தொலைத்த ஆடைகள்
அறையில்லாமல் சென்னையில் அலைந்து திரிந்த நாட்களில் நிறைய தொலைத்திருக்கிறேன். சில அறைகளை நான் ஊருக்கு சென்று திரும்பிவருவதற்குள் காலி செய்து போயிருப்பார்கள். அந்த அறையில் வைக்கபட்டிருந்த எனது புத்தகங்கள் உடைகள் பைகள் யாவும் தூக்கி எறியப்பட்டிருக்கும்.அல்லது பழைய பொருட்கள் கடைக்கு போயிருக்க கூடும். அப்படியொரு முறை அறையில் ஒரு பை நிறைய புத்தகங்களும் உடைகளையும் வைத்து விட்டு இரண்டு மாத காலம் ஊருக்கு சென்று இருந்துவிட்டேன். திரும்பி வருவதற்குள் அறையில் ஏதேதோ சம்பவங்கள் நடந்திருக்கின்றன. நண்பர்களாக இருந்தவர்கள் …