அனுபவம்

தண்ணீரின் சிறகுகள்

கனடாவில் பயணம் செய்யும் வரை தண்ணீரைப் பற்றி என் மனதில் பதிந்திருந்த சித்திரம் வேறாகவே இருந்தது, கனடாவின் பிரம்மாண்டமான ஏரிகள் அந்த பிம்பத்தை முற்றிலும் மாற்றிவிட்டன தண்ணீருக்குச் சிறகுகள் இருப்பதைக் கனடாவின் ஒன்டாரியோ ஏரியையும், சிம்கோ ஏரியையும்,  பார்த்த போது தான் உணர்ந்தேன், கண்கொள்ளமுடியாதபடி அகன்று விரிந்து கிடக்கிறது ஏரி, கடலிடமுள்ள ஆர்ப்பரிப்பு கிடையாது, சுவையான நல்ல தண்ணீர், அடிவானத்தோடு தண்ணீர் ஒன்று சேர்ந்திருப்பதால் ஆகாசம் தான் தண்ணீராக உருமாறியிருக்கிறதோ எனும்படியாக நீர்பரப்பு விரிந்து கிடக்கிறது, குட்டி …

தண்ணீரின் சிறகுகள் Read More »

ஷேக்ஸ்பியரின் முன்னால்

டொரன்டோவில் இருந்து மூன்று மணி நேரப்பயணத்தில் உள்ளது ஸ்ட்ராட்போர்ட்,  பிரிட்டீஷ்காரர்கள் அதிகம் வசிக்கும் அழகிய சிறிய நகரம், இங்கே ஆண்டு முழுவதும் ஷேக்ஸ்பியர் நாடகங்கள் நடத்தப்பட்டு வருகின்றன, இதற்காக ஷேக்ஸ்பியரின் காலத்தில் இருந்தது போலவே பிரத்யேகமான குளோப் தியேட்டர் எனும் விஷேச அரங்கினை உருவாக்கியிருக்கிறார்கள், இந்தக் கோளவடிவ அரங்கில் ஒரு நேரத்தில் 1800 பேர் உட்கார்ந்து நாடகம் பார்க்க முடியும் இங்கே ஷேக்ஸ்பியரின் நாடகப்பிரதிகள் நவீனகால ஆங்கிலத்திற்கு மாற்றம் செய்யப்படாமல் மூலவடிவத்திலே நிகழ்த்தப்படுகின்றன, ஒரு நாடகம் மூன்று …

ஷேக்ஸ்பியரின் முன்னால் Read More »

ரிவேரா வளாகம்.

கனடா மற்றும் அமெரிக்கப் பயணத்தில் அதிகம் நான் பார்வையிட்டது  அருங்காட்சியகங்கள் மற்றும் கலைக்கூடங்களையே, குறிப்பாக பிகாசோவின் நூற்றுக்கும் மேற்பட்ட ஒவியங்கள், ரெம்பிராண்ட், வான்கோ,  டாலி,  கோயா, பிரைடா காலோ, மடீசி,  வெர்மர், ரெனார், பால்காகின், ரூசோ, பிளேக், எட்கர் டீகாஸ், புரூகேல், வில்லியம் பிளேக், மிரோ, காடீன்ஸ்கி, முன்ச், கிளிம்ட், எட்வர்ட் ஹாபர், மார்சல் டச்ஹாம், பால் செசான், மார்க் செகால், மோடில்யானி, கமிலோ பிசாரோ, டூரர் போன்ற ஒவியமேதைகளின் படைப்புகளைக் கண்டது வாழ்நாளில் மறக்கமுடியாத அனுபவம், …

ரிவேரா வளாகம். Read More »

போர்ஹேயின் வகுப்பறை

அமெரிக்கப் பயணத்தை திட்டமிடும் போதே மிஷிகன் மாநிலத்தில் உள்ள கிழக்கு லான்சிங் பல்கலைகழகத்தை ஒரு முறைப் பார்வையிட வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன், அங்கே தான் எனது விருப்பத்திற்குரிய எழுத்து ஆளுமை ஜோர்ஜ் லூயி போர்ஹே (Jorge Luis Borges ) 1975ல் கௌரவ டாக்டர் பெற்றார், கவிதை குறித்து அப்பல்கலைகழகத்தில் சொற்பொழிவு ஆற்றியிருக்கிறார், லத்தீன் அமெரிக்க இலக்கியத்தின் தனிப்பெரும் கவிஞர், புனைகதையாசிரியர் என்று கொண்டாடப்படும் ஜோர்ஜ் லூயி போர்ஹே பார்வையற்றவர், ஆனால் அதை ஒரு தடையாகக் …

போர்ஹேயின் வகுப்பறை Read More »

வெரியர் எல்வின்

பழங்குடி மக்கள் அதிகம் வாழும் ஒரிசாவின் கோரபுட்டின் அருகில் உள்ள பழங்குடியினரின் வாரச்சந்தையில் சுற்றிக் கொண்டிருந்தேன்,  அந்த இடத்திற்கு வந்ததில் இருந்து வெரியர் எல்வினே (Verrier Elwin ) நினைவில் வந்து கொண்டிருந்தார், எல்வின் அந்தச் சந்தையைப் பற்றி எழுதியிருக்கிறார். பழங்குடி மக்கள் ஒன்று கூடும் கிராமசந்தையது, ஒரு பக்கம் கூடை கூடையாக குவித்து வைக்கபட்டுள்ள விதவிதமான கருவாடுகள், குச்சியில் குத்தி வைக்கபட்டுள்ள உலர்ந்த மாமிசம், மலிவான உடைகள், காய்கறிகள், பழங்கள், பலசரக்கு பொருட்கள், நகரங்களில் இருந்து …

