நண்பரும் தமிழின் சிறந்த எழுத்தாளருமான பாவண்ணனைக் கொண்டாடும் விதமாக மே 26 சனிக்கிழமை முழுநாள் கருத்தரங்கம் சென்னை கவிக்கோ மன்றத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் பாவண்ணன் சிறுகதைகள். நாவல்கள், மொழிபெயர்ப்புகள் குறித்து விரிவான உரைகள் இடம்பெறவுள்ளன.
நிகழ்வை அமெரிக்காவைச் சேர்ந்த p.k சிவக்குமார், மதுரை வெற்றிவேல், பெங்களுர் மகாலிங்கம் போன்ற நண்பர்கள் ஒருங்கிணைந்து நடத்துகிறார்கள்.
பாவண்ணனின் சிறுகதைகள் தனித்துவமிக்கவை. அவரது சிறுகதை தொகுப்பு சுஜாதா விருது பெற்றபோது அது குறித்து விரிவாக நான் உரையாற்றியிருக்கிறேன்.
எனது இல்லத் திருமணம் ஒன்றின் பொருட்டு திருநெல்வேலி செல்ல இருப்பதால் நிகழ்வில் கலந்து கொள்ள இயலவில்லை.
இலக்கிய வாசகர்கள். நண்பர்கள் அவசியம் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்

