சேவற்சண்டை
சேவற்சண்டை எனப்படும் சேவற்போரின் மீது எதற்காக ஆர்வம் வந்தது என்று இன்று வரை எனக்குத் தெரியவில்லை. அதைப் பற்றி ஒரு நாவல் எழுத வேண்டும் என்று ஆசைப்பட்டேன். இன்று வரை அது சாத்தியமாகமலே போகிறது. சிறுவயதில் ஒதுக்குப்புறமான நந்தவனங்களில் சேவற்சண்டை நடப்பதைக் கண்டிருக்கிறேன். சேவலை யார் வளர்ப்பார்கள். எப்படி பழக்குகிறார்கள் என்று கவனித்தில்லை. ஆனால் சண்டை முடியும் வரை நின்று பார்ப்பேன். சண்டைச் சேவல்களைத் தெருவில் மேய விட மாட்டார்கள். அது ஆச்சரியமாக இருக்கும். கல்லூரி முடிந்த …