வெரியர் எல்வின் Read More »

வாசகர் கலந்துரையாடல்

இன்று புத்தகக் கண்காட்சியில் நடைபெற்ற வாசகர் கலந்துரையாடலில் நான் பேசினேன், பாரதி புத்தகாலயத்தை சேர்ந்த நண்பர் நாகராஜன் அந்த நிகழ்வை ஒருங்கிணைவு செய்திருந்தார். நிறைய இளைஞர்கள், கூட்டம் நிரம்பி வெளியே  நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் நின்று கொண்டே கேட்டார்கள், இலக்கியம், புத்தகவாசிப்பு, சினிமா, பயணம், மகாபாரதம், கல்வி , ஏழு இலக்கியப்பேருரைகள், பௌத்தம் என்று பல்வேறு துறை சார்ந்த விஷயங்கள் குறித்துக்கேள்விகள் கேட்டார்கள், பத்திரிக்கையாளர் ஞாநி கலந்துரையாடலை ஒருங்கிணைப்பு செய்தார், ஒன்றரை மணி நேரம் விறுவிறுப்பாக நடந்த கேள்வி …

வாசகர் கலந்துரையாடல் Read More »

புத்தக கண்காட்சியில்

நேற்றும் இன்றும் புத்தகக் கண்காட்சியில் சுற்றியலைந்து பதினைந்து புத்தகங்களை வாங்கினேன், இந்த முறை அதிகமான கடைகள் இருக்கின்றன, ஆனால் மிக குறைவாகவே அரிய புத்தகங்கள் உள்ளன, புதிது புதிதாக நிறைய மொழிபெயர்ப்பு புத்தகங்களை குவித்திருக்கிறார்கள்,  அதில் பாதிக்கு மேலான புத்தகங்கள் சந்தைக்கு உருவாக்கபட்ட மலினமான சரக்குகள், இரண்டு நாட்களிலும் அதிக கூட்டமில்லை, நாளையில் இருந்து அதிக கூட்டம் வரக்கூடும், இந்த இரண்டு நாட்களில் நான் தேர்வு செய்த முக்கியமான புத்தகங்கள் 1)      ஒக்ககூரா காக்குஜோ எழுதிய ஜப்பானிய …

புத்தக கண்காட்சியில் Read More »

என் பள்ளி

பள்ளி வாழ்க்கை என்பது ஒரு மகிழ்ச்சியான கனவு, அதற்குள் முடிந்துவிட்டதே என்ற ஏக்கத்தைத்  தந்தபடியே இருப்பதே அதன் தனித்துவம், கையால் தலையைச் சுற்றி காதைத் தொட்டுவிட முடிகிறது என்ற ஒரு தகுதி தான் என்னைப் பள்ளியில் சேர்க்க உதவியது, அது தான் அன்றைய காலத்தின் நுழைவுத்தேர்வும் கூட, பொதுவாக சரஸ்வதி பூஜை காலத்தில் தான் புதிய மாணவர் சேர்க்கை நடைபெறும், ஆறு வயதில் அப்படி ஒரு சரஸ்வதி பூஜைக்குப் பிறகு கடையில் ஆரஞ்சு மிட்டாய்கள் வாங்கிக் கொண்டு …

என் பள்ளி Read More »

பசியாறிட்டீங்களா.

ஒரு வார கால மலேசியப் பயணத்திலிருந்து இன்று சென்னை திரும்பினேன், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் சார்பில் நான் நடத்திய மூன்று நாள் சிறுகதைப் பயிலரங்கில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டார்கள், காலை எட்டு மணிக்குத் துவங்கிய பயிலரங்கு இரவு 11 மணிவரை நடைபெற்றது, உற்சாகத்துடன் கூடிப்பேசி விவாதித்தது சிறப்பாக இருந்தது, ஒரு ஆண்டில் தேர்வு செய்யப்பட்ட 20 சிறுகதைகளில் இருந்து சிறந்த  ஒன்றைத் தேர்வு செய்து ஆயிரம் ரிங்கட் பரிசு தருகிறார்கள், அந்த தேர்வுக்குழு தலைவராக …

பசியாறிட்டீங்களா. Read More »

விடுமுறைக் குறிப்புகள்

புத்தக வெளியீடுகள், கண்காட்சி என்று டிசம்பர் மற்றும் ஜனவரி மாதம் பரபரப்பாக ஒடியாடியதில் இருந்து விடுபட்டு சில நாட்களாக கன்யாகுமரி மற்றும் திற்பரப்பு அருவி என்று ஒய்வில் இருந்தேன், எவ்வளவோ முறை கன்யாகுமரிக்கு வந்திருந்த போதும் அது புதியதாகவே இருக்கிறது, அறையின் ஜன்னலைத் திறந்தால் கடல். பின்னிரவில் கடற்கரையில் சுற்றி அலைந்தேன், கடல்காற்றைப் போல உன்னதமானது உலகில் வேறில்லை, கடல் மீது நட்சத்திரங்கள் ஒளிர்கின்றன,  பனியோடு கூடிய இரவு கடலின் நீல மயக்கம் மனதைப் பெரிதும் சாந்தம் …

விடுமுறைக் குறிப்புகள் Read More »