அனுபவம்

கோணங்கியுடன்

இரண்டு நாட்கள் கோணங்கியுடன் சுற்றித்திரிந்தேன். நானும் அவரும் ஒன்றாக திரிந்த நாட்கள்  மறக்கமுடியாதவை. பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நாங்கள் இணைந்து சுற்றியிருப்போம். எத்தனையோ இலக்கியவாதிகளைத் தேடிச் சென்று சந்தித்திருக்கிறோம். வரலாற்றுபுகழ்மிக்க இடங்களை தேடி அலைந்திருக்கிறோம். எவரெவர் வீடுகளிலோ தங்கிப்பேசி கடந்து போயிருக்கிறோம். இன்று அவரது பாதையும் பயணமும் வேறு. ஆனாலும் மனதில் அந்த நெருக்கம் மறையவேயில்லை. இருவரும் ஒன்றாக சாத்தூர்  சென்று  நண்பர் தியாகுவை அழைத்துக் கொண்டு பாபநாசம் சென்றோம். அங்கே ஒரு அறை எடுத்துக் கொண்டு …

கோணங்கியுடன் Read More »

சிறப்பு நூலகம்

கோவை ஆர்.எஸ். புரம் கவுலி பிரவுன் ரோட்டிலுள்ளது மாவட்ட மைய நுாலகம்.  தமிழகத்தில் முதல்முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கான அதிநவீன நுாலகப்பிரிவு இங்கே திறக்கப்பட்டுள்ளது. கோவைக்குச் சென்றிருந்தபோது நண்பர் PUCL சந்திரசேகர் அந்நூலகத்தைப் பார்வையிட அழைத்துச் சென்றார்.  சந்திரசேகர், நூலகத்திற்கு தன்னார்வத்துடன்  பல்வேறு சேவைகள் செய்து வருபவர். தீவிர வாசகர். களச்செயல்பாட்டாளர். முற்றிலும் குளிர் சாதன வசதி செய்யப்பட்ட நூலகப்பிரிவு மிக அழகாக வடிவமைக்கபட்டுள்ளது. பார்வையற்றவர்களுக்கான பிரெய்ல் புத்தகங்கள். பிரைலி கம்யூட்டர்கள் ஆட்டிசம் பாதிப்பு உள்ள குழந்தைகள், செவித்திறனை இழந்த குழந்தைகள் …

சிறப்பு நூலகம் Read More »

அன்னை வயல்

விகடன் எம்.டி. திரு. பாலசுப்ரமணியம், இயக்குனர் கே.பாலசந்தர் என இரண்டு நிகரற்ற ஆளுமைகளின் மறைவு என்னைத் தாளாத மனத்துயரில் ஆழ்த்தியிருக்கிறது. இருவருடன் நெருங்கிப்பழகியவன் நான். என் மீதான அவர்களின் அன்பும் அக்கறையும் தீராத நன்றிக் கடனுக்குரியது. விகடன் எம்டியான திரு.பாலசுப்ரமணியம் அவர்களை மாணவ நிருபர் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட நாளில் முதன்முறையாகச் சந்தித்தேன். அன்று நான் ஒரு கல்லூரி மாணவன், புதிதாக எழுதத் துவங்கியவன். நேர்காணலின் போது எதற்காக பத்திரிக்கையாளராக விரும்புகிறீர்கள் என அவர் கேட்டதற்கு நான் …

அன்னை வயல் Read More »

நாளை மற்றுமொரு நாளே

கடந்த நான்கு நாட்களாக ஊட்டியிலிருந்தேன், எங்குத் திரும்பினாலும் ஒரே கூட்டம், நெரிசல், வாகன ஒசை. சென்னை ரங்கநாதன் தெருவிற்குள் இருப்பது போலவே உணர்ந்தேன். ஊட்டியின் பரபரப்பிலிருந்து தப்பி அவலாஞ்சிக்குள் போய்விட்டேன், இருபுறமும் சைப்ரஸ் மரங்கள். கண்படும் இடமெல்லாம் பசுமை, நீரோடைகள்.பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் நீலக்குறிஞ்சி பூத்திருந்தது. அப்பர் பவானி வரை சென்று வந்தேன். வழியெங்கும் மிக அரிய, விதவிதமான மரங்கள். மஞ்சளும் நீலமுமாகப் பூத்துச் சொரியும் செடிகள், பவானி ஆலயத்தின் அருகே விழுந்து கொண்டிருக்கும் …

நாளை மற்றுமொரு நாளே Read More »

தூண்டில்

நேற்றிரவு ஒரு கனவு வந்தது, அதில் ஒரு கண்மாய். கரையில் தூண்டிலை வைத்தபடியே மீன்பிடிப்பதற்காகக் காத்திருக்கிறேன், பள்ளிவயதில் நான் வழக்கமாக மீன்பிடிக்கப்போகும் கண்மாய் அது. கரை முழுவதும் புளியமரங்கள், மழை பெய்து கண்மாய் நிரம்பியிருக்கிறது. அசைந்து கொண்டிருக்கும் தக்கையைப் பார்த்தபடியே கரையில் உட்கார்ந்திருக்கிறேன், அந்த இடத்தில் என்னைத் தவிர யாருமேயில்லை. தண்ணீரின் மீது வெயில் ஊர்ந்து கொண்டிருக்கிறது. தூண்டிலை மீன் கடித்து இழுக்கிறது. தக்கை இழுபட்டு நகர்கிறது, மீன் நன்றாகக் கடிக்கட்டும் என நரம்பு கயிறை நழுவவிடுகிறேன், …

