புதுக்கோட்டையில்
நவம்பர் 24 சனிக்கிழமை மாலை புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் உரையாற்றுகிறேன்.
நவம்பர் 24 சனிக்கிழமை மாலை புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் உரையாற்றுகிறேன்.
மக்கள் விழிப்புணர்வு மையம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கருத்தரங்கில் கலந்து கொண்டு நேரு கண்ட இந்தியா என்ற தலைப்பில் உரையாற்றுகிறேன். நாள் : நவம்பர் 14 புதன்கிழமை நேரம் : மாலை ஆறுமணி இடம் : மக்கள் விழிப்புணர்வு மையம் 54. ராஜாஜி சாலை துறைமுகம்.
கவிஞர் தேவதச்சனுக்கு இந்த ஆண்டிற்கான கவிக்கோ விருது வழங்கப்படுகிறது. கவிக்கோ அப்துல் ரகுமான் அறக்கட்டளை சார்பில் வழங்கப்படும் இந்த விருது ஒரு லட்சம் ரூபாய் பணமும் பாராட்டு பத்திரமும் கொண்டது. நவீன தமிழ் கவிதையுலகின் நிகரற்ற கவியாக விளங்கும் தேவதச்சனுக்கு இவ் விருது வழங்கப்படுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு என் மனம் நிரம்பிய வாழ்த்துகள். விருது வழங்கும் நிகழ்வு நவம்பர் 9 வெள்ளிக்கிழமை மாலை ஆறு மணிக்கு வேலூர் சத்துவாச்சாரியிலுள்ள சோலை அரங்கத்தில் நடை பெறுகிறது.
சிறந்த சிறுகதை ஆசிரியரும், முன்னோடி நாடக ஆளுமையுமான எழுத்தாளர் ந.முத்துசாமி இன்று சென்னையில் காலமானார். முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக முத்துசாமியோடு நெருங்கிப் பழகியிருக்கிறேன். அற்புதமான மனிதர். அவரது சிரித்த முகமும் அலாதியான குரலும், கைளை வீசிப் பேசும் பாணியும் மிகவும் வசீகரமானது. தமிழ் நவீன நாடகத்திற்கெனத் தனி அடையாளத்தை உருவாக்கியவர் முத்துசாமி. தெருக்கூத்தினைத் தமிழர்களின் அடையாளமாக உயர்த்திப்பிடித்தவர் . கூத்துப்பட்டறை என்ற நவீன நாடக அமைப்பை தோற்றுவித்துச் சிறப்பான நாடகங்களைத் தந்திருக்கிறார். அவரிடம் நடிப்பு பயின்றவர்களே இன்று …
இந்த வாரம் வெளியாகியுள்ள ஆனந்த விகடன் தீபாவளி சிறப்பிதழில் எனது சிறுகதை வெளியாகியுள்ளது. ‘20.10.2018
பெங்களுர் புத்தகத் திருவிழா அக்டோபர் 15 முதல் பேலஸ் கிரவுண்ட் வளாகத்தில் நடைபெறுகிறது. அதில் எனது நூல்கள் யாவும் விற்பனைக்கு கிடைக்கின்றன. கடை எண் L15 மீனாட்சி புக் ஷாப். பேலஸ் கிரவுண்ட். திரிபுரவாசினி கேட். பெங்களுர் தொடர்புக்கு அருணாசலம். 94432 62763 •••
சார்ஜா புத்தகத்திருவிழா குறித்து பத்திரிக்கையாளர் கமால் பாஷா எழுதியுள்ள குறிப்பு ••• ஐக்கிய அரபு அமீரகம் சார்ஜாவில் கடந்த 36 ஆண்டுகளாக பன்னாட்டு புத்தகத்திருவிழா நடைபெற்றுவருகிறது. பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமீரகத்தில் பணிபுரிந்துவருவதால், இந்த புத்தகத்திருவிழா பலனுள்ளதாக இருக்கிறது. இந்த திருவிழாவில் உலகின் பல நாடுகளில் இருந்து, ஆயிரத்திற்கும் மேற்பட்ட மொழிகளில் ஆயிரக்கணக்கான அரங்குகளில் லட்சக்கணக்கான நூல்கள் விற்பனைக்கு வைக்கப்படுகின்றன. இந்தியாவிலிருந்து உருது, ஹிந்தி, மலையாளம், குஜராத்தி உள்ளிட்ட பல மொழி நூல்கள் கிடைக்கின்றன. ஆனால், தமிழ் …
எனது இடக்கை நாவல் ஆங்கிலத்தில் வெளியாகியுள்ளது. THE FINAL SOLITUDE என தலைப்பு வைக்கபட்டுள்ளது. நாவலின் முதல் அத்தியாயத்தின் தலைப்பாக இருந்தது. மொத்த நாவலுக்கும் இந்தத்தனிமை பொருத்தமாக இருக்கும் என அதையே தேர்வு செய்தேன். zero degree publishing இதனை வெளியிட்டிருக்கிறார்கள் விலை ரூ 400. ப்ரீதம் சக்ரவர்த்தி இதனைச் சிறப்பாக மொழியாக்கம் செய்துள்ளார் ஸ்ரீவித்யா சுபாஷ் எடிட் செய்துள்ளார். இவர்கள் அனைவருக்கும் என் அன்பையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் உலகெங்கும் வாழும் எனது வாசகர்கள் இதனைத் …
கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து கவிஞர் ஆசையின் வலைப்பக்கத்திலுள்ள அவரது கவிதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகளை வாசித்து வருகிறேன். (https://writerasai.blogspot.com/2017/06/blog-post.html) அற்புதம். மிகச்சிறந்த கட்டுரைகள். மொழிபெயர்ப்புகள். வியந்து ரசித்து படித்துக் கொண்டிருக்கிறேன். அறிவியல் கட்டுரைகளை இவர் அளவிற்குச் சிறப்பாக யாரும் மொழியாக்கம் செய்திருப்பார்களா எனத்தெரியவில்லை. தி இந்து நாளிதழில் இவரது மொழியாக்க கட்டுரைகள் வெளியான போது வாசித்திருக்கிறேன். ஆனால் அப்போது இவ்வளவு தாக்கம் ஏற்படுத்தவில்லை. இணையத்தில் ஒரு சேர இவற்றை வாசிக்கும் போது ஆசையின் எழுத்துலகின் விரிவையும் வலிமையையும் …
சென்ற ஆண்டு ஷார்ஜா சர்வதேசப் புத்தகத் திருவிழாவிற்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தேன். மாபெரும் புத்தகக் கண்காட்சியது. அதில் தமிழ் புத்தகங்கள் கிடைக்கவில்லை. தமிழ் பதிப்பாளர்கள் எவரும் கலந்து கொள்ளவில்லை என்பதை அறிந்து, அது குறித்து தி இந்து நாளிதழில் விரிவான கட்டுரை ஒன்றை எழுதினேன். அதன் விளைவாக தமிழ் பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கான அமைப்பான பபாசி ஷார்ஜா புத்தகத் திருவிழாவில் கலந்து கொள்வதற்கு முன்வந்தது. ஷார்ஜா புத்தகக் கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்களுக்கும் பபாசிக்கும் இடையில் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்து …