அறிவிப்பு

ஜேகே

இரண்டு ஜேகேயின் புகைப்படங்களை காலையில் பார்த்தேன். இணையத்தில் கிடைத்த புகைப்படங்கள். தாஜ்மகாலின் முன்பாக நிற்கும் ஜெயகாந்தனின் இந்தப் புகைப்படம் மிகவும் வசீகரமாகவுள்ளது. அவரது உடையும் தோரணையும்  பாருங்கள். எழுத்தாளனுக்குத் தமிழ் சமூகத்தில் கௌரவத்தை உருவாக்கித் தந்தவர் ஜேகே. கண்ணதாசனுடன் ஜேகே உள்ள புகைப்படத்தில் கால்மேல் கால் போட்டு அமர்ந்தபடி கையில் சிகரெட் முகத்தில் புன்சிரிப்புமாக ஜேகே அமர்ந்திருக்கும் விதம் அவரது ஆளுமையின் வெளிப்பாடு. காலையில் பெய்து கொண்டிருக்கும் மழையின் ஊடே ஜேகேயைப் பற்றிய நினைவுகள் ததும்புகின்றன.

மதுரை புத்தகத் திருவிழாவில்

புத்தகத் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக மதுரைக்கு வருகிறேன் செப்டம்பர் 7, 8,9 ஆகிய தேதிகளில்  தேசாந்திரி பதிப்பக அரங்கு எண் 61ல் வாசகர்கள் சந்திக்கலாம். தினமும் மாலை 4 : 30 முதல் புத்தகக் கண்காட்சியில் இருப்பேன்.

பிற மொழிகளில்

உப பாண்டவம் நாவல் தற்போது மலையாளத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு வருகிறது. டிசி புக்ஸ் 2019ல் வெளியிடுகிறது யாமம் நாவல் தற்போது தெலுங்கில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. Gillella Balaji மொழிபெயர்த்துள்ளார். அடுத்த மாதம் இந்நாவல் வெளியாகிறது இடக்கை நாவல் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு ஜீரோ டிகிரி பதிப்பகம் மூலம் வெளியாகிறது எஸ்.ராமகிருஷ்ணன் சிறுகதைகள் என்ற தேர்வு செய்யப்பட்ட 25 சிறுகதைகள் ஆங்கிலத்தில் வெளியாகவுள்ளது உறுபசி நாவல் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்ட்டுள்ளது. இது 2019ல்  வெளியாகிறது துணையெழுத்தின் ஆங்கிலப் பதிப்பை  …

பிற மொழிகளில் Read More »

எனது திரைப்படங்கள்

இயக்குனர் லிங்குசாமியின் சண்டக்கோழி 2 திரைப்படத்திற்கு கதை வசனம் எழுதியிருக்கிறேன். அப்படம் அக்டோபரில் வெளியாகவுள்ளது இயக்குனர் வசந்தபாலனின் ஜெயில் திரைப்படத்திற்கு வசனம் எழுதியிருக்கிறேன் இயக்குனர் ஜிஎன்ஆர் குமரவேலன் எனது  கதை ஒன்றை படமாக்குகிறார். அதன் படப்பிடிப்பு அடுத்தவாரம் துவங்கவுள்ளது இயக்குனர் ஜெகன் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்திற்கான திரைக்கதையை எழுதியிருக்கிறேன் எனது யாமம் நாவல் வெப்சீரியஸாக தயாரிக்கபடவுள்ளது. அதற்கான ஆரம்ப பணிகள் நடைபெற்றுவருகின்றன ஒளிப்பதிவாளர் பாலமுருகன் இயக்கவுள்ள படத்திற்கான கதை திரைக்கதை வசனத்தை  எழுதியிருக்கிறேன்.

புத்தகத் திருவிழா

சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவிற்கு சென்றிருந்தேன். ஏற்பாடுகள் சிறப்பாக உள்ளன. ஆனால் பார்வையாளர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு. தேர்ந்த வாசகர்களே வருகிறார்கள்.  புத்தகங்களைத் தேடி வாங்குகிறார்கள். சென்ற ஆண்டு நான் ஷார்ஜா புத்தகத் திருவிழாவிற்கு சென்றிருந்தேன். அங்கே தமிழ் புத்தகங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்பதை அறிந்து அது குறித்து விரிவான கட்டுரை ஒன்றை தி இந்து நாளிதழில் எழுதியிருந்தேன். அந்தக் கோரிக்கையை ஏற்று  இந்த ஆண்டு பபாசியில் இருந்து ஷார்ஜா புத்தகத் திருவிழாவில் அரங்கு …

புத்தகத் திருவிழா Read More »

மன்னிக்கவும்

அறிவித்திருந்த படி இன்று மாலை ராயப்பேட்டை புத்தகத் திருவிழாவிற்கு வர முடியாதபடி அவசர வேலை. இப்போது தான் வீடு திரும்பினேன் வந்து காத்திருந்த வாசகர்கள் அனைவரிடமும்  மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நாளை மதுரை செல்கிறேன் திங்கள் கிழமை வந்துவிடுவேன். அவசியம் திங்கள் மாலை புத்தகத் திருவிழாவிற்கு வருவேன். •• இரவு 9.05 18.08.2018

ராயப்பேட்டை புத்தகத் திருவிழா

ராயப்பேட்டை ஒய்எம்சிஏ அரங்கில் நடைபெறும் 4வது சென்னை புத்தகத் திருவிழாவில் தேசாந்திரி  பதிப்பகம் அரங்கு அமைத்துள்ளது கடை எண் 117. நாளை சனிக்கிழமை 18 மாலை 4 :30 முதல் இரவு 8:30 வரை தேசாந்திரி அரங்கில் என்னைச் சந்திக்கலாம் திங்கள்கிழமை முதல் ஞாயிறுவரை மாலை நேரத்தில் தேசாந்திரி பதிப்பகம் அரங்கில் இருப்பேன். விருப்பமான  வாசகர்கள் சந்திக்கலாம். ••

ஈரோடு – வாசகர் சந்திப்பு

புத்தகத் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக ஆகஸ்ட் 8, புதன்கிழமை ஈரோடு வருகிறேன். அன்று மாலை புத்தகக் கண்காட்சியினுள் தேசாந்திரி பதிப்பகம் ஸ்டால் எண் 207ல் வாசகர்களைச் சந்திக்கிறேன். விருப்பமான நண்பர்கள், வாசகர்கள் சந்திக்கலாம். தொடர்புக்கு ஈரோடு கிருஷ்ணன் 9865916970

தர்மபுரியில்

தர்மபுரியில் நடைபெறவுள்ள புத்தகக் கண்காட்சியில்  ஆகஸ்ட் 7  செவ்வாய்கிழமை மாலை ஆறுமணிக்கு உரையாற்றுகிறேன்.