தூண்டில் Read More »

வெற்றிகரமான முகாம்

கதைகள் பேசுவோம் இலக்கிய முகாம் மிகச்சிறப்பாக நடைபெற்றது, நிகழ்வில் 175 பேர் கலந்து கொண்டார்கள், இதில் எழுபது சதவீதம் பேர் இளைஞர்கள், தீவிர வாசிப்பில் ஆர்வம் கொண்டவர்கள், பெங்களுர், புதுக்கோட்டை, திருச்சி, சேலம், கோவை என வேறுவேறு ஊர்களில் இருந்து வந்து நிகழ்வில் கலந்து கொண்டார்கள் மூன்று அமர்வுகளாக நடைபெற்ற இந்த முகாமிற்கு இயக்குனர் சசி, ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சன், பேராசிரியர் ராமகுருநாதன், ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்கள் எழுத்தாளர்கள் பாஸ்கர் சக்தி, அகநாழிகை வாசுதேவன், …

வெற்றிகரமான முகாம் Read More »

மறக்கமுடியாத தருணங்கள்

2005-ம் ஆண்டில் குற்றாலத்தில் நான் நடத்திய இலக்கிய முகாமின் புகைப்படங்களை நண்பர் முரளிமனோகர் தனது பேஸ்புக்கில் பகிர்ந்து கொண்டிருக்கிறார், தற்செயலாக அதன் இணைப்பை நேற்று ஒரு நண்பர் அனுப்பியிருந்தார். புகைப்படங்களைக் காணும் போது பரவசமாக இருந்தது. குற்றாலச்சாரலில் நனைந்தபடியே இரண்டு நாட்களும் பகலிரவாகத் தொடர்ந்த உரையாடல்கள், வேடிக்கை கதைகள், தீவிர இலக்கிய விவாதங்கள் மனதில் பசுமையாக இருக்கின்றன, அரிய தருணங்களைப் புகைப்படமாகச் சேகரித்து வைத்துள்ளதற்கு நன்றி முரளி. அந்த முகாமில் எழுத்தாளர்கள் பிரபஞ்சன், வண்ணதாசன், பூமணி, சோ,தர்மர், …

மறக்கமுடியாத தருணங்கள் Read More »

நன்றி வெங்கட்

நான் வெயில்காலத்தில் பிறந்தவன், வெயிலேறிய கிராமத்தில் வளர்ந்தவன், ஆகவே ஒவ்வொரு ஆண்டின் குளிர்காலமும் எனக்கு ஒவ்வாதவை, அதைக் கடந்து செல்வதற்காக நிறைய முன்தயாரிப்புகள், பிரயாசைகளை மேற்கொள்ள வேண்டியதிருக்கிறது குறிப்பாகக் குளிர் எனக்கு ஒத்துக் கொள்வதில்லை, பின்னிரவுகளில் விழித்து எழுந்து உட்கார்ந்து கொண்டு எப்போது சூரியன் உதயமாகும் எனக் கதகதப்பிற்குக் காத்துக் கொண்டிருப்பது விநோதமான அனுபவம், இந்தக் குளிர்காலமும் அப்படித்தான் துவங்கியிருக்கிறது, இரண்டு முறை மருத்துவரிடம் சென்று குளிர்காய்ச்சலுக்கான மருந்துகளைப் பெற்றுவந்துவிட்டேன், காய்ச்சல் குறைந்துவிட்டது ஆனால் மனநிலை பிடிப்பற்று …

நன்றி வெங்கட் Read More »

கூட்ஸ் பயணம்

எத்தனையோ ரயில்களில் ஏதேதோ ஊர்களுக்குப் பயணம் செய்திருக்கிறேன், ஆனால் என்னால் மறக்கமுடியாத ஒரு பயணம் கூட்ஸ் ரயிலில் போனது, பள்ளிநாட்களில் வீட்டின் அருகாமையில் உள்ள ரயில்வே நிலையத்தினை கடந்து செல்லும் கூட்ஸ் ரயில்களை வேடிக்கை பார்த்துக் கொண்டேயிருப்பேன், அப்போதெல்லாம் கூட்ஸ் ரயிலின் கடைசிப்பெட்டியில் ஒற்றை ஆளாக நின்றபடியே கொடியை வீசி அசைக்கும் கார்டினைப் பார்த்து கையசைப்பது வழக்கம்,  ஒரு சிலர் பதிலுக்கு கையசைப்பார்கள், பலர் இறுக்கமான முகத்துடன் வெறித்து பார்த்தபடியே கடந்து போய்விடுவார்கள், இந்த உலகிலே மிகதனிமையானது …

கூட்ஸ் பயணம் Read More »

சிவகாசி வெடிவிபத்து

சிவகாசி வெடிவிபத்து பற்றி அறிய நேர்ந்த நிமிஷத்தில் இருந்து பல்வேறு அச்சு மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களைச் சேர்ந்த நண்பர்கள் என்னை அழைத்து விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளர் என்ற முறையில் இது குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்கத் துவங்கினார்கள், இது விபத்தில்லை, அறிந்தே தொடரும் கொலைகள் என்று சொன்னேன், இந்த ஆண்டு நடக்கும் ஒன்பதாவது விபத்து இதுவெனச் சொல்கிறார்கள், கொள்ளை லாபத்திற்கு மனிதஉயிர்கள் பலியாகின்ற கொடுமை இது. எனக்கு விபரம் தெரிந்த வயதில் இருந்து ஆண்டு …

சிவகாசி வெடிவிபத்து Read More »