மைனா அலையும் பகல்
கடந்த வாரத்தில் திருச்சுழி, நரிக்குடி, பெருநாழி, கமுதி, மண்டலமாணிக்கம், பார்த்திபனூர். ஆர் எஸ்.மங்கலம், பரமக்குடி, என்று ராமநாதபுர மாவட்டத்தின் உள்ளாகவே சுற்றியலைந்து கொண்டிருந்தேன். பனைமரங்கள், புழுதி பறக்கும் சீரற்ற சாலைகள். சாலையின் இருபுறமும் மண்டி கிடக்கும் வேலிச்செடிகள். உலர்ந்து வெடித்துபோன கண்மாய்கள், கண்ணுக்கு எட்டியவரை நடமாட்டமே இல்லாத அத்துவான வெளி. உலர்ந்தமேகங்கள்.உக்கிரமான சூரியன். வெயில் ததும்பும் கிராமவீதிகள். காலத்தின் முன்னோட்டத்திலிருந்து தன்னை துண்டித்துக் கொண்டுவிட்டதோ எனும்படியாக தனித்து போயிருக்கும் ஊர்கள். தொலைக்காட்சி ஒன்று தான் கிராமங்களின் ஒரே …