் Read More »

புதிய சாளரம்

சென்னை டிஎல்எப்பில் இயங்கி வரும் Nationstar Mortgage என்ற அமெரிக்க நிறுவனத்தில் புத்தக வாசிப்பை உருவாக்கும் விதமாக ஒரு சிறப்புக் கூட்டம் ஏற்பாடு செய்திருந்தார்கள். கார்ப்பரேட் நிறுவனம் ஒன்றில் புத்தக வாசிப்பை அறிமுகப்படுத்த இப்படியொரு கூட்டம் நடப்பது இதுவே முதன்முறை என்றார்கள். இந்தக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளைச் செய்தவர் Nationstar Mortgage ல் பணியாற்றும் நண்பர் நரேந்திரன் . தீவிர இலக்கிய வாசகரான அவரது முயற்சியின் காரணமாகவே நான் அழைக்கப்பட்டேன். Nationstar Mortgage அலுவலகம் இதற்கான அனுமதி அளித்ததோடு …

புதிய சாளரம் Read More »

பாண்டிச்சேரியில்

நேற்று பாண்டிச்சேரியில் பிரபஞ்சன் – 55 முழுநாள் கருத்தரங்கிற்கான ஆலோசனைக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. கவிஞர் மனுஷி பாரதி மற்றும் நண்பர்கள் ஒருங்கிணைப்புச் செய்திருந்தார்கள். மாலையில் வாசகர்களுடன் ஒரு கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது. அதில் என்னோடு நண்பர் பவா செல்லதுரை மற்றும் பதிப்பாளர் வேடியப்பன் ஆகியோர் கலந்து கொண்டார்கள். மகிழ்வூட்டும் சந்திப்பாக அமைந்தது. நண்பர் இளவேனில் சிறப்பான இரவு உணவு தந்து அனுப்பி வைத்தார். இளவேனிலின் புகைப்படங்களைக் காணுவதற்காக இன்னொரு முறை தனியே பாண்டிச்சேரி வரவேண்டும் என …

பாண்டிச்சேரியில் Read More »

குங்குமம் இதழில்

இவ்வார குங்குமம் இதழில் எனது குடும்பம் குறித்த சிறப்புக்கட்டுரை வெளியாகியுள்ளது. நேர்காணல் செய்து சிறப்பாக எழுதிய கதிர்வேலனுக்கும் வெளியிட்ட கே.என். சிவராமனுக்கும் நன்றி நேர்த்தியான புகைப்படங்களை எடுத்த வின்சென்டிற்கு  அன்பும் நன்றியும்

தி இந்துவில்

இன்றைய (17.09.2016 ) தி இந்து நாளிதழில் என் குடும்பம் பற்றிய கட்டுரை ஒன்று இடம்பெற்றுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள மல்லாங்கிணர் எனது சொந்த ஊர். அப்பா சண்முகம் கால்நடை மருத்துவராகப் பணியாற்றினார். அம்மா மங்கையற்கரசி நிறையப் படிக்ககூடியவர். எனது நற்குணங்கள் யாவும் அவர் உருவாக்கியதே. நாங்கள் ஆறு பிள்ளைகள். அண்ணன் டாக்டர் வெங்கடாசலம். அடுத்தவன் நான். தங்கைகள் கமலா, கோதை, உஷா. கடைசித்தம்பி பாலகிருஷ்ணன். அப்பா அரசாங்கவேலையில் இருந்த போதும் நாங்கள் விவசாயக் குடும்பமாகவே வாழ்ந்து வந்தோம். …

தி இந்துவில் Read More »

திருவண்ணாமலையில்

ஆகஸ்ட் 1 இரவு திருவண்ணாமலையில்  பவா. செல்லதுரை ஏற்பாடு செய்திருந்த நிலம் இலக்கியக் கூட்டத்தில் நோபல்பரிசு பெற்ற எழுத்தாளர் கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் பற்றி உரையாற்றினேன். எனக்கு  மிகவும் விருப்பமான எழுத்தாளரைப் பற்றிப்  பேசியது சந்தோஷம் அளித்தது. மார்க்வெஸின் புகழ்பெற்ற சிறுகதைகளையும், எழுத்துமுறையின் சிறப்புகளையும் லத்தீன் அமெரிக்க அரசியல் சூழலையும் பற்றி விரிவாகப் பேசினேன்.  பார்வையாளர்கள் நிரம்பியிருந்தார்கள். இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக  திருச்சியிலிருந்து ஒரு வாசகர் வந்திருந்தார். இரண்டு பேர் சேலத்திலிருந்து வந்திருந்தார்கள்.  திருவண்ணாமலையில் தேர்ந்த …

திருவண்ணாமலையில் Read More »